தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய சிறப்பு அதிகாரி – ஐகோர்ட்டில் அரசு பதில்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய சிறப்பு அதிகாரியை நியமித்து அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக வணிகவரித்துறை நியமித்தது. பள்ளியில் ஆசிரியை திட்டியதால் முதல் மாடியில் இருந்து குதித்த மாணவி; மருத்துவமனையில் சிகிச்சை தனி அதிகாரியை நியமித்த உத்தரவை […]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய சிறப்பு அதிகாரியை நியமித்து அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக வணிகவரித்துறை நியமித்தது.

பள்ளியில் ஆசிரியை திட்டியதால் முதல் மாடியில் இருந்து குதித்த மாணவி; மருத்துவமனையில் சிகிச்சை

தனி அதிகாரியை நியமித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

மேலும், சேகர் பதவி உயர்வு பெற்று கடந்த ஜனவரி மாதம் பணிமாறுதல் ஆனதால், அந்த பதவிக்கு புதிய சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், சிறப்பு அதிகாரி பதவி காலம் முடிவடைவதாலும், அவர் பணிமாறுதல் செய்யப்பட்டதாலும், அடுத்த ஓராண்டுக்கு
புதிய சிறப்பு அதிகாரியாக பதிவுத் துறை உதவி ஐஜி மஞ்சுளாவை நியமித்து, ஜனவரி 2 ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசு நியமித்த சிறப்பு அதிகாரி பதவி காலம் மார்ச் மாதம் முடிவடைவதால், தயரிப்பாளர் சங்க தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என்று வாதிட்டார்.

நட்சத்திர ஹோட்டலை ரூ.165 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற 3 பலே மோசடி பேர்வழிகள் கைது

தற்போது தமிழக அரசு மேலும் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது சட்டத்திற்கு விரோதமானது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 10 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema producers council election case madras high court

Next Story
சிடிஎஸ் நிறுவன கட்டுமானத்தில் முறைகேடு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவுcognizant constructions fraud case madras high court
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express