Advertisment

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் ஜெயந்தி திடீர் விடுப்பு

சென்னை மருத்துவக் கல்லூரி(எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஆர்.ஜெயந்தி பணி விடுப்பில் சென்றுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் ஜெயந்தி திடீர் விடுப்பு

சென்னை மருத்துவக் கல்லூரி(எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஆர்.ஜெயந்தி பணி விடுப்பில் சென்றுள்ளார்.

Advertisment

இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில்,"ஆர். ஜெயந்தி விடுப்பில் இருப்பதால், சென்னை மருத்துவக் கல்லூரியின்  ஹெபடாலஜி பிரிவு இயக்குனரும் பேராசிரியருமான நாராயணசாமி, அடுத்த உத்தரவு வரும் வரை ராஜாஜி  மருத்துவமனையின் புதிய டீனாக கூடுதல் பொறுப்பு வகிப்பார். மேலும், இதுவரையில் மருத்துவமனை டீன் பயன்படுத்திய அனைத்து நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களுக்கும் இவருக்கு வழங்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

 

 

முன்னதாக ராஜாஜி  சேர்ந்த 70 முதுநிலை மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட  மருத்துவர்கள் அனைவரும்,  தற்போது அயனாவரம் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

கல்லூரியில் தொடர்ச்சியான, முறையான கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருவதாகும், அதன் காரணமாக மருத்துவர்களிடம் கொரோனா தொற்று ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்படுவதாகவும் டாக்டர்.ஜெயந்தி முன்னதாக தெரிவித்தார்.

இதற்கிடையே, டாக்டர்.ஜெயந்தி மருத்துவ விடுப்பில் உள்ளார் என்றும், கொரோனா தொற்று பரவல் அறிகுறிகள் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும்   மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எம்.எம்.சி-யில் 70 முதுநிலை மருத்துவர்களுக்கு கொரோனா: தனி வார்டில் சிகிச்சை

ஏற்கெனவே ஸ்டான்லி மருத்துவமனை, தூத்துக்குடி அரசு மருத்துவமனை உள்ளிட்டவற்றின் டீன்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் பணி விடுப்பில் சென்றுள்ளார்.

முன்னதாக, சுகாதாரத் துறை செயலர் பதவியிலிருந்து பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு, ஜெ. ராதாகிருஷ்ணன் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் பணியிடமாற்றம்

 

மேலும், வாசிக்க:

தூத்துக்குடிக்கு தூக்கியடிக்கப்பட்ட சென்னை அரசு மருத்துவர்: முகக் கவசம் கேட்டதால் தண்டனையா?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment