Solar Eclipse In Chennai Today News: இன்று, டிசம்பர் 26ம் தேதி ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், சௌதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த சூரிய கிரகணத்தை காண முடியும். ஆனால், சூரிய கிரகணம் தெரியும் அளவு மற்றும் தெளிவு ஊருக்கு ஊர் மாறுபடலாம். சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும்.
இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?
இன்று சூரிய கிரகணம்: சென்னையில் எங்கே, எப்போது, எப்படி பார்க்கலாம்?
Solar Eclipse In Chennai, Surya Grahan 2019 Timings
கிரகண நேரம் எது? வெற்றுக் கண்களால் பார்க்கலாமா?
இன்றைய சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் (annular solar eclipse) என்றும் சொல்லப்படுகிறது. அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும். இதன்போது சாதாரண கண்களில் சூரியனை காண்பது கடினம். எனவே, இந்த வளையத்தை நேரடியாக பார்க்கக் கூடாது.
Live Blog
Solar Eclipse Today Updates
இன்று நிகழும் சூரிய கிரகணம் தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.
Web Title: Solar eclipse live news today solar eclipse timings in tamil nadu surya grahan
Highlights
மேக மூட்டத்தால் பெங்களூருவில் காணாத சூரிய கிரகணத்தை மையப்படுத்து இந்த மீம் போடப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள பிர்லா கோளரங்கத்தில் வளைய வடிவிலான சூரிய கிரகணத்தை, 6000 பேர் பார்த்து ரசித்தனர்
சூரிய கிரகணத்தை எளிய முறையில் விளக்கும் வீடியோ
தமிழகத்தில் காலை 8.06 மணிக்கு ஊட்டியில் தொடங்கிய சூரிய கிரகணம் முற்பகல் 11.16-க்கு புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியில் நிறைவடைந்தது
சூரியனை விட்டு முழுமையாக விலகியது சந்திரன்! அரிய நிகழ்வாக நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிறைவடைந்தது..!
சென்னை பெரம்பூரில் தென்பட்ட சூரிய கிரகணம்
மன்னார்குடியில் தான் பார்த்த வளைய சூரிய கிரகணத்தை வீடியோவாக எடுத்து, ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் திமுக எம்.எல்.ஏ, டி.ஆர்.பி ராஜா
கிரகணம் தெரியாத மாவட்டங்களில் சூரியன் இப்படித்தான் காட்சியளிக்கிறது
அடுத்த முழு சூரிய கிரகணம் ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஹரியானாவில் 2020 ஜூன் 21ல் தோன்றுகிறது.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு தோன்றிய நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
”பல இந்தியர்களைப் போலவே, நானும் சூரிய கிரகணத்தைப் பார்க்க, ஆவலாக இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, மேக மூட்டம் காரணமாக என்னால் சூரியனைப் பார்க்க முடியவில்லை. ஆனால் கோழிக்கோட்டில் கிரகணத்தின் காட்சிகளை நேரடி ஸ்ட்ரீமில் பார்த்தேன். நிபுணர்களை சந்தித்தது எனது அறிவை வளப்படுத்தியது” என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
தமிழகத்தில் முழு சூரிய கிரகணம் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2031 மே 21ஆம் தேதி தென்படும். சூரிய கிரகணத்தால் தென் தமிழகத்தில் உள்நிழலும், வட தமிழகத்தில் வெளி நிழலும் படியும்.
இலங்கையில் நெருப்பு வளைய வடிவில் தெரிந்த சூரிய கிரகணம்
கோவையில் மேகமூட்டம் காரணமாக நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்க முடியாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தேனி, ஈரோடு, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளிலும் சூரிய கிரகணம் தெரியவில்லை
சூரிய கிரகணத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், சுற்றுலாப்பயணிகள் சூரியக் கண்ணாடி(solar filter) உதவியுடன் சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்தனர்.
சூரிய கிரகணத்தைப் பார்த்து மகிழும் சிறுவர்கள்
மதுரை மேலூர் பகுதியில் மேகமூட்டம் காரணமாக கிரகணத்தை தெளிவாக பார்க்க முடியவில்லை.
பெங்களூரில் சூரியகிரகணம் காரணமாக இருள் சூழ்ந்துள்ளது. ஜவகர்லால் நேரு கோளரங்கம் வழியாக பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதுக்கோட்டை, திண்டுக்கல், ஊட்டியில் முழு வளைய சூரிய கிரகணம் தெரிந்தது.
திண்டுக்கல், மதுரை, திருச்சியில் முழு வளைவு வடிவ சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. இந்த கிரகணத்தில் சூரியனின் மையப்பகுதியை நிலவு 3 நிமிடங்களுக்கு மேல் மறைத்தது. திருப்பூரில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்
சென்னையில் தெரிந்த அட்டகாசமான நெருப்பு வளைய சூரிய கிரகணம்
மும்பை நேரு கோளரங்கத்தில் தெரிந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம்.
கும்பகோணம் பகுதியில் வளைவு சூரிய கிரகணத்தால், சூரியன், பிறைவடிவ நிலா போன்று காட்சியளித்தது. மேகமூட்டம் காரணமாக அங்கு மக்கள் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
துபாயில் முழுமையாக தெரிந்தது வளைவு சூரிய கிரகணம். இந்த வளைவு சூரிய கிரகணம் சவுதி அரேபியாவில் துவங்கி பசிபிக் கடல் பகுதியில் முடிவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் வளைவு சூரிய கிரகணம் தெரிய துவங்கியுள்ளது. பிர்லா கோளரங்கம் , பெசன்ட் நகர் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் வளைவு சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வளைய வடிவ சூரிய கிரகணத்தையொட்டி பெங்களூருவில் கோயில்கள் சாத்தப்பட்ட நிலையில், நெருப்பு வளைய சூரியனைப் பார்க்க கோளரங்கத்திற்கு விரையும் அடுத்தத் தலைமுறை குழந்தைகள்
1999-ல் நடந்த சூரிய கிரகணத்தின் வீடியோ இணைப்பு
திண்டுக்கல்லில் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது. அதோடு கர்நாடகாவின் பெங்களூருவிலும் சூரிய கிரகணத்தை காண முடிந்தது
காந்திகிராமம் பகுதியில் அறிவியல் இயக்கம் ஏற்பாட்டில் பாதுகாப்பான கண்ணாடி மூலம் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் வளைய வடிவ சூரிய கிரகணத்தைப் பார்த்து வருகின்றனர்.
தமிழகத்தில், ஊட்டி, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வளைய சூரிய கிரகணம் தெளிவாக தெரியும் என்று விஞ்ஞானிகள் கூறிய நிலையில், சென்னை பென்ட் நகர் கடற்கரையில் வளைய சூரிய கிரகணத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் சூரிய கிரகணத்தை மக்கள் பார்க்க, அறிவியல் இயக்கம் தீவிர ஏற்பாடு செய்துள்ளது.
இன்று வளைய சூரியகிரகணத்தை திருப்பூர் நகரில், 7 இடங்கள் உட்பட மாவட்டத்தில் 12 இடங்களில் கிரகணத்தைக் காண தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது
தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் 93% தெளிவாக தெரியும் என்றும், சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில், பாதியளவு கிரகணம் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றிரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. கிரகணம் முடிந்த பின்னர் இன்று நண்பகல் 12 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும், கோயிலை சுத்தம் செய்தபிறகு, மதியம் 2 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வானில் தோன்றும் அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் பகுதி அளவில் தோன்ற தொடங்கியது!
வளைய சூரிய கிரகணத்தையொட்டி, திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் திருப்பள்ளியெழுச்சி பூஜைகளுக்குப் பின்னர், காலை 6 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மதியம் ஒரு மணிக்குப் பிறகே நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகம் முழுவதும் கோயில்களின் நடைகள் அடைக்கப்பட்டுள்ளன.