DMK Chief M Karunanidhi Medical Report: கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக காவேரி மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் அவரின் உடல்நிலை குறித்து தெளிவான நிலவரம் அறிய 24 மணி நேரம் கெடுவையும் விதித்திருக்கிறது.
Karunanidhi Medical Report: கருணாநிதி உடல்நிலை பின்னடைவு:
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கடந்த மாதம் முடிவில் இருந்து பின்னடைவை சந்திக்க தொடங்கியது. சிறுநீர் தொற்று ஏற்பட்டதன் காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் திடீரென அவரின் இரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக, கடந்த மாதம் 27ம் தேதி இரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்.
முதன்முறையாக ஆம்புலன்சில் மருத்துவமனை சென்ற கலைஞர்... கோபாலபுரத்தில் மறக்க முடியாத நள்ளிரவு!
காவேரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் 27ம் தேதி இரவு காவேரி மருத்துவமனை மற்றும் கோபாலபுரம் முன்பு கூடியிருந்த தொண்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து செல்லத் தொடங்கினர்.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில், திடீரென கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், வயதின் காரணமாக அவரின் உடல் உறுப்புகளை சீராக இயங்க வைப்பதில் சவால் ஏற்பட்டுள்ளதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. மேலும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து தெளிவான நிலையை தெரிந்துக்கொள்ள 24 மணி நேரம் அவகாசம் தேவைப்படுகிறது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருணாநிதி உடல்நிலை பின்னடைவு, 24 மணி நேரம் கெடு: காவேரி மருத்துவமனை அறிக்கை
இந்த தகவல் வெளிவரத் தொடங்கியவுடன், காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் ஏராளமானோர் குவியத் தொடங்கினர். அவர்கள் அனைவரும், இந்த அறிக்கை வெளியான நொடியில் இருந்து கண்ணீருடன் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், “எழுந்து வா... தலைவா எழுந்து வா” என்ற கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.
இரவு முதல் குவியத் தொடங்கிய தொண்டர்கள் விடிய விடிய மருத்துவமனை வளாகம் முன்பே காத்திருக்கின்றனர். இதனால் பதற்றமான சூழலை தடுக்க அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.