Advertisment

மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தினம் 15 ஆயிரம் பிபிஇ முழுகவச உடைகள் - தமிழக அரசு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
madras high court, chennai high court, tamil nadu government, ppe kits, சென்னை ஐகோர்ட், மெட்ராஸ் ஐகோர்ட், தமிழக அரசு, பிபிஇ முழுகவச உடைகள், latest tamil news, tamil news, news

madras high court, chennai high court, tamil nadu government, ppe kits, சென்னை ஐகோர்ட், மெட்ராஸ் ஐகோர்ட், தமிழக அரசு, பிபிஇ முழுகவச உடைகள், latest tamil news, tamil news, news

மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தினந்தோறும் 15 ஆயிரம் பிபிஇ முழுகவச உடைகள் அனுப்பி வைக்கப்படுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Advertisment

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், தொற்று பாதித்தவர்களுக்கு சி்கிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் உள்ள காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தோழிகள் துயர முடிவு: ஒருவருக்கு திருமணம் நிச்சயம் ஆனதும் இருவரும் உயிர் விட்டனர்

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாரயணன், அனிதாசுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுகாதார துறை கூடுதல் செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கொரொனோ தொற்று தடுப்பு பணியில் முதன்மை நிலையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஆய்வக பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் தங்களை தற்காத்து கொள்ளவதற்கு ஏற்பாடுகளையும், பிபிஇ முழு கவச உடையை அணிவது, அதை பயன்படுத்திய பின் பாதுகாப்பாக அகற்றுவது குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணிகளில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு கைகளை சுத்தமாக வைப்பதற்கு தேவையான கிருமி நாசினி, சோப் போன்றவை பற்றாக்குறை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தினந்தோறும் 15 ஆயிரம் பிபிஇ முழுகவச உடைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மருத்துவ பணியில் ஈடுப்பட்டுள்ள அனைவருக்கும் ஷிப்ட் அடிப்படையில் 6 மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்பட்டு வருகிறது.

இதே போல் தமிழக காவல்துறையினர் 7 ஆயிரத்து 850 பேருக்கு முக கவசம், கையுறை வழங்குவதற்கு 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரொனோ வார்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருக்கும் காவலர்கள் முழு கவச உடை மற்றும் என் 95 முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இயல்பு நிலைக்கு திரும்பும் கோவை : கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா?

இதே போல், கொரொனோவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிபுரியும் பணியாளர்களுக்கு உயர்தர கையுறை, மற்றும் ஷூக்கள் மற்றும் முழு கவச உடைகள் வழங்க சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும்விதமாக மனுதார்ர் மறுப்பு அறிக்கையில், மருத்துவர்களுக்கு WHO குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்படி மூன்றடுக்கு பாதுகாப்பு ஆடை கொடுக்கப்படவில்லை மொத்தத்தில் அரசு மருத்துவர்களுக்கு கொடுகப்பட்டது PPE Kit – டே கிடையாது அது வெறும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மேலுடைதான் (Surgical Apron) என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் இதுகுறித்த சரியான தகவல்கள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்..

இந்த வழக்கில், வாதம் செய்ய அரசு தரப்பு வழக்கறிஞர் ஒருவாரம் அவகாசம் கோரியதன் அடிப்படையில் நீதிபதிகள் சத்தியநாராயனன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோரின் அமர்வு வழக்கை ஒருவாரம் கழித்து பட்டியலிடும் படி உத்தரவிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil “

Corona Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment