DMK Chief Karunanidhi : திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 27ம் தேதி உடல்நலத்தில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, இரண்டு புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தபோது, எவ்வித புகைப்படங்களும் வெளியிடப்படவில்லை. இதனால் அவரின் மரணம் குறித்து பல சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் பலர் இன்று வரை எழுப்பி வருகின்றனர். ஆனால் அத்தகைய வதந்திகளுக்கெல்லாம் வழிவகுக்காமல், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது திமுக.
கடந்த ஜூலை 29ம் தேதி, துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, அவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் கருணாநிதியை காவேரி மருத்துவமனையில் சென்று நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருவது போலவும், அவரை துணை குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டனர்.
கருணாநிதி சிகிச்சை புகைப்படம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 31 தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து கருணாநிதியை சந்திக்க சென்னை வந்தார். காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை சந்தித்த பின்பு அவரின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தார். இந்த சந்திப்பின் புகைப்படத்தையும், திமுக வெளியிட்டது.
கண் திறந்து பார்க்கும் கருணாநிதி: புதிய புகைப்படம் வெளியீடு! தொண்டர்கள் உற்சாகம்!
இந்த இரண்டு புகைப்படங்கள் மூலமும், கருணாநிதி உடல்நிலை குறித்து வந்த அத்தனை வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இருப்பினும், கடந்த வாரம் 4ம் தேதி கருணாநிதியை மருத்துவமனையில் சந்திக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்தடைந்தார். அப்போது புகைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசு தலைவர் சென்னை வருகை!
மேலும் குடியரசு தலைவர் கருணாநிதியை சந்தித்த நாளிலேயே, அவரின் உடல்நிலையில் தோய்வு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதன் தொடர்ச்சியாக மறுநாளே கருணாநிதியின் உடல்நலம் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும், 24 மணி நேரம் பின்னரே அவரின் உடல்நிலை குறித்து உறுதியாக கூற முடியும் என்று அறிக்கை வெளியானது. இந்த நிகழ்வை ஒப்பிட்டு பார்க்கையில், குடியரசு தலைவர் சந்தித்த நாளில் இருந்தே கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவை சந்திக்க தொடங்கியதாகவும் கூறலாம்.