கொரோனாவிற்கு எதிரான போராட்டம் என்பது அத்தனை எளிதானதாக இருப்பதில்லை. பலரும் தங்கள் வாழ்வின் இக்கட்டான காலகட்டத்தை கொரோனாவால் சந்தித்து வருகின்றனர். பலரும் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்ட நாட்களையும், இழந்த உறவுகள் பற்றிய வலியையும் மறைக்க நினைக்கும் போது, கவிஞர் / எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தன்னுடைய கோவிட் வார்ட் நாட்களை “வாழ்வில் மறக்க முடியாத, திருப்புமுனை கொண்ட பக்கம்” என்று கூறியுள்ளார். கொரோனா வார்டில் இருந்த 6 நாட்கள் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க : மீண்டெழும் சென்னை… கொரோனாவை விரட்டி முன்னேறுவது எப்படி?
எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படும் மனுஷ்யபுத்ரனின் வாழ்க்கை சில நிமிடங்கள் நகராமல் நின்றது அவருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட நாள் அன்று. திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மனுஷ்யபுத்ரன் செவ்வாய்க்கிழமை (21/07/2020) அன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
எனக்கு நான்கு நாட்களாக காய்ச்சல் இருந்தது. பிறகு இருமலும். அதன் பின்னர் எனக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நாள் அன்றும் கூட நான் இந்த நோய் குறித்து எழுதி கொண்டு தான் இருந்தேன். என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். நான்கு மாதங்களுக்கு முன்பு தான் எனக்கு இருதய அறுவை சிகிச்சை முடிந்தது. அதனால் நான் மிகவும் பயந்த வண்ணம் இருந்தேன் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க : ஐடி ஊழியர்களுக்கு டிச. 31 வரை ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ அனுமதி: மத்திய அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அங்கு பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், மனுஷ்யபுத்திரன் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையை அவருக்குள் விதைத்தனர். கொரோனா டெஸ்ட் உறுதி செய்யப்பட்டது முதல் தினமும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கவிதைகள் எழுதினார்.
மக்கள் மத்தியில் கொரோனா பற்றி பெரிய அளவில் அச்சமும், வருத்தமும் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மக்கள் ஒதுக்கி வைத்தும் புறக்கணித்தும் வருகின்றனர். அது அம்மக்களுக்கு பெரும் மன அழுத்தத்தை தருகிறது. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மருத்துவர்கள் தான் முதலில் உங்களுக்கான பலமாக இருக்கிறார்கள். மருத்துவம் இரண்டாவது தான்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உடன் இருந்து பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத காரணத்தால் அவர்கள் கழிவறைகளுக்கு செல்வது கூட கடினமான ஒன்றாக இருக்கும் என்று கூறிய அவர் “நான் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் 8 மணி நேரமும் இந்த பி.பி.இ உடையில் இருப்பதை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. சென்னை மருத்துவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டது மேலும் அதிர்ச்சி தர கூடியதாக இருந்தது. அதனால் மருத்துவர்கள் குறித்து குறை கூறவில்லை. நான் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றேன். அவர்கள் அனைவரும் மன அழுத்தத்தில் உள்ளனர். நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கூறினார் அவர்.
மேலும் படிக்க : மழை, குளிர் காலங்களில் கொரோனா வைரஸ் அதிகம் பரவுமா? புதிய ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?