மஞ்சு விரட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். காளைகளின் கழுத்தில் மஞ்சல் துண்டு கட்டி விடுவார்கள். அதனை காளையர்கள் ஒன்று சேர்ந்து விரட்டி பிடித்து காளையை அடக்கி கழுத்தில் உள்ள மஞ்சல் துண்டை அவிழ்ப்பர். இதற்கு மஞ்சுவிரட்டு என பெயர்.
Advertisment
விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படும்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் அநேக இடங்களில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காவிட்டாலும் தடையை மீறி மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடைபெறும். இதனிடையே நேற்று நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் ஆவேசமாக வந்த காளை எதிரில் வந்த தாய் குழந்தையைக் கண்டதும் தன் ஆவேசத்தை அடக்கி அவர்களைத் தாண்டி சென்றது.
சிவகங்கை மஞ்சுவிரட்டில் சீறி வந்த காளையை பார்த்ததும் குழந்தையை முற்றிலும் தன் உடம்புக்குள் வைத்துப் பாதுகாத்த தாய், அவ்வளவு சீற்றத்திலும், தாயையும் குழந்தையையும் தாண்டிச் செல்லும் காளை என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அவ்வளவு வேகத்திலும், தாய் குழந்தையை கண்டவுடன் அவர்களுக்கு எந்த ஆபத்தும் நேராமல் தாண்டிச் சென்ற சிவகங்கை காளைக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.