New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/09/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-18.jpg)
Subhasri banner accident video
தனது வாகனத்தில் வரும் சுபஸ்ரீ மீது காற்றில் ஆடிய பேனர் அறுந்து விழுந்து, லாரி விபத்தை ஏற்படும் காட்சி வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது
Subhasri banner accident video
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 22 வயதாகும் சுபஸ்ரீ பொறியியல் பட்டதாரி ஆவார். கந்தன் சாவடியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். எப்போதும் போல் வேலை முடிந்து நேற்று மாலை பள்ளிக்கரணை வழியாக தனது வீடு உள்ள குரோம்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று காற்றில் பறந்து வந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத சுபஸ்ரீ நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது திடீரென அந்த வழியே வேகமாக வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது மோதி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தவிபத்து தொடர்பாக லாரி டிரைவர் மற்றும் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்த வழக்கில் தீர்ப்பளித்த ஐகோர்ட், சம்பந்தப்பட்ட பணியில் கவனக்குறைவு, அலட்சியத்திற்காக செயல்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு குறித்த முழு தகவலையும் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இந்நிலையில், தனது வாகனத்தில் வரும் சுபஸ்ரீ மீது காற்றில் ஆடிய பேனர் அறுந்து விழுந்து, லாரி விபத்தை ஏற்படும் காட்சி வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
I request all the political parties not to keep banners on the roads…???? please stop this immediately. #JusticeForSubhasree #WhoKilledShubashree #BannerkilledSubhasree #BannerKillings #CCTV pic.twitter.com/IV4dWlyYzf
— ViGnEsH HaRi (@vigneshhari1) September 13, 2019
இனியாவது பேனர் கலாச்சாரம் ஒழியுமா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.