கேரள போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் வேல்முருகனின் உடல் தேனியில் அடக்கம்

முருக மலையில் ஆயுதப் பயிற்சி மற்றும் ஆயுதங்களை வாங்குவது தொடர்பாக 2007-ல் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.

முருக மலையில் ஆயுதப் பயிற்சி மற்றும் ஆயுதங்களை வாங்குவது தொடர்பாக 2007-ல் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.

author-image
WebDesk
New Update
Maoist Velmurugan body cremated in Theni

அண்மையில் கேரள காவல்துறையின் தண்டர்போல்ட் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் ஏ.வேல்முருகனின் உடல் வியாழக்கிழமை காலை, தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் தகனம் செய்யப்பட்டது.

சரவண பவன் தேங்காய் சட்னி சீக்ரெட் தெரிஞ்சிக்கோங்க!

Advertisment

வேல்முருகனின் உடல் அதிகாலை 2 மணியளவில் அவரது சொந்த ஊரான இ புதுக்கோட்டைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது தாயும், மூத்த சகோதரரும் இருந்தனர்.

பலத்த பாதுகாப்புக்கு இடையே அதிகாலை 4 மணியளவில் தொடங்கிய இறுதி சடங்குகள் காலை 6.10 மணியளவில் முடிந்தது. எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுப்பதற்காக துணை போலீஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் சுமார் 200 காவல்துறையினர் அங்கு நிறுத்தப்பட்டனர்.

பெரியகுளம் நகராட்சி தகன மைதானத்தில் நடந்த இறுதி சடங்கில், வேல் முருகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். வயநாட்டில் உள்ள பதின்ஜாரதராவில் ஐந்தாறு பேர் அடங்கிய மாவோயிஸ்டுகளை கண்ட தண்டர்போல்ட் குழு, வேல்முருகனைக் கொன்றது.

Advertisment
Advertisements

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தை தடை செய்யக் கோரி புகார்; தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?

முருக மலையில் ஆயுதப் பயிற்சி மற்றும் ஆயுதங்களை வாங்குவது தொடர்பாக 2007-ல் வேல்முருகன் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த சில மாதங்களுக்குப் பிறகு அவர் அண்டர் கிரவுண்ட் வேலைகளுக்குச் சென்றார். பல்வேறு வழக்குகள் தொடர்பாக தமிழக கியூ பிரிவு போலீசாரும், பிற மாநிலங்களில் உள்ள போலீசாரும் அவரைத் தேடி வந்தனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Theni

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: