தன்னார்வலர்கள் உதவிக்கு தடை மீதான திமுக மனு : நாளை தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

உணவு வழங்க இரண்டு நாட்களுக்கு முன் அனுமதி வாங்க வேண்டும் என்ற உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்.

By: April 15, 2020, 1:53:47 PM

ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமத்துக்குள்ளாகியுள்ள மக்களுக்கு உணவு, அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை நேரடியாக வழங்க அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து தி.மு.க தொடர்ந்த மனுவிற்கு, நாளை பதில் அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொது முடக்கம் 2.0: எதற்கெல்லாம் அனுமதி? உள்துறை அமைச்சகம் பட்டியல்

இது தொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள விளிம்பு நிலை மக்களுக்கும், தினக்கூலிகளுக்கும் உதவும் வகையில், அவர்களுக்கு உணவு மற்றும் மளிகைப் பொருட்களையும், மருந்துப் பொருட்களையும் வழங்கி வருவதாகவும், அப்போது சமூக விலகல் பின்பற்றப்படுவதாகவும், முககவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தே உதவிகள் வழங்கப்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், ஒரு புறம் வசதியான மக்களுக்கு ஆன் லைன் மூலம் பொருட்கள் கிடைக்க அனுமதியளித்துள்ள அரசு, ஏழை மக்களுக்கு நேரடியாக உணவுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள், மளிகை பொருட்கள், மருந்து பொருட்கள் வழங்கும் தி.மு.க.,வினரை தடை செய்யக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், அதே போல் தன்னார்வலர்கள், பிற அரசியல் கட்சியினரும் உதவி பொருள்களை நேரிடையாக வழங்க கூடாது என தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, மற்றும் பெங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், அரசின் இந்த உத்தரவு மூலம் ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய முறையில் அனைத்து பாதுகாப்பு மற்றும் அரசு துறைகளுக்கு தகவல் தெரிவித்த பிறகு தான் அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் உதவி பொருள்கள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் கூட்டம் சேராமலும், சமூக விலகலை கடைபிடித்தும் தான் உதவிகளை வழங்குகிறோம். 130 கோடி மக்களை அரசு மட்டுமே முழுமையாக அணுக முடியாது. உதவி வேண்டுபவர்களுக்கு தேவையானவற்றை சக குடிமகன்கள் வழங்க வேண்டுமென பிரதமரே அறிவுறுத்தியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். அப்படி சென்று வழங்குவதில் என்ன தவறு. கைது நடவடிக்கையும் காவல்துறை மேற்கொள்கிறார்கள். உணவு வழங்க இரண்டு நாட்களுக்கு முன் அனுமதி வாங்க வேண்டும் என்ற உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும். எனவே அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், மற்ற பேரிடர் அல்லது இயற்கை பேரிடர் போன்ற நிலையை விட மிகவும் ஆபத்தான பேரிடராக கொரோனா தொற்று உள்ளது. ஒரு தன்னார்வலர் உணவு வழங்க சென்றால் அதை வாங்க மக்கள் கூடுகிறார்கள். அதற்கு புகைப்பட ஆதாரங்களும் உள்ளது. அதனால் தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே தான் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் மேலும் மனு தொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.

குணமடையும் நெல்லை : ஒரே நாளில் 13 நபர்கள் கொரோனாவில் இருந்து நலம்!

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் மனு தொடர்பாக நாளை தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். அதே போன்று நிவாரண பொருள்கள் வழங்கும் போது எவ்வாறு செயல்படுத்துவிர்கள் என்பது தொடர்பாக திமுக பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை நாளை தள்ளிவைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Courts News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus political party direct delivery of food items dmk petition

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X