/indian-express-tamil/media/media_files/2025/10/18/diwali-2025-10-18-16-51-07.jpg)
Diwali 2025 Shubh Mahurat and Puja rituals
2025 Diwali wishes and celebrations: நாடு முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் நள்ளிரவு 12 மணிக்கே பட்டாசுகளை வெடித்து இந்த விழாவை வரவேற்றனர்.
அனைவருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தமிழகத்தில், நரகாசுரனை கிருஷ்ணர் சத்தியபாமாவுடன் இணைந்து வதம் செய்த நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஸ்கந்த புராணத்தின்படி, 21 நாட்கள் கேதாரகவுரி விரதம் மேற்கொண்ட பிறகு, சிவன் சக்தியைத் தனது பாகமாக ஏற்று 'உமையொரு பாகனாக' நின்ற நாளே தீபாவளி ஆகும்.
தீபாவளி அதிகாலையில் மக்கள் எண்ணெய்க் குளியல் மேற்கொள்கின்றனர். அன்று வெந்நீரில் கங்கையும் குளிக்கும் எண்ணெயில் லட்சுமி தேவியும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. இதனால் இந்த நீராடலை 'கங்கா ஸ்நானம்' என்று குறிப்பிடுகின்றனர். செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியையும், செல்வத்தின் காவலரான குபேரனையும் வணங்குவது இந்தப் பண்டிகையின் முக்கிய அம்சமாகும்.
தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று குதூகலமாகக் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, குடும்ப உறவுகளையும் மகிழ்ச்சியையும் பறைசாற்றுகிறது. இருள் நீங்கி ஒளி பிறப்பதன் குறியீடாகப் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இனிப்புகளைப் பரிமாறிக்கொள்வது உறவுகளையும் நட்பையும் வலுப்படுத்துவதைக் குறிக்கிறது.
- Oct 20, 2025 20:23 IST
மதுரையில் மக்கள் வானவெடிகள் கொளுத்தி தீபாவளி கொண்டாட்டம்
மதுரையில் மத்தாப்புகள், புஸ்வானம், வாணவெடிகள் கொளுத்தி மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர். வானவெடிகளால், மதுரை முழுவதும் வாணம் வண்ணமயமாக மாறியது.
- Oct 20, 2025 20:20 IST
ராகுல் காந்நி பேக்கரியில் ஸ்வீட் செய்து தீபாவளி கொண்டாட்டம்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள பழமையான பேக்கரியில் லட்டு, ஜாங்கிரி செய்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார்.
- Oct 20, 2025 19:39 IST
தமிழ்நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி பண்டிகை நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் மக்கள் சங்கு சக்கரம், புஸ்வானம், கம்பி மத்தாப்பு, ராக்கெட், வானவேடிக்கை, சரவெடி, பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடினர். - Oct 20, 2025 19:37 IST
வங்கதேச எல்லையில் ராணுவத்தினர் தீபாவளி கொண்டாட்டம்
மேற்கு வங்க மாநிலத்தில், வங்கதேசத்தை ஒட்டிய எல்லைப்பகுதியான தக்ஷின் தினாஜ்பூரில் இந்திய ராணுவத்தினர் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். - Oct 20, 2025 19:11 IST
ரசிகர்களுகு தீபாவளி பரிசு: அடுத்த சிம்பொனியை எழுதுவதற்கு முடிவு செய்துள்ளேன்- இசைஞானி இளையராஜா
இசை ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்த இசைஞானி இளையராஜா, “எனது அம்மாவின் நினைவு தினத்தை முடித்துவிட்டு, அடுத்த சிம்பொனிகளை எழுதுவதற்கு முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
- Oct 20, 2025 16:18 IST
குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய விஷால் - தன்ஷிகா
ஏழை, எளிய குழந்தைகளுக்கு புத்தாடை, பெண்களுக்கு புடவை வழங்கியும் அவர்களுடன் அறுசுவை உணவு உண்டு தீபாவளியை கொண்டாடிட நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா ஜோடி
- Oct 20, 2025 16:16 IST
தெய்வானையிடம் தீபாவளி ஆசி
திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய புத்தாடை அணிந்து குவிந்த பக்தர்கள். தொடர்ந்து கோவில் யானை தெய்வானையிடம் ஆசி பெற்று, கோவில் கடற்கரை பகுதியில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்
- Oct 20, 2025 15:42 IST
41 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
“தீபாவளி - தமிழகத்தில் 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர் கண்காணிக்க வேண்டும். தீபாவளி - பட்டாசு வெடிக்கும்போது காயம் ஏற்பட்டு 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.41 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
- Oct 20, 2025 12:51 IST
மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவத்தை பலப்படுத்தும் - தமிழிசை தீபாவளி வாழ்த்து
தீபாவளி திருநாள் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் சகோரத்துவத்தையும் பலப்படுத்துகிறது. சாதி மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துகிறேன் என தமிழிசை சௌந்திரராஜன் பதிவிட்டுள்ளார்.
இந்திய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய “தீபாவளி“ திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) October 19, 2025
தீபாவளி திருநாள் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் சகோரத்துவத்தையும் பலப்படுத்துகிறது. சாதி மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும்… pic.twitter.com/aOBwV9MBYf - Oct 20, 2025 11:27 IST
தித்திக்கும் தீபாவளி திருநாளில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! - அண்ணாமலை
எத்திக்கும் இருள் அகன்று , ஒளி பெருகித் தித்திக்கும் தீபாவளி திருநாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நன்னாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகி நிறந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.அனைவரும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- Oct 20, 2025 11:22 IST
துணை ஜனாதிபதி, ராகுல்காந்தி தீபாவளி வாழ்த்து
துணை ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள். மகிழ்ச்சியின் தீபங்களால் இந்தியா ஒளிரட்டும், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அன்பின் ஒளி ஒவ்வொரு வீட்டிலும் பரவட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
- Oct 20, 2025 10:52 IST
தீபாவளி: ஜனாதிபதி உள்பட தலைவர்கள் வாழ்த்து
ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள இந்தியர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் செழுமை வளர்ச்சி, நல்ல ஆரோக்கியம் கிடைக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
- Oct 20, 2025 10:15 IST
ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து
தனது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தின் முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் இருகரம் கூப்பியும், கை அசைத்தும் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர். இதுதொடர்பான புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- Oct 20, 2025 09:42 IST
தீபாவளி பண்டிகை - கமல் வாழ்த்து
ஒளிக்கீற்றால் இருள் கிழிக்கும் முயற்சித்திருநாள்; வெளிச்சத்தால் இணைந்திருக்கும் மகிழ்வுப்பெருநாள் தீதகன்று நன்மைகள் வாழ்வில் பெருக, தீபாவளி எல்லோர்க்கும் நலங்கள் தருக என மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- Oct 20, 2025 09:41 IST
தீபாவளி கொண்டாடிய தூய்மை பணியாளர்கள்
சென்னை மாதவரம் வடபெரும்பாக்கத்தில் பட்டாசு வெடித்து தூய்மை பணியாளர்கள் தீபாவளி கொண்டாடினர். அவர்களுக்கு 1 கிலோ கோழிக்கறி, புடவை, இனிப்பு வழங்கி திமுக நிர்வாகிகள் மகிழ்ந்தனர்.
- Oct 20, 2025 09:40 IST
சூர்யாவின் கருப்பு பட சிறப்பு போஸ்டர் வெளியீடு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ’கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் காட் மோட் பாடலும் இன்று வெளியாகவுள்ளது.
- Oct 20, 2025 09:37 IST
தீபாவளி- ரூ.7,000 கோடி வரை பட்டாசு விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.7000 கோடி வரை பட்டாசு விற்பனையானது. கடந்தாண்டு ரூ.6000 கோடிக்கு பட்டாசு விற்பனை நடந்த நிலையில் இந்தாண்டு ரூ.1000 கோடிக்கு கூடுதல் விற்பனையானது.
- Oct 20, 2025 09:09 IST
அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, இன்பம் பொங்கட்டும் - செங்கோட்டையன்
அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீபத் திருநாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, இன்பம் பொங்கட்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- Oct 20, 2025 08:55 IST
தீபாவளி கொண்டாட்டம் - இறைச்சி கடைகளில் குவியும் மக்கள்
புரட்டாசி முடிவு மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. மீன், ஆட்டு, கோழி இறைச்சிகளை வாங்க மக்கள் ஆர்வமாக காலையிலேயே கடைகளில் குவிந்தனர். ஆட்டு இறைச்சி ஒரு கிலோ ரூ.850 முதல் ரூ.950 வரை விற்பனை செய்யப்படுகிறது.
- Oct 20, 2025 08:18 IST
திரௌபதி முர்மு தீபாவளி வாழ்த்து
தீபாவளி பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அனைவரும் இந்தப் பண்டிகையை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் கொண்டாடுமாறு அவர் வலியுறுத்தினார்.
- Oct 20, 2025 08:16 IST
தீபாவளி விபத்து - ஆம்புலன்ஸ்கள் தயார்
தீபாவளியை முன்னிட்டு அரசு உத்தரவின்படி, காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்படி பட்டாசு வெடிக்கும்போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. அதில் ஒரு அங்கமாக தமிழ்நாடு முழுவதும் 1,353 அவசர கால ஊர்தியான 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
- Oct 20, 2025 08:14 IST
தீபாவளி பண்டிகை - சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை
தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து அரசுப் பேருந்துகளில் 8 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 15,429 அரசுப் பேருந்துகளில் 7,94,990 பேர் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
- Oct 20, 2025 08:13 IST
பாமக தலைவர் அன்புமணி
இருள் இன்றுடன் விலகட்டும், மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும்! இருளை விலக்கி, ஒளி கொடுக்க வரும் தீபஒளித் திருநாளை தமிழகத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.!
- Oct 20, 2025 08:12 IST
அமமுக தினகரன் வாழ்த்து
தீமையை ஒழித்து நீதியின் வெற்றியை நிரூபிக்கும் இந்த புனிதமான தீபாவளி பண்டிகையில் நாம் ஏற்றி வைக்கும் ஒளி அறியாமையை அகற்றி அதைக் கொண்டு வரட்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன்.
- Oct 20, 2025 08:12 IST
இ.பி.எஸ் வாழ்த்து
மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும்; வேற்றுமை அகன்று, ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
- Oct 20, 2025 08:11 IST
தீபாவளி பண்டிகை - ஆளுநர் ரவி வாழ்த்து
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தீபாவளியன்று, இருள் மீதான ஒளியின் வெற்றி, தீமை மீதான நன்மையின் வெற்றி, அறியாமை மீதான ஞானத்தின் வெற்றியை கொண்டாடுகிறோம். இந்நாளில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வளத்தை கடவுள் நல்கி அன்பு, கருணையால் வாழ்க்கையை நிரப்பட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியான துடிப்பான மற்றும் பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துகள்.
- Oct 20, 2025 08:10 IST
தீபாவளி அன்று மழை பெய்யுமா?
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களிலும், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. வரும் 23-ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
- Oct 20, 2025 08:00 IST
தீபாவளி விடுமுறை
பெரும்பாலான மாநிலங்களில் அக்டோபர் 20 அன்றும், சில மாநிலங்களில் 21 அன்றும் என பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வங்கிகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 20, 2025 07:58 IST
தீபாவளி விற்பனை
சென்னையில் தி.நகர், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் துணிக்கடை, பட்டாசு மற்றும் இனிப்பு கடைகளில் கூட்டம் அலைமோதி உள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு விற்பனை நடந்துள்ளது. இதே கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 3 மணி நேரத்தில் ரூ.5 கோடிக்கு ஆடு விற்பனை நடந்திருக்கிறது. தீபாவளி பண்டிகை மற்றும் இன்று ஐப்பசி மாத முதல் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டும், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகை பூ கிலோ ரூபாய் 2500-க்கும், பிச்சிப்பூ ரூபாய் 1750-க்கும் விற்பனையாகியுள்ளன.
- Oct 20, 2025 07:56 IST
நள்ளிரவு பட்டாசு வெடித்து தீபாவளியை வரவேற்ற மக்கள்
நாடு முழுவதும் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நள்ளிரவு 12 மணியளவில் பட்டாசுகளை வெடித்து மக்கள் தீபாவளியை வரவேற்றனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் என பல நகரங்களிலும் நள்ளிரவு வெடி வெடித்து தீபாவளியை மக்கள் வரவேற்றனர்.
- Oct 20, 2025 07:43 IST
நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.“மை கவர்ன்மென்ட்” என்னும் அரசு இணைய தளத்தில் பதிவு செய்திருந்த பயனர்களுக்கு இ-மெயில் மூலமாக அவர் வாழ்த்து தெரிவித்தார். இதில் அவர், “நாட்டு மக்களே, மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டி எழுப்பிய பிறகு வரும் 2-வது தீபாவளி. ராமர் அநீதியை எதிர்த்து போராடும் பலத்தை தருகிறார். ஆபரேஷன் சிந்தூர் இதற்கு தலை சிறந்த உதாரணம். நாடு முழுவதும் ஒளி தீபங்கள் மலர செய்து உணர்வு எனும் விளக்குகளை ஏற்றுவோம்” என வந்தது தெரிவித்துள்ளார். தமிழ், ஆங்கிலம் உள்பட 18 மொழிகளில் மொழி பெயர்க்கும் வசதியுடன் இந்த வாழ்த்து செய்தி அனுப்பப்பட்டிருந்தது. மேலும் எக்ஸ் சமூக வலைத்தளத்திலும் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தார்.
- Oct 20, 2025 07:35 IST
தீபாவளி திருநாள்
நாடு முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் நள்ளிரவு 12 மணிக்கே பட்டாசுகளை வெடித்து இந்த விழாவை வரவேற்றனர். தமிழகத்தில், நரகாசுரனை கிருஷ்ணர் சத்தியபாமாவுடன் இணைந்து வதம் செய்த நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி அதிகாலையில் மக்கள் எண்ணெய்க் குளியல் மேற்கொள்கின்றனர். அன்று வெந்நீரில் கங்கையும் குளிக்கும் எண்ணெயில் லட்சுமி தேவியும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று குதூகலமாகக் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, குடும்ப உறவுகளையும் மகிழ்ச்சியையும் பறைசாற்றுகிறது. இருள் நீங்கி ஒளி பிறப்பதன் குறியீடாகப் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இனிப்புகளைப் பரிமாறிக்கொள்வது உறவுகளையும் நட்பையும் வலுப்படுத்துவதைக் குறிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.