By: WebDesk
Updated: September 15, 2020, 11:48:12 AM
ப.சிதம்பரம்
காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம் திங்களன்று இந்தி திவாஸ் நிகழ்வை ட்வீட் செய்து, “இந்தி பேசும் மக்களுடன் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார். ஆனால் தமிழை, “இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்று” என்று குறிப்பிட்டார்.
“தமிழ் பேசும் மக்கள் தங்கள் மொழியைப் பற்றி பெருமைப்படுகிறார்கள்” என்று தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.யான ப.சிதம்பரம் தனது இரண்டு ட்வீட்களில் முதல் இடத்தில் குறிப்பிட்டார்.
சிதம்பரத்தின் ட்வீட்கள் ஒவ்வொன்றும் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் பதிவிடப்பட்டிருந்தது. அவர் தமிழில் பதிவிட்டிருந்த இரண்டாவது ட்வீட்டில், “கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெரும் தொல்லியல் அகழாய்வுகள் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளன என்பதும் நமக்குப் பெருமையளிக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
இந்தி திணிப்பி தொடர்பாக மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் ஏற்கனவே முரண்பாடுகள் இருந்து வரும் நிலையில், தேசிய கல்வி கொள்கையின் வரைவை மத்திய அரசு, வெளியிட்ட பின்னர் இது இன்னும் தீவிரமாகியிருக்கிறது.
கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெரும் தொல்லியல் அகழாய்வுகள் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளன என்பதும் நமக்குப் பெருமையளிக்கிறது
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த ஆண்டு இந்தி திவாஸ் தினத்தில், “இந்தியாவில் மிகவும் பரவலாக பேசப்படும் மற்றும் புரிந்துகொள்ளப்பட்ட மொழி” என்பதால், தேசத்தை ஒன்றிணைக்கக்கூடிய ஒரே மொழி இதுதான் என்று கூறினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “இது இந்தியா, (இந்தி)யா அல்ல” என்று அறிவித்து ஒரு “மொழி யுத்தத்தின்” மூலம் மத்திய அரசை எச்சரித்தார்.
கடந்த மாதம் திமுக எம்.பி. கனிமொழி அந்த நெருப்பை ஆதரித்தார். சென்னை விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் அதிகாரி “எனக்கு இந்தி தெரியாததால் என்னுடன் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டபோது ‘நான் ஒரு இந்தியனா?’ என்று கேட்டதாக அவர் கூறினார்.
திரு சிதம்பரம் இதே போன்ற அவதூறுகளை அனுபவித்ததாகவும், ட்வீட்டில் கூறினார். “இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டுமே இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழிகளாக இருப்பதற்கு இந்த அரசு உண்மையிலேயே உறுதியுடன் இருந்தால், அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”