கலைஞர் கருணாநிதியின் கோபாலபுர இல்லம் : கோபாலபுரத்தின் ஒருமித்த அடையாளம் தான் கருணாநிதியின் இல்லம். இந்த இல்லத்திற்கு என தனி மரியாதையும் வரலாறும் உண்டு. கருணாநிதி சென்னையில் வாழத் தொடங்கிய காலத்தில் ஆரம்பத்தில் தியாகராய நகர் மற்றும் ராயப்பேட்டையில் இருக்கும் பாலாஜி நகரிலும் வசித்து வந்தார்.
கோபாலபுர இல்லம் ஒரு சிறு அறிமுகம்
1955ல் கோபாலபுரத்தில் வசித்து வந்த சரபேஷ்வர ஐயர் அவர்களிடம் இருந்து ஒரு வீட்டினை விலைக்கு வாங்கினார். புதையல் என்ற படத்தில் வேலை பார்த்து அதில் கிடைக்கப்பட்ட பணத்தினை வைத்து இவ்வீட்டினை வாங்கினார் கருணாநிதி.
1968ல் அவ்வீட்டினை தன்னுடைய மகன்கள் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், மற்றும் மு.க. தமிழரசு அவர்களின் பெயர்களில் பதிவு செய்து வைத்தார் கலைஞர்.
மக்கள் பணியில் கலைஞர் இல்லம்
1967ல் திமுக ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து அல்லும் பகலும் தமிழக மக்களின் நலப்பணிகளுக்காக மூடாத கதவுகளை உடையது கோபாலபுரத்தில் இருக்கும் கலைஞரின் இல்லம் என்றால் அது மிகையல்ல.
தமிழகத்திற்கு வரும் பெரும் அரசியல் தலைவர்கள் யாரும் கோபாலபுர இல்லத்திற்கு வருகை தராமல் ஒரு போதும் சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு தமிழகம் வந்த நரேந்திர மோடியும் கூட கோபாலபுர இல்லம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாத்திகவாதியான கருணாநிதியின் இல்லத்திற்கு புட்டபர்தி சாய்பாபா கூட 2007ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒருமுறை வருகை தந்திருக்கிறார்.
மக்களின் பணி செய்யும் இந்த வீடு எப்போதும் மக்களால் அணுகும் படிதான் இருக்கும். கோபாலபுர இல்லத்திற்கு எப்போது வேண்டுமானாலும் அழைப்பு விடுத்து கட்சி தொடர்பான கேள்விகள் மற்றும் தகவல்கள் பெற இயலும்.
அலைபேசியை எடுத்தவுடன் “வணக்கம் தலைவர் இல்லம்” என்று யாராவது மக்களின் கேள்விக்கு பதில் சொல்ல காத்திருப்பார்கள்.
கருணாநிதி தமிழக மக்களுக்காக அறிவித்த 94 திட்டங்கள் ஒரு பார்வை
கோபாலபுரம் இல்லம் யாருக்கு?
கோபாலபுரத்தில் 2010ஆம் ஆண்டு தன்னுடைய 86வது வயது பிறந்த நாளிற்கு முதல் நாள் உயில் ஒன்றை எழுதியிருக்கிறார் கருணாநிதி. அதன்படி கலைஞர் மற்றும் கலைஞரின் மனைவி தயாளு அம்மாவின் வாழ்நாளுக்குப் பின்னால் கோபாலபுர இல்லம் ஏழை எளியவர்களுக்கு இலவச மருத்துவ வசதியினை தரும் மருத்துவமனையாக செயல்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த உயிலின்படி தயாளு அம்மாவின் வாழ்நாளிற்கு பிறகு அன்னை அஞ்சுகம் என்ற தொண்டு நிறுவனத்திற்கு கோபாலபுர இல்லம் ஒப்படைக்கப்படும்.
கலைஞர் திரைத்துறைக்கு அர்பணித்த அற்புதமான படைப்புகள் பற்றி அறிந்து கொள்ள