கொரோனா பாதித்த 4வது அமைச்சர் - நிலோஃபர் கஃபிலுக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் நான்காவது அமைச்சராக நிலோஃபர் கஃபிலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் நான்காவது அமைச்சராக நிலோஃபர் கஃபிலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா பாதித்த 4வது அமைச்சர் - நிலோஃபர் கஃபிலுக்கு தொற்று உறுதி

அமைச்சர் நிலோபர் கபில் மகன், மருமகனுக்கு தொற்று உறுதியான நிலையில் அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Minister Nilofer Kafeel: தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கிரின்வேஸ் சாலை உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அமைச்சர் நிலோபர் கபில் மகன், மருமகனுக்கு தொற்று உறுதியான நிலையில் அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

தமிழகத்தில் இதுவரை 2 அமைச்சர்கள் 8 எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 4,549 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 45,888 மாதிரிகள் சோதனை

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில், சிகிச்சை முடிந்து அமைச்சர் கே.பி. அன்பழகன் வீடு திரும்பிவிட்டார்.

இந்நிலையில், தமிழகத்தில் நான்காவது அமைச்சராக நிலோஃபர் கஃபிலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பிற்குள்ளான எம்எல்ஏக்கள்

அதிமுக எம்எல்ஏக்கள்

ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி, உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ குமரகுரு, பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகரன், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜீனன்.

மின்கட்டண உயர்வு : திமுக சார்பில் 21ம் தேதி ஆர்ப்பாட்டம்

திமுக எம்எல்ஏக்கள்

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் (மறைவு), ரிஷவந்தியம் தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன், செய்யூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி அரசு, செஞ்சி தொகுதி எம்எல்ஏ மஸ்தான்.

அம்மன் அர்ஜூனன், சதன் பிரபாகரன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், சிகிச்சை முடிவடைந்த நிலையில் குணம் பெற்று வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: