எமதர்மனுக்காக நான்கு நாட்கள் தீபாவளி கொண்டாடும் நாடு இது தான் !

மலேசியாவில் கொண்டாடப்படும் தீபாவளி ஹரி தீபாவளி என்று அழைக்கப்படுகிறது...

மலேசியாவில் கொண்டாடப்படும் தீபாவளி ஹரி தீபாவளி என்று அழைக்கப்படுகிறது...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தீபாவளி கொண்டாட்டம் 2018

தீபாவளி கொண்டாட்டம் 2018

தீபாவளி கொண்டாட்டம் 2018 : தீபாவளி என்றால் சரவெடி தான்... பட்டாசுகள் வெடித்து, ஆரவாரமாய் நாம் ஒரு பக்கம் தீபாவளி கொண்டாடுவோம். மற்றொரு பக்கம், அமைதியாய் தீபங்கள் ஏற்றி கடவுளை வழிபட்டு இயற்கைக்கு எந்த ஒரு பங்கமும் இல்லாமல் தீபாவளி கொண்டாடுவதும் வழக்கத்தில் இருக்கிறது. எந்தெந்த மாநிலங்களில் எப்படியெல்லாம் தீபாவளி கொண்டாட்டங்கள் இருக்கிறது என்று பார்ப்போம்.

Advertisment

வெளிநாடுகளில் தீபாவளி கொண்டாட்டம் 2018

மலேசியாவில் கொண்டாடப்படும் தீபாவளி ஹரி தீபாவளி என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் தேசிய விடுமுறையாக அறிவித்திருக்கிறது மலேசியா.

திஹார் அல்லது ஸ்வாந்தி என்று நேபாளத்தில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இறப்புக் கடவுளான எமதர்ம ராஜாவிற்காக நான்கு நாட்கள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மக்களின் நீண்ட ஆயுளிற்காக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

Advertisment
Advertisements

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடப்படுவது வழக்கம். இந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் வெகுவிமர்சையாக இவ்விழா கொண்டாடப்படும். விருப்பமிருக்கும் அரசு அதிகாரிகள் அதில் பங்கேற்றுக் கொள்வார்கள்.

தென்னிந்தியா

தென்னிந்தியாவில் ஏனைய பகுதிகளில் தீபாவளி கொண்டாட்டமானது, நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த நாளின் வெளிப்பாடாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து புத்தாடை அணிந்து, தங்களின் உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகள் கொடுத்து விழாவினை சிறப்பிப்பது வழக்கம்.

மேலும் படிக்க : தீபாவளி என்றால் சிவகாசி பட்டாசுச் சத்தத்தில் தான் தொடங்க வேண்டும்

வட இந்தியா

வட இந்தியாவின் பெரும்பான்மை பகுதிகளில் இந்து வருடப் பிறப்பாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. பெரிய அளவில் வியாபரம் செய்பவர்கள், தங்களின் அக்கௌண்ட்டிங் வருடத்தை இந்நாளில் இருந்து தான் தொடங்குவார்கள்.

இருள் விலகி ஒளியைத் தரும் நாள்

தீபாவளி அல்லது தீவாளி என்பது வாழ்வின் இருளை அகற்ற வந்த ஒளியின் வெளிப்பாடு மற்றும் கொண்டாட்டாத்திற்கான அடையாளமாக கருதப்படுகிறது. இந்நாளில் இந்து கடவுளான லட்சுமிக்கு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.

மேலும் படிக்க : தீபாவளி லேகியம் என்றால் என்ன ? 

Diwali

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: