கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை அரசு வெளியிட உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி ஆறில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் 3 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 3044 பேர் பாதிக்கப்பட்டு 84 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் தர வந்துள்ள இஸ்லாமியர்கள் - பா.ஜ., வரவேற்பு
தமிழகத்தில் உள்ள 7 கோடி பேரில், சென்னையில் மட்டும் 411 பேர் பாதிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் 17 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் நடவடிக்கையால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் ஒருசிலருக்கு பாதிப்புகள் இருந்தால் மற்றொருவருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டு அதனால் மற்ற குடும்பத்தாரும் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதனால், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் பெயர் மற்றும் பகுதியை அரசு இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் அவ்வாறு வெளியிடுவதால், பாதிக்கப்பட்ட நபர்களை கண்காணிக்கவும், , பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருப்பதை தடுக்கமுடியும் என மனுவில் குறப்பிட்டுள்ளார்.
கோயில் அர்ச்சகர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய முஸ்லீம்கள்
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், நிர்மல்குமார் அமர்வில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், இந்திய அரசியலமைப்பு 21 பிரிவின் படி தனி ஒருவரின் விவரங்களை வெளியிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது, பாதிக்கப்பபட்டவர்களின் பெயரை வெளியிட்டால் சமூக பிரச்சனை ஏற்படும், இந்திய மருத்துவ ஆராய்சிச்சி கவுன்சிலும் நோயாளிகளின் பெயர்களை வெளியிடக்கூடாது என வாதிட்டார்.
அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள் மனுதாரர் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.