குழந்தைகளின் ஆரோக்கியம் தான் எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று வலியுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பள்ளிகள், டெஸ்டுகள் மற்றும் தேர்வுகளை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், வகுப்புகள் மீண்டும் தொடங்கும் வரை, அஸைன்மெண்ட் மற்றும் வீட்டுப்பாடங்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
தித்திக்கும் கொழுக்கட்டை: ஈஸியான முறைல இப்படி செஞ்சு பாருங்க!
ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கான பொது நல மனுக்களை விசாரித்த நீதிபதி எம். எம். சுந்தரேஷ் மற்றும் நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் வியாழக்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆன்லைன் வகுப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளன. இருப்பினும், ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் போது, ஆபாச இணையதளங்களில் மாணவர்கள் நுழைவதை தடுக்க எந்த விதிமுறைகளும் இல்லை என குற்றம் சாட்டப்பட்டது. மேலும், நாள் முழுவதும் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க முடியாது எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
ஒரே நாளில் 62 சீன செயலிகளுக்கு தடை விதிக்க முடிந்த மத்திய அரசு, ஆபாச இணையதளங்களை தடை விதிக்க நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், மதுக்கடைகளை திறப்பதற்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை போல, ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் தமிழக அரசு எடுக்க தவறி விட்டதாகவும் மதுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதோடு, கிராமங்களிலும் 100-க்கு 44% பேரிடமும் நகரங்களில், 65% பேரிடம் மட்டுமே இணையதள வசதி உள்ளதால், ஆன்லைன் கல்வி அனைவருக்கும் சென்று சேருவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. 4 மணி நேர வகுப்புகள் நடத்தினாலும் அதன் பின் வழங்கப்படும் வீட்டு பாடங்களும் மாணவர்களுக்கு சுமையாக அமைகின்றன. எனவே அரசு பள்ளிகளை போல தனியார் பள்ளிகளும் தொலைக்காட்சி மூலம் நடத்த வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
உலகம் முழுவதும் முடங்கிய ஜிமெயில்: களைகட்டிய மீம்ஸ்கள்
இதனை கேட்ட நீதிபதிகள், தனியார் பள்ளிகளுக்கு இது சாத்தியமில்லை என தெரிவித்து, ஆன்லைன் வகுப்புகளை குறைக்க வேண்டும் எனவும், வீட்டுப்பாடத்தையும், குறைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், மாதாந்திர தேர்வுகளை தள்ளி வைக்கலாம் எனவும் யோசனை தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”