ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கிளையின் எட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் ராணிப்பேட்டையில் உள்ள எஸ்.பி.ஐ. கிளையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருவதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். கொரோனா வைரஸ் தொற்றால், ராணிப்பேட்டை நகரத்தில் வங்கி நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் அவர் சென்னை சென்றார்.
காவேரிபாக்கம் கிராமக் கிளையுடன் இணைக்கப்பட்ட கிளை மேலாளர் மூன்று நாட்கள் விடுப்பில் இருந்தார். இந்த ஏப்ரல் 20, 21, 22 ஆகிய நாட்களில் ராணிபேட்டை நகர கிளை உதவி மேலாளர், காவேரிபாக்கம் கிளையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
ஏப்ரல் 22 மாலை, அவர் மீண்டும் சென்னைக்குச் சென்றார். அப்போது அவருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டது. கோவிட் -19 பாஸிட்டிவ் ரிசல்ட் வந்ததைத் தொடர்ந்து, அவரது நான்கு குடும்ப உறுப்பினர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவரது மனைவி மற்றும், வயதான தந்தை இருவருக்குமே கொரோனா இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து, காவேரிபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, “ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் எஸ். திவ்யா தர்ஷினியின் வழிகாட்டுதலின் அடிப்படையில், காவேரிபாக்கம் கிளையின் எட்டு ஊழியர்களையும் நாங்கள் தனிமைப்படுத்தியுள்ளோம். உதவி மேலாளர் வாடகைக்கு தங்கியிருந்த வீடு கிருமி நீக்கம் செய்யப்பட்டது. ராணிப்பேட்டை நகரத்தில் உள்ள காமராஜர் நகர் குடியிருப்பு பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”