Weather News: வளிமண்டத்தில் நிலவும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம்மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்குப் பருவமழை நாளை அல்லது ஓரிரு நாட்களில் நிறைவடையக் கூடும். வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்தில், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
Advertisment
Advertisements
Latest Weather News: வானிலை ஆய்வு மையம்
சென்னையை பொறுத்தவரை ஓரளவு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.