/tamil-ie/media/media_files/uploads/2023/04/csk.jpg)
PM Modi Chennai Visit Latest News Updates: தமிழகத்தில் சுற்றுப்பயணம் வந்த பிரதமர் மோடி இன்று சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சென்னை – கோவை இடையேயான ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை தொடங்கி வைத்த மோடி ரூ.3,700 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மொத்தம் 8 கோச்; 530 பேர் பயணிக்கலாம்: சென்னை- கோவை வந்தே பாரத் ரயில் முழு தகவல்கள்
அதன்பிறகு 4.25 மணிக்கு சென்ட்ரலில் இருந்து விவேகானந்தர் இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு நடைபெறும் சென்னை ராமகிருஷ்ணன் மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தாம்பரம்- செங்கோட்டை இடையே 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
மோடி வருகை: பல்லாவரம், ஏர்போர்ட், கிண்டியில் போக்குவரத்து தடை; சென்னைக்கு
அதனைத் தொடர்ந்து ரூ.294 கோடியில் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையே 37 கி.மீ தொலைவுக்கு முடிக்கபட்டுள்ள அகல ரயில் பாதையை தொடங்கி வைக்கும் பிரதமர், அடுத்து ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 22 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
- 21:39 (IST) 08 Apr 2023இபிஎஸ், ஓபிஎஸ்-ஐ தனித்தனியாக சந்திக்காத பிரதமர்
பிரதமரை சந்திக்க இபிஎஸ் ஒபிஎஸ் இருவரும் தனித்தனியே நேரம் கேட்டிருந்த நிலையில் பிரதமர் மோடி இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும்மே தனித்தனியாக சந்திக்கவில்லை
- 20:30 (IST) 08 Apr 2023தமிழகம் வளரும்போது இந்தியாவும் வளர்கிறது - பிரதமர் மோடி
"எப்போதெல்லாம் தமிழகம் வளர்கிறதோ, அப்போதெல்லாம் இந்தியாவும் வளர்கிறது" என பல்லாவரத்தில் அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி உரை
- 20:29 (IST) 08 Apr 2023சென்னை திட்டப்பணிகள்
சென்னையில் ₨5,200 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- 19:48 (IST) 08 Apr 2023பல்லாவரத்தில் அரசு விழாவில் பிரதமர் மோடி உரை
பல்லாவரத்தில் அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய திட்டங்களால் சென்னை, மதுரை, கோவை நகரங்கள் நேரடியாக பயன்பெறும். கட்டுமானங்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் பண்பாட்டை பிரதிபலிக்கின்றன என கூறியுள்ளார்
- 19:48 (IST) 08 Apr 2023கோவை தொழில்களின் சக்தி பீடம் : பிரதமர் மோடி
பல்லாவரத்தில் அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி ஜவுளி,தொழில் நிறுவனங்களால் கோவை தொழில்களின் சக்தி பீடமாக விளங்குகிறது. வந்தே பாரத் ரயில் சேவை ஜவுளித்துறையின் மையமான சேலம், ஈரோடு, திருப்பூரை இணைக்கிறது என கூறியுள்ளார்.
- 18:57 (IST) 08 Apr 2023அரசு விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு
சிறப்பாக வழிநடத்துகிறார் முதல்வர் - எல்.முருகன் "சீரும் சிறப்புமாக தமிழகத்தை வழிநடத்தி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்" "தமிழகத்தின் மீது பிரதமர் மோடி தனி பாசம் வைத்துள்ளார்" "இந்தாண்டு மட்டும் 6 ஆயிரம் கோடிக்கு ரயில்வே திட்டங்களை அறிவித்துள்ளார் பிரதமர்"
- 18:55 (IST) 08 Apr 2023முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை
இந்தியாவில் 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமான தமிழ்நாட்டுக்கு போதுமான ரயில்வே திட்டங்கள் வழங்கப்படவில்லை. திருச்சி கோவை மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி விரைவுபடுத்த வேண்டும். மெட்ரோ 2-வது ரயில் திட்ட பணிகளுக்கு மத்திய அரசின் பங்களிப்பு 2-வது ஆண்டாக நிலுவையில் உள்ளது. இவற்றை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
- 18:11 (IST) 08 Apr 2023தமிழ் மொழி மற்றும் தமிழ் பாரம்பரியத்தை மிகவும் விரும்புகிறேன் : பிரதமர் மோடி
தமிழ் மொழி மற்றும் தமிழ் பாரம்பரியத்தை மிகவும் விரும்புகிறேன். விவேகானந்தர் இல்லைத்தை காண எனக்கு பாக்கியம் கிடைத்துள்ளது. விவேகானந்தர் மீதான தாக்கம் தமிழகத்தில் அதிகம் உள்ளது. நான் தமிழக மக்களையும் சென்னையையும் மிகவும் நேசிக்கிறேன். வெற்றி நாயகனாக விவேகானந்தர் சென்னையில் வரவேற்கப்பட்டார். ராமகிருஷ்ணா மடம் இளைஞர்களுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் வழிகாட்டுகிறது. அனைவரும் சமநிலையை உறுதிப்படுத்தினால் சமூகம் முன்னேறும். பாஜக ஆட்சியில் ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வழிவகை செய்துள்ளது என்று சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டுவிழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
- 17:42 (IST) 08 Apr 2023இந்தியாவிற்கான காலம் இது
விவேகானந்தர் கண்ட கனவு நனவாகும் வகையில் இந்தியாவிற்கான காலம் இது. தங்கள் மீதான தடைகளை பெண்கள் தகர்த்தெறிந்து வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றத்தை விவேகனந்தர் வலியுறுத்தினார். அவரது நோக்கத்தை இந்தியா நிறைவேற்றி வருகிறது. என்று பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
- 17:17 (IST) 08 Apr 2023ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி
சென்னை, மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்னர். பிரதமர் மோடிக்கு, நினைவு பரிசாக விவேகானந்தர் சிலை வழங்கப்பட்டது
- 16:29 (IST) 08 Apr 2023சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார் மோடி
சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் புதிய முனைமம் ஒன்றை திறந்துவைத்தார். அவருக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்
- 15:52 (IST) 08 Apr 2023சாலை மார்க்கமாக சென்டிரல் செல்கிறார் நரேந்திர மோடி
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐ.என்.எஸ் அடையார் ஹெலிபேட் தளத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்டிரல் ரயில் நிலையம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்கிறார்.
- 15:49 (IST) 08 Apr 2023ஐ.என்.எஸ் ஹெலிபேட் தளத்துக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐ.என்.எஸ் அடையார் ஹெலிபேட் தளத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார்.
முன்னதாக, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.
- 15:03 (IST) 08 Apr 2023சென்னை வந்தடைந்தார் மோடி
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்பு
மூத்த அமைச்சர்கள், ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் வரவேற்பு
- 14:02 (IST) 08 Apr 2023"மாநில அரசு ஒன்றிய அரசுடன் ஒத்துழைப்பதில்லை"- பிரதமர் மோடி
தெலங்கானாவில் நிகழும் அரசு விழாவில் பிரதமர் கலந்துகொள்ளும் நிலையில், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் 5-வது முறையாக புறக்கணித்துள்ளார்.
"தெலங்கானா மக்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களில், எந்த இடையூறும் மாநில அரசு ஏற்படுத்தக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்", என்றார் பிரதமர் மோடி.
- 13:55 (IST) 08 Apr 2023தெலங்கானா எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாடும் பிரதமர்
தெலங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
- 13:05 (IST) 08 Apr 2023செகந்திராபாத் - திருப்பதி வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்
தெலங்கானா: பிரதமர் நரேந்திர மோடி செகந்திராபாத் - திருப்பதி இடையிலான வந்தேபாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- 13:04 (IST) 08 Apr 2023செகந்திராபாத் - திருப்பதி வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்
தெலங்கானா: பிரதமர் நரேந்திர மோடி செகந்திராபாத் - திருப்பதி இடையிலான வந்தேபாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- 12:28 (IST) 08 Apr 2023மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வு விலக்கு, நிலக்கரி விவகாரம், ஆன்லைன் ரம்மி தடை மசோதா, ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து பிரதமரிடம் மனு வழங்க உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
- 12:26 (IST) 08 Apr 2023மோடியை சந்தித்து பேசும் ஓ.பி.எஸ்
மோடியை விமானநிலையத்தில் சந்தித்து பேச ஓ.பி.எஸ்-க்கு நேரம் ஒதுக்கீடு
பிரதமர் மோடியை விமானநிலையத்தில் சந்திக்க முன்னாள் முதல்வர் ஓபிஎஸுக்கு நேரம் ஒதுக்கீடு
10 நிமிடங்கள் பிரதமரிடம் தனியாக பேச ஓபிஎஸுக்கு அனுமதி
- 11:31 (IST) 08 Apr 2023மோடி பங்கேற்கும் அரசு விழாவை புறக்கணித்த கே.சி.ஆர்
தெலங்கானாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழாவை, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணிப்பு *
தெலங்கானாவில் ரூ.11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
- 11:29 (IST) 08 Apr 20235 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
நீலகிரி , உதகையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு விடை எழுத உதவியதாக 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவியதாக எழுந்த புகாரில் கல்வித்துறை நடவடிக்கை
- 10:49 (IST) 08 Apr 2023பிரதமர் மோடி தமிழில் ட்வீட்
சென்னை விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளது . வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்து, ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவிலும் கலந்து கொள்ள உள்ளேன் . சென்னை வருகையையொட்டி, பிரதமர் மோடி தமிழில் ட்வீட்
- 10:15 (IST) 08 Apr 2023பிரதமரை வரவேற்க செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை வரும் பிரதமர் மோடி. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சென்னை விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
- 09:34 (IST) 08 Apr 2023மோடி தொடங்கி வைக்கும் ரூ13,700 கோடி திட்டங்கள்
தெலுங்கானாவில் 11, 300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். செகந்திராபாத்- திருப்பதி வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார். செகந்திராபாத் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு திட்டம் ரூ.720 கோடியில் அமைய உள்ளது . செகந்திராபாத்- மகபூப்நகர் ரயில் பாதையை மின்மயமாக்கல் திட்டம் ரூ 1,410 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. பிபிநகர் ஏய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை அடிக்கல் நாட்ட உள்ளார் மோடி. இது ரூ 1,350 கோடியில் அமைய உள்ளது. தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் சாலைகளை மேம்படுத்தும் ரூ.7,850 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை பிரதமர் துவக்கி வைக்கிறார்.
- 09:24 (IST) 08 Apr 2023மோடி தொடங்கி வைக்கும் ரூ13,700 கோடி திட்டங்கள்
தெலுங்கானாவில் 11, 300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். செகந்திராபாத்- திருப்பதி வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார். செகந்திராபாத் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு திட்டம் ரூ.720 கோடியில் அமைய உள்ளது . செகந்திராபாத்- மகபூப்நகர் ரயில் பாதையை மின்மயமாக்கல் திட்டம் ரூ 1,410 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. பிபிநகர் ஏய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை அடிக்கல் நாட்ட உள்ளார் மோடி. இது ரூ 1,350 கோடியில் அமைய உள்ளது. தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் சாலைகளை மேம்படுத்தும் ரூ.7,850 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை பிரதமர் துவக்கி வைக்கிறார்.
- 08:58 (IST) 08 Apr 2023விமான நிலையத்தில் 25 நிமிடங்கள் வாகனங்களுக்கு தடை
பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று சென்னை விமானநிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் வாகனங்கள், மதியம் 2.50 முதல் 3.15 வரை அனுமதிக்கப்படாது. இந்நிலையில் இதற்கு தகுந்தாற்போல் பயணங்களை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- 08:55 (IST) 08 Apr 2023விமான நிலையத்தில் 25 நிமிடங்கள் வாகனங்களுக்கு தடை
பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று சென்னை விமானநிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் வாகனங்கள், மதியம் 2.50 முதல் 3.15 வரை அனுமதிக்கப்படாது. இந்நிலையில் இதற்கு தகுந்தாற்போல் பயணங்களை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- 08:49 (IST) 08 Apr 2023சென்னையில் மோடி நிகழ்ச்சி நடைபெறும் இடம் கடைசி நேரத்தில் மாற்றம்
பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில், சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் 125-ம் ஆண்டு விழா மைலாப்பூரில் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்வு விவேகானந்தா இல்லத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- 08:44 (IST) 08 Apr 2023சென்னையில் மோடி நிகழ்ச்சி நடைபெறும் இடம் கடைசி நேரத்தில் மாற்றம்
பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில், சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் 125-ம் ஆண்டு விழா மைலாப்பூரில் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்வு விவேகானந்தா இல்லத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- 08:07 (IST) 08 Apr 2023பிரதமர் வருகை : கிண்டி மார்க்கமாக வாகனங்கள் செல்ல தடை
பிரதமர் வருகையையொட்டி, பல்லாவரத்திலிருந்து சென்னை விமான நிலையம், கிண்டி மார்க்கமாக வாகனங்கள் செல்ல தடை. வேளச்சேரி அல்லது துரைப்பாக்கம் மார்க்கமாக சென்னைக்கு செல்லலாம் என அறிவிப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.