Advertisment

கருணாநிதி உடல்நிலை : 'இயந்திரம் உதவி இல்லாமல் சுவாசிக்கிறார்’ உடன்பிறப்புகளுக்கு உற்சாக செய்தி

DMK Chief Karunanidhi Health Today: கருணாநிதி உடல்நிலை குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவி வருவதால் போலீஸார் உஷார் படுத்தப்பட்டு வருகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
M Karunanidhi, Kalaignar Karunanidhi, Karunanidhi Live, M Karunanidhi LIVE, Karunanidhi Health News Today, கருணாநிதி உடல்நிலை

DMK Chief Karunanidhi Health today: கருணாநிதி உடல்நிலை

M Karunanidhi Health LIVE UPDATES: கருணாநிதி உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு சரி செய்யப்பட்டு வருவதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Advertisment

திமுக தலைவர் கருணாநிதி, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். 95 வயதான கருணாநிதிக்கு நேற்று (ஜூலை 29) இரவில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. பின்னர் மருத்துவ உதவிகள் மூலமாக அந்த பின்னடைவில் இருந்து அவர் மீண்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கை கூறியது.

கருணாநிதி உடல்நிலையில் நேற்று இரவு நடந்தது என்ன? காவேரி மருத்துவமனையை சூழ்ந்த பரபரப்பு To Read, Click Here

கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு குறித்து வெளியான தகவல்கள் காரணமாக பெருமளவிலான திமுக தொண்டர்கள் இரவில் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்தனர். நள்ளிரவில் திமுக கொள்கைபரப்பு செயலாளர் ஆ.ராசா வெளியே வந்து, ‘தலைவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது உண்மை. அது சரி செய்யப்பட்டுவிட்டது’ என கூறியபிறகு தொண்டர்கள் ஓரளவு சமாதானம் அடைந்தனர்.

M Karunanidhi Health, DMK Chief Karunanidhi In Kauvery Hospital, Kalaignar, Karunanidhi in Chennai Hospital, கருணாநிதி உடல்நிலை, கருணாநிதி சிகிச்சை DMK Chief Karunanidhi Health today: கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை ஞாயிறு இரவில் வெளியிட்ட அறிக்கை

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இதே பொருள்பட தனது முகநூலில் ஒரு பதிவிட்டார். அதில் தொண்டர்கள் பொதுமக்களுக்கோ, போலீஸாருக்கோ இடையூறு ஏற்படுத்தாமல் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எனினும் காவேரி மருத்துவமனை முன்பு நேற்று நிலவிய பதற்றச் சூழலில் ஒருமுறை போலீஸார் தடியடி நடத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

கருணாநிதிக்கு பிடித்தமான பாடல் To Read, Click Here

காவேரி மருத்துவமனை முன்பு விடிய விடிய கூடியிருந்த தொண்டர்கள், இன்றும் (ஜூலை 30) அங்கு முகாமிட்டிருக்கிறார்கள். தொடர்ந்து கருணாநிதி குடும்பத்தினர் காவேரி மருத்துவமனையில் இருக்கிறார்கள். கருணாநிதியின் உடல்நிலையை மேம்படுத்த மருத்துவர்கள் போராடி வருகிறார்கள்.

M Karunanidhi Health, DMK Chief Karunanidhi In Kauvery Hospital, Kalaignar, Karunanidhi in Chennai Hospital, கருணாநிதி DMK Chief Karunanidhi Health today: கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனை முன்பு இரவில் நடந்த போலீஸ் தடியடி

M Karunanidhi Health News Today, DMK Chief M Karunanidhi Health, கருணாநிதி உடல்நிலை LIVE UPDATES:

9:20 PM: காவேரி மருத்துவமனையை எதிர்பார்த்து காத்திருந்த தொண்டர்களுக்கு இரவு 9.15 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டிதான் ‘டானிக்’காக இருந்தது.

மு.க.ஸ்டாலினை சந்தித்து திரும்பிய திருமாவளவன், காவேரி மருத்துவமனை முன்பு அளித்த பேட்டி.. ‘கலைஞரின் உடல் நிலை, சுவாசம் சீராக இருக்கிறார். எந்த வித உபகரண உதவியும் இல்லாமல், இயல்பாக சுவாசிக்கிறார் என்பதுதான் முக்கியம். நேற்று ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்ட பிறகும், வெண்டிலேட்டர் உதவி எதுவும் இல்லாமல் அவராகவே மீண்டு வந்திருக்கிறார்.

மேஜர் ஆர்கன்ஸ் எனப்படும் முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் நல்ல நிலையில் இயங்குகின்றன. செம்மொழி மாநாடு கருத்தரங்கு ஒன்றில், ‘நான் 100 ஆண்டுகள் வாழ்வேன்’ என்றார். அதுபோல மீண்டு வருவார். அதற்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார் திருமாவளவன்.

8:45 PM : காவேரி மருத்துவமனை முன்பு கூடியிருக்கும் திமுக தொண்டர்களிடம் பிக்பாக்கெட் நிகழ்வுகளும் நடக்கின்றன. இன்று கையும் களவுமாக பிடிபட்ட ஒருவரை தொண்டர்கள் ‘கவனித்து’ போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

8:30 PM: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல நலம் குறித்து சரத்பவார் விசாரித்தார்.

8:10 PM: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சென்னை வந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கருணாநிதியை நலம் விசாரிக்கிறார் அவர்!

7:55 PM:திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய ஏராளமான தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். மருத்துவ அறிக்கைதான் அவர்களின் எதிர்பார்ப்பு!

7:00 PM: திமுக தலைவர் கருணாநிதி குணமடைந்து மீண்டும் மக்கள் பணிகளை தொடர வேண்டும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன எழுதிய கடிதத்தை மு.க.ஸ்டாலினிடம் இலங்கை எம்பி ஆறுமுக தொண்டைமான் வழங்கி நலம் விசாரித்தார்

5:45 PM: காவிரி மருத்துவமனை எதிரே நின்ற கூட்டத்தில் திமுக மகளிரணி பிரமுகர் ஒருவர் மயங்கி விழுந்தார். சாப்பிடாமலும், தன்ணீர் அருந்தாமலும் அங்கே நின்றதால் அவர் சோர்ந்து விழுந்ததாக தெரிகிறது. அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

5:30 PM : இலங்கை அமைச்சர்கள் ஆறுமுகம் தொண்டைமான், செந்தில் தொண்டைமான் ஆகியோர் கருணாநிதியின் உடல்நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். திமுக செய்தி தொடர்பு செயலாளர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அழைத்து வந்தார்.

4:55 PM : காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் கூட்டம் எகிறுகிறது. மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறார்கள். மருத்துவ அறிக்கையை பார்த்துவிட்டு வீட்டுக்கு செல்லும் முடிவில் பலர் இருக்கிறார்கள்.

4:30 PM: நடிகர் சிவகுமார், அவரது மகனும் நடிகருமான சூர்யா ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நலம் விசாரித்தனர்.

3:45 PM : இயக்குனர் விக்ரமன் நேரில் வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதி குறித்து நலம் விசாரித்தார்.

3:00 PM : முதல்வர், துணை முதல்வர் மற்றும் சில அமைச்சர்கள் வந்து சென்ற பிறகும்கூட, பிற்பகலில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர்.

2:15 PM : காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்களின் கூட்டம் அதிகரித்தபடியே இருக்கிறது. காலையிலேயே கனிமொழி உள்ளிட்டவர்கள் வீட்டுக்கு செல்லும்படி தொண்டர்களிடம் கூறியும், அவர்கள் கேட்கவில்லை. மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, அழகிரி ஆகியோர் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

M Karunanidhi, Kalaignar Karunanidhi, Karunanidhi Live, M Karunanidhi LIVE, Karunanidhi Health News Today, கருணாநிதி DMK Chief Karunanidhi Health today: கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க வந்த நடிகர்கள் சிவகுமார், சூர்யா

1:50 PM : கருணாநிதி மருத்துவர்களின் முயற்சியால் நலம் பெற்று வருவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார். காவேரி மருத்துவமனைக்கு வந்த ஸ்ரீதர் வாண்டையாரும் இதே கருத்தைக் கூறி பேட்டியளித்தார்.

1:15 PM : ஆரம்ப காலங்களில் திமுக.வில் இயங்கியவரான நாஞ்சில் சம்பத், காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார். ‘சிங்கமாக அவர் எழுந்து வர காலமகள் அருள் புரிய வேண்டும்’ என்றார் நாஞ்சில் சம்பத்.

12:40 PM: சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்.

M Karunanidhi, Kalaignar Karunanidhi, Karunanidhi Live, M Karunanidhi LIVE, Karunanidhi Health News Today, கருணாநிதி DMK Chief Karunanidhi Health today: கருணாநிதியை நலம் விசாரிக்க வந்த சரத்குமார்

12:20 PM: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் 2-வது முறையாக காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்துச் சென்றார். அப்போது நிருபர்களிடம், ‘கலைஞர் ஆகப் பெரிய போராளி. இப்போது இயற்கை அவரிடம் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்திலும் அவர் ஜெயிப்பார்’ என்றார்.

‘கருணாநிதியை சந்தித்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அதில் அவருக்கு வெண்டிலேட்டர் வைக்கப்படவில்லை. இதிலிருந்தே அவர் நலமாக இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்’ என்றார் முத்தரசன்.

11:30 AM: கருணாநிதி உடல்நலம் குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் நேரில் வந்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்.

M Karunanidhi, Kalaignar Karunanidhi, Karunanidhi Live, M Karunanidhi LIVE, Karunanidhi Health News Today, கருணாநிதி DMK Chief Karunanidhi Health today: கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் கூட்டம்

10:55 AM: காவேரி மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘ஸ்டெர்லைட் வழக்கிற்காக டெல்லி சென்றுவிட்டு அதிகாலை 4.45 மணிக்கு வந்தேன். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தாலும்கூட, பின்னடைவில் இருந்து அவராகவே மீண்டிருக்கிறார்.

வாழ்க்கை முழுவதும் எவ்வளவோ போராட்டங்களை நடத்தியிருக்கிறார். இப்போது எமனை எதிர்த்து போராடுகிறார். எமனையும் ஜெயித்து மீண்டு வருவார்’ என்றார் வைகோ. நேற்றும் காவேரி மருத்துவமனைக்கு வந்து வைகோ நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

M Karunanidhi, Kalaignar Karunanidhi, Karunanidhi Live, M Karunanidhi LIVE, Karunanidhi Health News Today, கருணாநிதி DMK Chief Karunanidhi Health today: கருணாநிதியை பார்த்துவிட்டுத் திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தபோது!

10:30 AM: காவேரி மருத்துவமனை வாசலில் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘திமுக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய கருணாநிதி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும் துணை முதல்வர், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் நேரில் சென்று மதிப்புக்குரிய மூத்த தலைவர் கருணாநிதி அவர்களை பார்த்தோம்.  நலமுடன் இருக்கிறார். மருத்துவக் குழு அங்கேயே இருந்து கவனித்து வருகிறார்கள்.’ என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

நள்ளிரவு வருவார் என்ற எதிர்பார்ப்பு... காலை வந்து விசாரித்த முதல்வர் பழனிசாமி To Read, Click Here

10:20 AM: கருணாநிதியை நலம் விசாரிக்க வந்த முதல்வருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன்,  சி.வி.சண்முகம்,  விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வந்தனர். முதல்வரும் துணை முதல்வரும் கருணாநிதியை அவர் சிகிச்சை பெறும் வார்டில் சென்று பார்த்தனர். அப்போது மு.க.ஸ்டாலின், கனிமொழி உடன் இருந்தனர்.

M Karunanidhi, Kalaignar Karunanidhi, Karunanidhi Live, M Karunanidhi LIVE, Karunanidhi Health News Today, கருணாநிதி DMK Chief Karunanidhi Health today: கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

9:55 AM: காவேரி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு திடீரென அதிகரிக்கப்பட்டது. வாசலையொட்டி நின்ற திமுக தொண்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கார், காவேரி மருத்துவமனையை வந்து அடைந்தது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்தார் முதல்வர்! உடன் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வந்தார்.

9:45 AM: கருணாநிதி உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அழைத்து ஆலோசித்தார். இருவரும் காவேரி மருத்துவமனை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவேரியில் கருணாநிதி: 'மிச்சமிருந்த தமிழகத்தின் கடைசி நம்பிக்கை' என தலைவர்கள் புகழாரம் To Read, Click Here

9:15 AM: கருணாநிதி உடல்நிலை சரியாகி, அவர் வீடு திரும்பும் வரை நாங்கள் காவேரி மருத்துவமனையை விட்டு செல்ல மாட்டோம் என தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

9:00 AM : இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

8:40 AM: காவேரி மருத்துவமனை கூடியிருக்கும் தொண்டர்களை சந்தித்த கனிமொழி, ‘தலைவர் கலைஞர் நன்றாக இருக்கிறார். நீங்கள் இங்கே நிற்க வேண்டாம். வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வாருங்கள்’ என உருக்கமாக வேண்டுகோள் வைத்தார்.

கருணாநிதி உடல்நலம் தொடர்பாக கல்லூரிகளுக்கு விடுமுறையா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணா பல்கலைகழகம் To Read, Click Here

தலைவர் கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது; தொண்டர்கள் அமைதி காக்கவும்! - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் To Read, Click Here

8:20 AM: கருணாநிதி உடல்நிலை குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவி வருவதால் மாநிலம் முழுவதும் போலீஸார் உஷார் படுத்தப்பட்டு வருகிறார்கள். சென்னையில் காவேரி மருத்துவமனை, கோபாலபுரம் இல்லம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

M Karunanidhi Health, DMK Chief Karunanidhi In Kauvery Hospital, Kalaignar, Karunanidhi in Chennai Hospital, கருணாநிதி உடல்நிலை, கருணாநிதி சிகிச்சை DMK Chief Karunanidhi Health today: கருணாநிதியை நலம் விசாரிக்க வந்த சபாநாயகர் தனபால்

8:00 AM: கருணாநிதி உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு இன்று (ஜூலை 30) 5-வது நாள்! காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இன்று 3-வது நாள்! காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் தொடர்ந்து காத்திருக்கிறார்கள்.

M Karunanidhi Health LIVE UPDATES:

 

Mk Stalin Dmk M Karunanidhi Cauvery Hospital
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment