நளினி, முருகன் high court news chennai high court tamil news tamil nadu news
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் நளினி மற்றும் முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சிறை துறை தெரிவித்துள்ளது.
Advertisment
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
மேலும் முருகன் லண்டனில் உள்ள தங்கையுடனும் பேச அனுமதிக்கள் வேண்டும். ஏற்கனவே காலமான தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டதையும் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். எனவே வாட்ஸ் ஆப் மூலம் பேச அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சிறை துறை தாக்கல் செய்த பதில் மனுவில், நளினி மற்றும் முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.
இந்தியாவுக்குள் பேச அனுமதிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை.
மேலும் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அயல்நாடுகளில் இருப்பதால் இது மத்திய வெளிவிவகாரத்த்துறை சம்பந்தபட்டது, எனவே மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வழக்கின் விசாரணை திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil