Southwest Monsoon Chennai Weather Forecasting : தென்மேற்கு பருவமழை இன்று முதல் கேரளாவில் ஆரம்பமாவதால் தொடர்ந்து தமிழகத்திலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை தமிழகம், கேரளா, மற்றும் கர்நாடகாவின் உள்மாவட்டங்களிலும் பருவமழை துவங்குகிறது என்று நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.
இன்று பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் உள்தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மேலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
காற்றின் வேகம்
40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். கேரளா, தெலுங்கானா, மற்றும் வடக்கு கர்நாடகாவின் சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
அனல் காற்று
ஆந்திரா மற்றும் தெலுங்கானா கடற்கரைப் பகுதிகளில் அனல் காற்றின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கும்.
வெயில் எச்சரிக்கை
உங்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நீங்கள் காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உருவாகக்கூடும். வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்த பட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும்.
மேலும் படிக்க : இன்றைய வானிலை : கரூர், சேலம் பகுதிகளில் பரவலாக மழை
நாமக்கலில் நான்கு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை
ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. ஓமலூர், காடையாம்பட்டி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யத்துவங்கியதால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. அதே போல் நாமக்கலில் 4 மணி நேரமும், ஈரோட்டில் 2 மணி நேரமும் கனமழை கொட்டித்தீர்த்தது.
மேலும் படிக்க : சென்னை மக்களை மழை ஏமாற்றக் காரணம் என்ன?