sagayam IAS applies for voluntary retirement Sakayam IAS news : 2016 வருட தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐ. ஏ. எஸ் சகாயம் தற்போது தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார். அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற 3 ஆண்டுகள் உள்ள நிலையில் சகாயம் விருப்ப ஓய்வுக்கு வின்னபித்துள்ளார்.
Advertisment
அரசியல் தலைவர்களுக்கு இணையாக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் பொதுமக்களிடம் பிரபலமானவர் என்றால் அது சகாயம் ஐ.ஏ.எஸ் என்பது மிகையல்ல. 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்ற கொள்கையில் பணியாற்று வந்தவர். அவரது 23 ஆண்டு பணிக்காலத்தில் 24 முறை பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்றதாக கூறப்பட்ட கிரானைட் முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த புகார் சம்பந்தமாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து, 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு உத்தரவிட்டது.
அதன்படி சகாயம் குழு தன் விசாரணையை முடித்து, 2015 நவம்பரில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததால், அரசுக்கு, ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இதுசம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும், முறைகேட்டுக்கு துணை போன அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 212 பரிந்துரைகளை வழங்கியிருந்தார்.
தமிழக இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக. 'மக்கள் பாதை' என்ற சமூக அமைப்பின் பாதுகாவலராக உள்ளார். மக்கள் பாதை அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்த அமைப்பின் முப்பெரும் விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பங்கேற்றார் என்பதும குறிப்பிடத்தக்கது.