சென்னை பெருநகர மாநகராட்சி மாநகரத்தின் கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட இடங்களின் புதிய ஸ்டாடர்ஜியை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பாக, அதிக பாதிப்புகளைக் கொண்டுள்ள ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்கள் அடங்கும்.
ஒரே ஒரு மாணவிக்காக இயக்கப்பட்ட படகு ! கேரள அரசுக்கு குவியும் பாராட்டுகள்
அதிக எண்ணிக்கையிலான தொற்றுகளைக் கொண்ட இந்த மண்டலங்களில் உள்ள வார்டுகளில், முந்தைய கட்டுப்பாடு விதிகளுடன் இன்னும் சில பகுதிகள் சேர்க்கப்பட்டன. இந்தப் பகுதிகளில் அதிகமான இளைஞர்கள் மற்றும் ஆற்றல்மிக்க போலீஸ் கான்ஸ்டபிள்கள் நிறுத்தப்படுவார்கள், என சென்னை மாநகர கமிஷ்னர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது இரண்டு வாரங்களில் இந்த இரண்டு மண்டலங்களிலும் தொற்றுகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கொண்டுவரும் என்றும் அவர் கூறினார். "இது தொற்று வெளியே பரவாமல் இருப்பதை உறுதி செய்யும், எனவே நிலைமையைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் முடியும்" என்றும் பிரகாஷ் கூறினார்.
உதாரணமாக, நகரத்தில் 30 வார்டுகள் (200 வார்டுகளில்) உள்ளன. அதில் 50% வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மே 20 அன்று சென்னை மாநகரம் கடைசியாக வழங்கிய விவரங்களில், முதல் 30 இடங்களில் இந்த இரண்டு மண்டலங்களிலிருந்தும் குறைந்தது 10-15 வார்டுகள் இருந்தன.
வார்டு 173-ல் 12,000 குடும்பங்கள் உள்ளன. மேலும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட குடிசைப்பகுதியும் உள்ளது. வார்டு 113 மற்றும் 114 ஆகியவை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள நக்கீரன் நகர் மற்றும் சேப்பாக்கத்தில், பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இளையராஜா பிறந்தநாள்: மனநலனை சரி செய்யும் தமிழ் சமூகத்தின் சைக்கியாட்ரிஸ்ட்!
இந்த ஹாட்ஸ்பாட் பகுதி மக்களில் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளை 10 நாட்களுக்கு பள்ளிகள் மற்றும் சமூக அரங்குகள் போன்ற பாதுகாப்பான தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு மாற்றுவதாகும். "இது சங்கிலியை உடைக்க எங்களுக்கு உதவும்" என்று பிரகாஷ் கூறினார், நல்ல கழிப்பறை வசதிகள் மற்றும் உணவு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”