கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறையும் வேளையில் மழைக்காலம் தொடங்குவதால், சிவிக் பாடி தனது கண்காணிப்பு வளையத்தை இன்னும் பெரிதாக்கியிருக்கிறது. அதாவது கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளில் மேலும் 4 படிகளை சேர்த்துள்ளது.
இவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்!
முன்னதாக காய்ச்சல், இருமல், சளி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை அறிகுறிகளாக கொண்டவர்கள் மட்டுமே தினமும் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இப்போது, தலைவலி, சுவை அல்லது வாசனை உணர்வு இல்லாதவர்கள், உடல் வலி மற்றும் வாந்தி ஆகியவைகளும் கொரோனாவின் அறிகுறிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்படும். இது இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எந்தவொரு மூச்சுத்திணறல் பிரச்சினையும் உள்ள வயதான குடிமக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்தது. “கடந்த ஆறு நாட்களாக கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 1,000-க்கும் குறைவாகவே உள்ளது. ஆனால் இறப்புகளின் எண்ணிக்கை குறையவில்லை. மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை ஆரம்பத்தில் அடையாளம் காண்பதில் மாநகராட்சி தற்போது தீவிரமாக உள்ளது. ஒரு நிறுவனத்தில் ஒரு நபர் நேர்மறையாக சோதனை செய்தால், அங்குள்ள அனைவரையும் சோதிக்கிறோம். கிண்டியில் கடந்த வாரம், ஒரு தனியார் நிறுவனத்தில் சுமார் 115 ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில் 15 பேருக்கு பாஸிட்டிவ்” என ஒரு அதிகாரி கூறினார்.
மொபைல் வேன்களில் பல வாக்-இன் சோதனை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. "தனியார் க்ளினிக்குகளும் எங்கள் சோதனை மையங்களுக்கு அறிகுறி தொற்றுகளை ரெஃபர் செய்ய அனுமதித்துள்ளோம். அனைத்து மண்டலங்களிலும் சுமார் 10 மொபைல் வேன்கள் ரத்த மாதிரிகளை எடுத்து வருகின்றன” என இணை ஆணையர் பி.மதுசூதன் ரெட்டி கூறினார்.
செல்போன் ஆபத்து..! சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க
காய்ச்சல் கண்காணிப்பு தொழிலாளர்கள், அவுட்ரீச் தொழிலாளர்கள் மற்றும் கார்ப்பரேஷன் அதிகாரிகள் என அனைவரிடமும், மேலும் அறிகுறிகளைக் காணுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது தவிர, மிகக் குறைவான ஊழியர்கள், மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி குடியிருப்பாளர்களின் சுகாதார நிலையை அப்டேட் செய்கிறார்கள் என்று அதிகாரிகள் கண்டறிந்தனர். “இப்போது அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவை பதிவேட்டில் தொடர்ந்து பதிவிடப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில் வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டலைப் புதுப்பிக்க வேண்டும். தொழிலாளர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் குடியிருப்பாளர்கள் எப்போதும் கேள்வி கேட்கலாம்” என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.
ஒரு நோயாளிக்கு பதிலளிக்க எடுக்கும் நேரத்தை குறைப்பதற்காக, வார்டு மட்டத்தில் அதிகமான வேன்கள், ஆட்டோக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”