Fani cyclone chennai weather: வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புயல் உருவாக இருப்பதால் தமிழக மாவட்டங்களில் எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
Cyclone Fani in Chennai: நெருங்கும் ஃபனி புயல்!
புதுச்சேரியிலும், 200 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நமச்சிவாயம், அவசர கால உதவிக்கு 1077 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு புயல் தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம் என்றார்.
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
Live Blog
chennai weather today: கோடை வெயில் கொளுத்திவரும் நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது இன்று வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தொடர்ந்து வலுவடைந்து கொண்டே செல்கிறது. இந்த தாழ்வு மண்டலம் இன்னும் 24 மணி நேரத்தில் புயலாக மாறும்.
புயல் குறித்த தகவல்களை ஆங்கிலத்தில் படிக்க.Weather updates
'ஆம்.. இந்திய வானிலை ஆய்வு மையம் சொன்னது உண்மை தான்....'
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், "இன்றைய(ஏப்.27) ஃபனி புயலின் நகர்வின் படி, எந்தெந்த மாவட்டத்தில் மழை பெய்யும், எவ்வளவு மழை பெய்யும் என்பது குறித்து எதுவும் கணிக்க முடியாது. நாளை(ஏப்.28) தான் இதுகுறித்த விவரங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்" என தெரிவித்து இருக்கிறார்.
ஃபனி புயல் குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் பேட்டி முழு விபரம்.
உருவானது ஃபனி புயல்! அடுத்த 2 நாட்கள் தமிழகத்தில் என்ன நடக்கும்?
ஃபனி புயல் காரணமாக சென்னைக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா என்பது புயல் கரையை கடந்த 72 மணி நேரத்தில் தெரிந்து விடும்.
Rain possibility only if cyclone comes close to 150 kms from coast.We will know only after 72 hours how close it is coming.
— Chennai Weather (@chennaiweather) 27 April 2019
Depression over East EIO & adjoining SE BoB intensified into a deep depression near latitude 4.5°N and longitude 88.0°E, 870 km ESE of Trincomalee (Sri Lanka). It will intensify into a Cyclonic Storm in next 12 hrs and into a Severe Cyclonic Storm during subsequent 24 hours. pic.twitter.com/xaqmMrxZ1e
— India Met. Dept. (@Indiametdept) 27 April 2019
இந்திய வானிலை மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கடலில் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கே 1,210 கிமீ தொலைவில் நிலைக் கொண்டுள்ளது. இது 20.கிமீ வேகத்தில் நகர்ந்து 12 மணி நேரத்தில் புயலாக மாறும். புயலாக மாறி வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடற்கரையை நெருங்கும் “: என்று கூறப்பட்டுள்ளது.
புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை செயலாளர்கள் கூட்டம், சென்னையில் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால், கடலுக்கு சென்ற மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தினார்.
தற்போது தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் தக்கலை, திங்கள் சந்தை, மார்த்தாண்டம், குமரக்கோவில் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கபட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights