dmk adherents called him inamana perasiriyar in endearment
Why DMK adherents called him inamana perasiriyar ? க. அன்பழகன், திமுகவின் பொதுச்செயலாளராக தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை தமிழக மக்களுக்காகவும், தமிழர்களின் தேவைகளுக்காகவும் செலவிட்டர். ஆனாலும் அனைவராலும் செல்லமாக பேராசிரியர் என்று அழைக்கப்பட்டார். அதற்கான காரணம் என்று பலருக்கும் தெரியாது. அண்ணாரின் மறைவை ஒட்டி அவருக்கு செலுத்தும் அஞ்சலியோடு, அவரை குறித்து பலரும் அறியாத தகவல்களையும் நாம் அறிந்து கொள்வோம்.
Advertisment
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த அன்பழகன் 1944ம் ஆண்டு முதல் 1957ம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பா கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். பேராசிரியரியராக இருந்த போதும் அவருடைய வகுப்புகள் அனைத்தும் சொற்பொழிவு வகையிலேயே நடைபெறும். மேலும் சுயமரியாதை மேலோங்கவே வகுப்புகளை மாணவர்களுக்கு எடுத்தார்.
ஆசிரியர் பணியோடு கட்சிப் பணியும் அவர் ஆற்றி வந்ததால், கட்சிப் பணிகளின் போதெல்லாம், அறிஞர் அண்ணா “பேராசிரியர் தம்பி” என்றே அன்பழகனை அழைத்து வந்தார். அதுவே பின்னாளில் திமுகவினரால் அன்பாக பேராசிரியர் என்று அழைக்கப்பட்டார் க. அன்பழகன். அவருடைய உற்ற தோழன் கலைஞர் கருணாநிதியோ இனமான பேராசிரியர் என்றே எப்போதும் பொது நிகழ்ச்சிகளில், மேடைகளில் மேற்கொள்காட்டிப் பேசினார் கலைஞர் கருணாநிதி.
பேராசிரியர் அன்பழகன் தமிழ் பற்றாளராக மட்டும் இல்லாமல் தமிழ் சமூகத்திற்காக பல்வேறு கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றில் சில இங்கே!
அழகுராணி, வாழ்வும் தொண்டும், இன-மொழி வாழ்வுரிமைப் போர், உரிமை வாழ்வு, 1956 தமிழர் திருமணமும் இனமானமும், தமிழ்க்கடல், தமிழினக்காவலர் கலைஞர், தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி, தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார், தொண்டா? துவேஷமா? 1953, வளரும் கிளர்ச்சி, 1953, நீங்களும் பேச்சாளர் ஆகலாம், விவேகானந்தர் - விழைந்த மனிதகுலத் தொண்டு, வகுப்புரிமைப் போராட்டம், 1951, வாழ்க திராவிடம் (ஓர் ஆராய்ச்சி நூல்) உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் பேராசிரியர்.