Radhapuram 2016 assembly election vote recounting starts today : 2016ம் ஆண்டு ராதாபுரம் தொகுதியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி இன்று துவங்கியது. ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைகாக தபால் ஓட்டு பெட்டிகள் மற்றும் 34 வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது. தற்போது 1508 தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் திமுக வேட்பாளராக இருந்த அப்பாவு மற்றும் அதிமுக வேட்பாளராக இருந்த இன்பதுரை மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்விருவருவம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு காலையிலேயே வருகை புரிந்துவிட்டனர்.
மேலும் படிக்க : லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவம் : கையும் களவுமாக சிக்கிய கொள்ளையன்
வழக்கின் பின்னணி
தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் அப்பாவு என்ற வேட்பாளும், அதிமுக சார்பில் இன்பதுரையும் வேட்பாளாராக போட்டியிட்டனர். இன்பதுரை வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் அப்பாவு பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 69.541 மற்றும் அதிமுக வேட்பாளர் இன்பதுரை பெற்ற ஓட்டுகள் 69,590. இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு வழக்கு பதிவு செய்தார். வழக்கின் விசாரணை முடிவில் எண்ணப்பட்ட வாக்குகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டது உயர் நீதிமன்றம். தற்போது மீண்டும் வாக்குகள் மறு எண்ணிக்கைக்கு தயாராகி வருகிறது.
மேலும் படிக்க : இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு வழக்கு தொடுக்க காரணம் என்ன?
19,20 மற்றும் 21 சுற்றுகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குகளை நெல்லையை சேர்ய்ந்த வருவாய்துறை அதிகாரிகள் 24 பேர் எண்ண உள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பிறகு கடைசி மூன்று சுற்றுகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படும்.
மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்
மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற கூடாது என்று அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க இயலாது என்றும் அதே நேரத்தில் முடிவுகளை அறிவிக்க கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மெமோவும் அறிக்கையும் வரட்டும் - உயர் நீதிமன்ற நீதிபதி
19,20, மற்றும் 21 சுற்றுகளில் பதிவான 16083 வாக்குகள் நான்கு மணி நேரத்திலும், தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மணி நேரமும், ஈ.வி.எம். வாக்குகளாஇ எண்ண 2 மணி நேரமும் ஒதுக்க்கபட்டது. இந்த பணிகளை தலைமை பதிவாளர் குமரப்பா மேற்பார்வையிடுகிறார். வாக்குகள் எண்ணப்பட்டவுடன் சீலிட்ட கவரில் தேர்தல் முடிவுகளை உயர் நீதிமன்றத்திற்கு அவர் அனுப்புவார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த மெமோவும், தலைமை பதிவாளார் அறிக்கையும் வரட்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியுள்ளார்.
இந்நிலையில், ராதாபுரம் தொகுதி 3 சுற்றுகளுக்கான மறுவாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. கடைசி 3 சுற்று வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் எண்ணப்பட்டன. இந்த முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அக்டோபர் 23-ம் தேதி வரை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.