அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா மகள் தோல்வி – அதிமுகவினர் அதிர்ச்சி

TN Local Body Election Result Updates: ராமநாதபுரம் மண்டபம் ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகள் தோல்வியடைந்தது அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் 2-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் முன்னாள் அமைச்சரும், அதிமுக…

By: January 2, 2020, 10:59:25 PM

TN Local Body Election Result Updates: ராமநாதபுரம் மண்டபம் ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகள் தோல்வியடைந்தது அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் 2-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் முன்னாள் அமைச்சரும், அதிமுக சிறுபான்மை பிரிவுச் செயலாளருமான அ.அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதபியா அதிமுக சார்பில் போட்டியிட்டார்.

Local body election live updates: உள்ளாட்சி தேர்தல் குறித்த லைவ் அப்டேட்ஸ் காண இங்கே க்ளிக் செய்யவும்

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலெட்சுமி 1,343 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான வாக்குகள் 4,505. இதில் ராவியத்துல் அதபியா 1,062 வாக்குகளும், சுப்புலெட்சுமி 2,405 வாக்குகளும் பெற்றனர்.

ராவியத்துல் அதபியா டெபாசிட் இழந்துள்ளார். வெற்றி பெற்ற சுப்புலெட்சுமி மண்டபம் ஒன்றிய திமுக செயலாளர் ஜீவானந்தத்தின் மனைவியாவார்.

21 வயது மாணவி; 73 வயது மூதாட்டி; துப்புரவு ஊழியர் – உள்ளாட்சி தேர்தலில் வென்ற சிங்கப் பெண்கள்

அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலி மண்டபம் ஒன்றிய உறுப்பினர் 6-வது வார்டில் போட்டியிட்டுள்ளார். இந்த வார்டில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Former minister anwar raja daughter lose local body election

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X