கொரோனா காலத்தில் தமிழகத்தில் ரத யாத்திரையை அனுமதித்தால், நோய் பரவல் இன்னும் அதிகமாகும் என்பதால், தமிழகத்தில் ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்
நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், சமூக பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு, மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும், நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதோடு வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தினரும், குழந்தைகளும் கொரோனா போன்ற தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு வழங்க, ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தையும் தொடங்கியிருக்கிறார்.
ஆளுயர மாலை… வாள்… பதாகை..! செயற்குழுவில் அதகளப்படுத்திய ஓபிஎஸ் டீம்
இதற்கிடையே ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், ”கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் இருக்கிறது. கொரோனா நேரத்தில் ரத யாத்திரை அனுமதிப்பது நியாயம் கிடையாது. தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரை எதிர்க்கிறேன். மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் உயிர் மீதும் உடல் நலத்தின் மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ”ரத யாத்திரையை எதிர்த்ததற்காக, மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை” என தற்போது கூறியிருக்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”