சென்னையில் மட்டும் இதுவரை 1,04,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
COVID-19 TN Today Report: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 5,063 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், 5,035 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். எஞ்சியவர்கள் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 2,68,285 ஆக அதிகரித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 4,349 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மட்டும் 6,501 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,08,784 ஆக உயர்ந்துள்ளது.
அரசு பரிசோதனை மையங்கள், தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 125 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 28,92,395 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 52,955 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,023 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,04,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, விருதுநகரில் 424 பேருக்கும், திருவள்ளூரில் 358 பேருக்கும், தேனியில் 292 பேருக்கும், கடலூரில் 264 பேருக்கும், செங்கல்பட்டில் 245 பேருக்கும், கோவையில் 228 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 220 பேருக்கும், தூத்துக்குடியில் 189 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,143 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 89,969 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று காஞ்சிபுரத்தில் 559 பேரும், விருதுநகரில் 447 பேரும், செங்கல்பட்டு, தென்காசியில் தலா 386 பேரும், தூத்துக்குடியில் 349 பேரும், திருவள்ளூரில் 319 பேரும், கோவையில் 233 பேரும், தஞ்சாவூரில் 200 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு
சென்னை-1023
விருதுநகர்- 424
திருவள்ளூர்- 358
ராணிப்பேட்டை- 79
தேனி- 292
செங்கல்பட்டு-245
கோவை - 228
காஞ்சிபுரம்-220
தூத்துக்குடி- 189
கடலூர்- 264
வேலூர் - 160
நெல்லை- 155
க.குறிச்சி- 149
சிவகங்கை- 141
தி.மலை - 132
குமரி -128
தஞ்சை- 93
திருச்சி- 83
திருப்பத்தூர்-66
திண்டுக்கல்-64
சேலம்- 62
நாகை- 55
விழுப்புரம் - 50
அரியலூர்- 49
ராமநாதபுரம்- 47
தென்காசி- 45
புதுக்கோட்டை- 41
மதுரை - 40
நாமக்கல்- 39
திருவாரூர்- 31
கரூர்-25
கிருஷ்ணகிரி- 25
ஈரோடு - 20
நீலகிரி - 14
திருப்பூர்- 8
பெரம்பலூர் - 4
தர்மபுரி - 2
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil