கோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் – காரைக்காலில் நெகிழ்ச்சி!

புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் முன்னிலையில் இந்நிலத்திற்கான பத்திரத்தை கோவில் கட்ட வழங்கினார் அப்துல்.

By: August 4, 2020, 2:18:55 PM

காரைக்கால் கீழகாசாக்குடி பகுதியில் காஞ்சிபுரம் கோயில்பத்து சாலையோரத்தில் முனீஸ்வரன் கோவில் ஒன்றை வணங்கி வந்தனர். நீண்ட காலமாக அவ்வூர் மக்கள் சூலம் ஒன்றை வைத்து முனீஸ்வரனாக வணங்கி வந்தனர். பிறகு ஆனந்த விநாயகர், மரமுனீஸ்வரன், சமுத்திர துர்கை போன்ற கடவுள்களையும் அவர்கள் வணங்கி வந்தனர். அந்த கடவுகள்களுக்கு தனித்தனியாக ஆலயம் எழுப்பவும், பெரிய கோவில் ஒன்றை கட்டவும் முடிவு செய்தனர் அவ்வூர் மக்கள். அந்த கோவிலை பசுபதி என்பவர் நிர்வாகம் செய்து வருகிறார்.

மேலும் படிக்க : 10 மணி நேரத்தில் 254 மி.மீ மழை… தத்தளிக்கும் வர்த்தக தலைநகரம்!

காரைக்காலை சேர்ந்த சின்னத்தம்பி என்ற அப்துல் காதர் இந்த பகுதிக்கு உரிமையாளர் ஆவார். குடியிருப்பு மனைகள் கட்டி விற்பனை செய்ய கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தை வாங்கினார். வழிபாடு நடத்திய இடத்தை கோவிலுக்கு வழங்க வேண்டும் என்று அப்துல் காதரிடம் பொதுமக்கள் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அப்துல் காதரும் கோவிலுக்கு தானமாக தன்னுடைய நிலத்தை தானமாக கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க : ராமர் கோவில் : கயிற்றில் நடப்பதை போன்று இறுக்கமான சூழலை சந்திக்கும் காங்கிரஸ்

02ம் தேதி கோவில் இருக்கும் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் முன்னிலையில் இந்நிலத்திற்கான பத்திரத்தை கோவில் கட்ட வழங்கினார் அப்துல். வழிபாட்டு தலத்திற்கு 1200 சதுர அடி நிலம் இலவசமாக வழங்கியுள்ளார். கோவிலுக்கு அருகே அமைந்திருக்கும் 3000 சதுர அடி நிலத்தை பூங்கா அமைக்க நகராட்சிக்கு கொடுத்துள்ளார் அவர். இதனை முழு மனதுடன் அவர் தானமாக கொடுத்ததாக அவர் அறிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Karaikkal muslim man donated his land for temple construction in puducherry

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X