Latest weather news latest weather update chennai weather rain in tamil nadu imd chennai - சென்னை வாசிகளுக்கு வானிலை மையத்தின் முக்கிய அப்டேட்
Latest Weather Report: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது.
Advertisment
புத்தாண்டு முதல் மழை
தமிழகத்தில் புத்தாண்டு பிறந்தது முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு நேரங்களில் கடந்த புத்தாண்டு மற்றும் அதற்கு மறு நாள் கனமழை பெய்தது. ஜன.5ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று வானிலை ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், "வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.