Corona Virus Today Reports in Tamil Nadu: தமிழகத்தில் புதிதாக 1,286 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருபத்தி ஐந்தாயிரத்தை தாண்டியது.
Advertisment
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று (ஜூன்.3) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 95 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். மொத்த பாதிப்பு 25,872 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா பரிசோதனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 610 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 14,316 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 25,000 கடந்த கொரோனா பாதிப்பு
மொத்த பாதிப்பு - 25,872
இன்று பாதிப்பு - 1,244
சிகிச்சையில் உள்ளவர்கள் - 11,345
குணமடைந்தவர்கள் - 14,316
உயிரிழப்பு - 208
மொத்த பரிசோதனைகள் - 5,28,534
இன்றைய பரிசோதனைகள் - 14,101
சென்னை கொரோனா நிலவரம்
மொத்த பாதிப்பு - 17,598
இன்று பாதிப்பு - 1,012
சிகிச்சையில் உள்ளவர்கள் - 8,405
குணமடைந்தவர்கள் - 9,034
உயிரிழப்பு - 158
இன்று பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 27 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 15 பேருக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 16,181, பெண்கள் 9,677 மற்றும் 14 திருநங்கைகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil