Headline News in Tamil : தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் அனைத்து முக்கியமான செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள் இந்த இணைப்பில்!
நேற்றைய நிகழ்வுகள் ஒரு பார்வை
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் இருபாலருக்குமான ஆடை குறித்த அறிவிப்பினை வெளியிட்டது தமிழக அரசு
மத்திய அரசின் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கைக்கான திட்ட வரைவுகளை கஸ்தூரி ரங்கன் அடங்கிய 9 பேர் கொண்ட குழு சமர்பித்தது
03/06/2019 - மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி விழாக்கோலம் பூண்டது அண்ணா அறிவாலயம். ஒய்.எம்.சி.ஏ (நந்தனம்) மைதானத்தில் நாளை பொதுக்கூட்டம்.
ஐந்தாண்டுகளுக்குள் ராமர் கோவிலை அயோத்தியில் எழுப்பவில்லை என்றால் பாஜக மீது வழக்கு தொடுப்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேச பேச்சு
Live Blog
இன்றைய வானிலை, தலைவர்களின் சந்திப்பு, முக்கிய நிகழ்வுகள், முக்கிய அறிவிப்புகள் ஆகியவற்றை அறிந்திட
சேலம் மாநகர், ஓமலூர், காடையாம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி#Salem | #HeavyRain pic.twitter.com/5j9Wyg0QLv
— Thanthi TV (@ThanthiTV) 2 June 2019
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தேமுதிக சார்பில் இஃப்தார் விருந்து; தேமுதிக தலைவர் விஜயகாந்தும் இஃப்தார் விருந்தில் பங்கேற்றுள்ளார்
அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, தமிழ் மாநில லீக்கை சேர்ந்த ஷேக் தாவூத் உள்ளிட்டோர் பங்கேற்பு #Iftar #DMDK pic.twitter.com/tHe45PvoLy
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 2 June 2019
எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை
அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும் ஊக்குவிக்கவும் அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்கும்
- கல்விக் கொள்கை வரைவு அறிக்கை பற்றி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தமிழில் ட்வீட்
மத்திய அரசு மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே கல்வி குழுவின் வரைவை முன் எடுத்து செல்லும். அரசு அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும் ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக்கும். எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை./1
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) 2 June 2019
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா, டுவிட்டரிலிருந்து வெளியேறியுள்ளார். மத்திய நிதியமைச்சராக பதவியேற்ற நிர்மலா சீத்தாராமனுக்கு திவ்யா, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அந்த பதிவை திவ்யா நீக்கியிருந்தார். இதுகுறித்த விளக்கம் திவ்யா தரப்பிலிருந்து தெரிவிக்கப்படாத நிலையில், அவரே டுவிட்டரிலிருந்து வெளியேறியுள்ளார்.
இளையராஜாவின் 76வது பிறந்த தினத்தை முன்னிட்டு பலரும் தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த அன்பிற்கு நான் எப்படி பதில் சொல்லப் போகின்றேன் என்று கூறியதோடு அல்லாமல் இன்று தன் ரசிகர்களுக்காக முக்கியமான செய்தி ஒன்றை வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனியாக பிரிந்து தனி மாநில அந்தஸ்த்து பெற்ற நாள் இன்று. தெலுங்கானா மக்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றும் அர்பணிப்புகள் குறித்து ட்வீட் செய்த மோடி, இந்நாளில் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பதிவு செய்துள்ளார்.
On Telangana’s Statehood Day, my best wishes to the people of this wonderful state. Telangana is known for its hardworking citizens who are making great contributions to our nation’s development. I pray for the progress of Telangana.
— Narendra Modi (@narendramodi) 2 June 2019
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 25 அரசின் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும், வரும் கல்வியாண்டிற்குள் இந்த பள்ளிகள் அங்கீகாரம் பெறாவிட்டால், அப்பள்ளிகள் மூடப்படும் என்று சென்னை கலெக்டர் எச்சரித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 72 தேர்வு மையங்களில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பணிகளுக்கான தேர்வுகளின் முதல்நிலை தேர்வுகள் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் வேலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இந்த தேர்வுகள் நடைபெறுகின்றனர்.
முதல்தாள் 11 மணி வரையிலும், இரண்டாம் தாள் மதியம் 02.30 முதல் மாலை 04:30 வரையில் நடைபெறும்.
இதில் வெற்றி பெறும் மாணவர்கள் செப்டம்பர் 20ம் தேதி முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
இன்று தன்னுடைய 76வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இசைஞானி இளையராஜா. அவருடைய அரிய புகைப்படங்களை பார்க்க
சமூக செயற்பாட்டாளர் திரு.முகிலன் காணாமல் போய் 100 நாட்களுக்கும் மேலான நிலையில் அவர் காணாமல் போனது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். ஓசூர் மாநிலம் மத்திகிரியில் தன்னுடைய ஜெய்பீம் அமைப்பு மற்றும் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக அம்பேத்கார் அரசியல் பள்ளி, நூலகம் மற்றும் இரவு பாடசாலை துவக்கவிழாவின் போது இவர் முகிலன் குறித்து கூறியுள்ளார்.
நேற்று கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உலக பால் தினம் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில வனம் வனவிலங்கு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜூ தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு வரும் பாலின் தரம் குறித்து கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் ஒரு லிட்டர் பால் 19 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், கேரளத்தில் 34 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் கூறிய அவர் தமிழகத்தில் இருந்து வரும் பாலின் தரம், அடர்த்தி குறித்து ஆய்வு செய்ய தமிழக - கேரள எல்லையில் மேலும் ஒரு சோதனை சாவடி அமைக்கப்படும் என்று கூறினார்.
மும்மொழிக் கொள்கை குறித்து தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் பாஜகவின் உண்மை முகம் தெரிய துவங்கிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கிவிட்டது. புதிய கல்விக் கொள்கையில் பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே மும்மொழித் திட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள்
— P. Chidambaram (@PChidambaram_IN) 1 June 2019
இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரையை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் ஒரு அங்கமாகவே மும்மொழிக்கொள்கை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் அதனை மத்திய அரசு இன்னும் அது குறித்த முடிவினை எட்டவில்லை என்றும் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.
இந்தி திணிப்பு பொய் பிரச்சாரம் வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்...@BJP4India @BJP4TamilNadu pic.twitter.com/qdwQICJZp3
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) 1 June 2019
நாட்டு மக்களுக்கும், நாம் போற்றும் தலைவருக்கும் நன்றி கூற நாம் நந்தனத்தில் இணைந்திடுவோம் என்று ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
ஜூன் 3 நம் ஊனோடும் உயிரோடும் கலந்திருக்கின்ற தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் என்பது கழகத்தின் திருநாள். தமிழர்களின் பெருநாள்.
நாட்டு மக்களுக்கும், நாம் போற்றும் தலைவருக்கும், நன்றி பாராட்ட நந்தனத்தில் கூடிடுவோம்! pic.twitter.com/N3AzA07Xh0
— M.K.Stalin (@mkstalin) 1 June 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights