முதல் மனைவி விவாகரத்து பெற்றுவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமையுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பஞ்சாயத்து யூனியனில் கிராம மருத்துவராக பணியாற்றியவர் டாக்டர் சின்னச்சாமி. இவருக்கும் பஞ்சோலை என்பவருக்கும் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் பிறந்தன.
போலி வருகைச் சான்று அளித்து வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை!
இந்நிலையில், சின்னச்சாமி சரோஜினிதேவி என்பவரை 2வதாக திருமணம் செய்தார். அவருக்கு 2 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
கடந்த 2009 ஜனவரி 20ல் டாக்டர் சின்னச்சாமி மரணமடைந்ததை அடுத்து, தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக்கோரி சரோஜினிதேவி, உள்ளாட்சி நிதித்துறையிடம் மனு கொடுத்தார்.
அரசு ஊழியர்களாக இருந்தால் 2வது மனைவி ஓய்வூதிய பலன்களைப்பெற ஓய்வூதிய விதிகளில் இடமில்லை எனக்கூறி அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, தனக்கு கணவரின் குடும்ப ஓய்வூதியத்தை வழங்குமாறு உத்தரவிடக்கோரி சரோஜினிதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், டாக்டர் சின்னச்சாமியின் முதல் மனைவி இறந்துவிட்டதாலும், 34 ஆண்டுகள் மனுதாரரும், சின்னசாமியும் கணவன் – மனைவியாக வாழ்ந்துள்ளதால், அவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
முதல் மனைவி விவாகரத்து வாங்கினாலோ அல்லது இறந்துவிட்டாலோ நீண்டநாட்கள் கணவருடன் வாழ்க்கை நடத்தும் 2வது மனைவிக்கு ஓய்வூதிய பலன்களை தரலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, 2009 ஜனவரி 20 முதல் இதுவரை கணக்கிட்டு, மனுதாரருக்கு 12 வாரங்களில் வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆதி ரகசியங்கள் தேடும் பயணத்தில் இணையும் தமிழகம் – கேரளம் .. முசிறியில் ஆராய்ச்சிகள் தீவிரம்!
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Madras high court divorce pension case chennai high court
மேற்குவங்க தேர்தல் : பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மம்தா பானர்ஜி
சின்ன வயதிலேயே பணம் குவிக்கும் வேட்கையா? ரிஸ்க் குறைவான முதலீடுகள் எவை?
சட்டசபை தேர்தல் : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்
தேன்மொழி நடிகை கையில் டாட்டூ… அது பக்கத்தில் என்ன காயம்? பதறும் ரசிகர்கள்
தொட்டதெல்லாம் ஹிட்டு… தானா விழும் ஓட்டு… ரோஜா சீரியல் நடிகைகள் கூட்டணி டான்ஸ்!
ஆஹா… பார்த்து எவ்ளோ நாளாச்சு… விஜய் டிவியில் என்ட்ரி ஆகும் மெட்டிஒலி நடிகை!