Minister Thangamani Tested Positive For Corona: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக கடந்த ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. சென்னையில் மட்டும் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையை தவிர்த்து மதுரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சில தினங்களாக அமைச்சர் தங்கமணியுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் உடனான ஆலோசனையில் பங்கேற்க இருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, நாமக்கல்லில் உள்ள தங்கமணியின் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
சென்னையில் இருமல், சளி இருக்கும் மூன்றில் ஒருவருக்கு கொரோனா
அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா
இதேபோல் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுகவின் பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ .சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரது மனைவி, மகன் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் அம்மன் அர்ஜூணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுகவின் கலை இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பா.வளர்மதி சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வீடு திரும்பினார்.
பளார்! பளார்! எஸ்ஐ கன்னத்தில் விட்ட பெண்... வைரல் வீடியோவால் பரபரப்பு!
ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு அமைச்சர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஐவர் குழு ஆலோசனைக் கூட்டத்தில் தங்கமணி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி உள்ளிடோரும் கலந்துகொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.