Advertisment

Tamil News today updates : உள்ளாட்சித் தேர்தல் - அண்ணா பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.58க்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ. 69.81க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அண்ணா பல்கலைக்கழகம் பணி நியமனம்: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Tamil Nadu breaking news today updates : முரசொலி விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலினை நேரில் ஆஜராக கோரி தேசிய பட்டியல் இன ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். அதனைத்தொடர்ந்து பாஜக பிரமுகர் சீனிவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் உத்தரவு. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Advertisment

சச்சினுக்கே பாடம் கற்றுக் கொடுத்த ஹோட்டல் ஊழியர்... தேடி கண்டுபிடித்த சிட்டிசன்கள்:

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

ஜாமியா மில்லியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். காவல்துறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டங்களால் மதவாதமும் பிரிவினை வாதமும் உருவாகும் என்று கூறியும் நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு டிசம்பர் 23ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடப்பிறப்பிற்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான முழுமையான கட்டுரையை படிக்க

Live Blog

Tamil Nadu breaking news today updates : இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் பார்க்க இந்த இணைப்பில் இணைந்திருங்கள்



























Highlights

    21:58 (IST)18 Dec 2019

    சூரிய கிரகணத்தை காண திருப்பூரில் சிறப்பு ஏற்பாடுகள்

    26 ஆம் தேதி வரவுள்ள சூரிய கிரகணத்தை காண திருப்பூரில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்

    21:58 (IST)18 Dec 2019

    யாருடைய நிர்பந்தமும் இல்லை

    'எந்த மதத்தினரும் பாதிக்கப்படமாட்டர்கள்'

    குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்ததில் யாருடைய நிர்பந்தமும் இல்லை

    * இலங்கை தமிழர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும், அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்

    - அமைச்சர் பாண்டியராஜன் 

    21:16 (IST)18 Dec 2019

    இந்தியா வெற்றி

    விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில்  இந்திய அணி, 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகளில் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்று இந்தியா சமன் செய்துள்ளது. 

    20:59 (IST)18 Dec 2019

    லாட்டரிகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிப்பு

    மாநில அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட லாட்டரிகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிப்பு. லாட்டரிகளுக்கான 28% ஜிஎஸ்டி வரி 2020 மார்ச் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது - மத்திய வருவாய்த்துறை செயலர் பாண்டே அறிவிப்பு 

    20:58 (IST)18 Dec 2019

    அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கையா?

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கையா?

    டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,747 ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும். நாளை பகல் 2 மணிக்குள் விவரங்களை அளிக்க பள்ளிக் கல்வி இயக்குனர் அவசர உத்தரவு

    20:43 (IST)18 Dec 2019

    2வது ஹாட்ரிக்

    மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தல்.

    20:42 (IST)18 Dec 2019

    சோ.தர்மனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

    சாகித்ய அகாடமி விருது பெறவுள்ள எழுத்தாளர் சோ.தர்மனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

    'சூல்' என்ற நாவலுக்காக சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    20:27 (IST)18 Dec 2019

    அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

    ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, டிச.27, 30 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிச.27ம் தேதி நடக்கவிருந்த தேர்வு ஜன.,2ம் தேதியும், டிச.30ம் தேதி நடக்கவிருந்த தேர்வு, ஜன.3ம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    20:11 (IST)18 Dec 2019

    தனக்குத் தானே தீ

    ஒடிசாவைச் சேர்ந்த 25 வயது நபர் புதன்கிழமை மாலை, டெல்லியின் இந்தியா கேட்டில் தனக்குத் தானேதீ வைத்துக் கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த நபர் 80 சதவீதம் தீக்காயங்களுக்கு உள்ளாகி ஆர்.எம்.எல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    20:07 (IST)18 Dec 2019

    62 வயது முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

    கரூர் : 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 62 வயது முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

    19:46 (IST)18 Dec 2019

    நான் ஒரு இந்தியன் - இர்பான் பதான்

    பந்து வீச ஓடி வருகையில் முஸ்லீம் என்றெல்லாம் நினைக்க மாட்டேன் என்றும் முதலில் தான் ஒரு இந்தியன் என்றும் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

    19:45 (IST)18 Dec 2019

    ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி திமுக வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், வருமானவரித்துறை தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் அனைவருக்கும் புதிதாக புகார் அளித்து வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    19:39 (IST)18 Dec 2019

    ரூ.12 ஆயிரம் லஞ்சம்

    நெல்லை தாலுகா அலுவலகத்தில் ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது சர்வேயர் அல்அமீன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது

    19:37 (IST)18 Dec 2019

    வெடிகுண்டு மிரட்டல்

    முதல்வர், துணை முதல்வர் வீடுகளுக்கு தொலைபேசி மூலம் அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் தீவிர விசாரணை

    19:36 (IST)18 Dec 2019

    சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டது ஏன்?

    மதுரை சுற்றுச் சாலையில் புதிதாக மூன்று சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டது ஏன்? - மாநில நெடுஞ்சாலை துறை, மதுரை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

    19:01 (IST)18 Dec 2019

    லட்டரி சீட்டு விற்பனை

    நெல்லை : பாளையங்கோட்டையில் லட்டரி சீட்டு விற்பனை செய்த சுப்பிரமணி (56) என்பவர் கைது, லாட்டரி விற்ற தொகை ரூ.9 ஆயிரத்து 300 பறிமுதல்.

    18:47 (IST)18 Dec 2019

    கொள்கை முடிவின் அடிப்படையிலேயே நிரப்பவேண்டும்

    தமிழக மருத்துவ படிப்புக்கான இடங்களை கொள்கை முடிவின் அடிப்படையிலேயே நிரப்பவேண்டும் என கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

    18:46 (IST)18 Dec 2019

    கண்ணதாசனின் முழு உருவ மெழுகுச்சிலை

    சென்னை : தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கில் 'சென்னையில் திருவையாறு' நிகழ்ச்சியின் 15 ம் ஆண்டு தொடக்க விழாவில் கவிஞர் கண்ணதாசனின் முழு உருவ மெழுகுச்சிலை திறக்கப்பட்டது

    18:46 (IST)18 Dec 2019

    மாநகர பேருந்து ஓட்டுநரை தாக்கிய மாணவர்கள்

    திருவொற்றியூர் - திருவேற்காடு தடத்தில் செல்லும் 159 எண் கொண்ட அரசு மாநகர பேருந்து ஓட்டுநரை, பேருந்தில் பயணித்த மாணவர்கள் தாக்கியதால் பேருந்தை சாலையில் நிறுத்தி போராட்டம்

    18:45 (IST)18 Dec 2019

    190 சம்பவங்கள் ஆக.5ம் தேதிக்கு மேல் நடந்துள்ளது

    காஷ்மீரில் கடந்த ஆண்டு 802 கல்லெறி சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 544ஆக பதிவாகியுள்ளது, இதில் 190 சம்பவங்கள் ஆக.5ம் தேதிக்கு மேல் நடந்துள்ளது - மத்திய உள்துறை அமைச்சகம்

    18:26 (IST)18 Dec 2019

    புளூ கார்னர் நோட்டீஸ் ஏன்?

    சாமியார் நித்தியானந்தாவுக்கு புளு கார்னர் நோட்டீஸ் வழங்க கோரிக்கை. டெல்லி சிபிஐ-இன்டர்போல் அலுவலகத்திற்கு கர்நாடகா போலீசார் கடிதம். தலைமறைவாக உள்ள சாமியார் நித்தியானந்தாவை பிடிக்க கர்நாடக போலீசார் தீவிரம்.

    தலைமறைவாக உள்ள நபரின் இருப்பிடம் குறித்த தகவல்களை கண்டறிய புளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்படும்

    18:23 (IST)18 Dec 2019

    நடிகர் ராஜசேகர் மீது வழக்குப்பதிவு

    போலீஸ் உத்தரவை மீறி வாகனம் ஓட்டியதற்காக நடிகர் ராஜசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 13ஆம் தேதி ராஜசேகர் கோல்கொண்டா பகுதி அருகே காரில் சென்ற போது சாலைக்கு நடுவில் இருக்கும் டிவைடரில் மோதி விபத்து ஏற்பட்டது. விசாரணையில் ராஜசேகர் காரை தாறுமாறாக ஓட்டியது தெரியவந்ததால் அவரது ஓட்டுநர் உரிமத்தை போக்குவரத்து போலீசார் ஆறு மாத்திற்கு ரத்து செய்தனர். இதனையடுத்து நேற்று ஹைதராபாதில் ராஜசேகர் கார் ஓட்டி சென்றதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    18:23 (IST)18 Dec 2019

    ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும்

    தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும். வணிகர்கள் பயன்பெறும் வகையில் தற்போது இயங்கிவரும் உதவி மையங்கள் தமிழ் மற்றும் பிராந்திய மொழிகளிலும் இயங்க வசதிகள் செய்ய வேண்டும் என டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்.

    18:21 (IST)18 Dec 2019

    நடிகர் வடிவேலு அதிரடி முடிவு : புத்தாண்டில் புதிய பரிணாமம்

    தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இணையதள தொடர்கள் மீது வடிவேலுவின் கவனம் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் இணையதள தொடர் மக்கள் மத்தியில், வரவேற்பை பெற்றுள்ளதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

    முன்னணி நட்சத்திரங்கள் இணையதள தொடரில் களமிறங்கியுள்ள நிலையில், வடிவேலுவும் இது தொடர்பாக புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இணையதள தொடரில் நடிப்பது தொடர்பாக புத்தாண்டில் அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளித்திரையில் வடிவேல் வருவாரா எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இணையதள தொடர் மூலம் நம் செல்போனுக்கே வர உள்ளார், வடிவேல்...

    18:20 (IST)18 Dec 2019

    ரவிச்சந்திரனின் பரோல் விண்ணப்பத்தை நிராகரிப்பது ஏன்?

    ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனின் பரோல் விண்ணப்பத்தை நிராகரிப்பது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி

    ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனின் பரோல் விண்ணப்பத்தை சிறைத்துறை நிராகரிப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க உத்தரவிடகோரி அவரது தாய் ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனுவில் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் ரவிச்சந்திரனின் பரோல் விண்ணப்பம் தொடர்பாக தமிழக சிறைத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

    18:18 (IST)18 Dec 2019

    தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

    உதவி சுற்றுலா அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

    tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்

    17:57 (IST)18 Dec 2019

    நித்தியானந்தாவுக்கு நோட்டீஸ்

    நித்தியானந்தாவுக்கு எதிராக புளூகார்னர் நோட்டீஸ்.

    வெளிநாட்டில் உள்ளாரா என கண்டறிய இன்டர்போலுக்கு கடிதம்.

    17:56 (IST)18 Dec 2019

    ஊரக உள்ளாட்சித் தேர்தல் - வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

    தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா பிரச்சாரம் செய்தார்.

    சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள், துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர், வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

    சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்துகுட்பட்ட முருங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் 92 வயது மூதாட்டி கனகவல்லி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

    17:48 (IST)18 Dec 2019

    திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும்

    குடியுரிமை சட்டதிருத்த ம,மசோதாவிற்கு எதிரான திமுகவின் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    17:44 (IST)18 Dec 2019

    தீவிரவாதிகள் ஊடுருவியதாக வெளியான தகவல் : சேலத்தின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு

    தீவிரவாதிகள் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் அடிப்படையில் சேலம் மாநகரின் முக்கிய பகுதிகளான விமான நிலையம், ரயில் ​​நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக முதல்வர் வரும் சாலை எங்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் உரிய சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

    17:13 (IST)18 Dec 2019

    மாணவர்கள் நேற்று இரவில் இருந்து சாப்பிடவில்லை

    குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் சந்தித்தார்.

    சென்னை பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் நுழைவாயில் வெளியே நின்று பேசினார் கமல்ஹாசன்.

    பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல், "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் நேற்று இரவில் இருந்து சாப்பிடவில்லை. மாணவர்களை அகதிகளாக அரசு மாற்றி வருகிறது" என்று குற்றம் சாட்டினார்.

    16:49 (IST)18 Dec 2019

    மாணவர்களை சந்திக்கிறார் கமல்ஹாசன்

    குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக, தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேச உள்ளார்.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, மக்கள் நீதி மய்யம் கட்சி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    16:28 (IST)18 Dec 2019

    நடிகர் அஜித்தின் வீட்டில் வனத்துறையினர் சோதனை

    நடிகர் அஜித் குமாருக்கு சொந்தமான வீடு சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ளது. இந்த வீட்டில் அஜித்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா வசித்து வருகிறார். சுரேஷ் சந்திரா, இந்த வீட்டில் மலைப்பாம்பு வளர்த்து வருவதாகவும், அதற்கு உணவாக தினமும் 5 எலிகள் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாயின. இதனையடுத்து, வனத்துறையினர் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். நடிகர் அஜித் குமாருக்கு சொந்தமான வீட்டில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    15:54 (IST)18 Dec 2019

    சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

    2019ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சோ. தர்மனுக்கு வழங்கப்பட உள்ளது.  அவர் எழுதிய சூல் நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    14:31 (IST)18 Dec 2019

    நிர்பயா தாயார் மகிழ்ச்சி

    குற்றவாளி அக்‌ஷய் குமார் சிங்கின் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக  நிர்பயாவின் தாய் தெரிவித்துள்ளார்.   

    13:45 (IST)18 Dec 2019

    நிர்பயா தூக்குத் தண்டனை - வழக்கின் பின்னணி 3/3

    இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசாக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வானது தூக்குத் தண்டனையை நீக்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பையும் மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று அக்ஷய் குமார் சிங் மனுவை தாக்கல் செய்திருந்தார். இன்று வழக்கப்பட்ட தீர்பபிலும் உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்திருக்கிறது.

    13:40 (IST)18 Dec 2019

    நிர்பயா வழக்கு - வழக்கின் பின்னணி 2/2

    இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா,அக்‌ஷய் தாகுர், ராம் சிங் மற்றும் ஒரு சிறுவன் என 6 பேரை கைது செய்து செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தில்லி பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் மற்றொருவர், சிறுவன்(18 வயதுக்கும் குறைவானவர்) என்பதால் அவரை 3 ஆண்டுகள் கூர்நோக்குப் பள்ளியில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து, குற்றவாளிகள் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே குற்றவாளிகளில் ஒருவரான ராம் சிங் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. தில்லி உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவர்களுக்கு பெருநகர நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையையும் உறுதிசெய்வதாக தீர்ப்பளித்தது.

    13:30 (IST)18 Dec 2019

    நிர்பயா வழக்கு - தூக்குத் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

    நிர்பயா வழக்கில் அக்ஷய் குமார் சிங்கின் சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.  அக்ஷய் குமார் சிங் 2012 டெல்லி கூட்டு பாலியில் வழக்கின் குற்றவாளி ஆவார்.  வழக்கின் பின்னணி:  தில்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இரவு மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் பயணம் செய்த 6-பேர் அந்த மாணவியையும், அவரது நண்பரையும் கடுமையாக தாக்கினர். அதோடு மட்டுமல்லாமல், அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பேருந்தில் இருந்து வெளியே வீசினர். அந்த மாணவியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நிர்பயா என அழைக்கப்படுகிறார்.

    13:25 (IST)18 Dec 2019

    குடியுரிமை திருத்தம் சட்டம் - வழக்கு 22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    குடியுரிமை திருத்தம்  சட்டத்தின் அரசியலமைப்பு மூலம் ரத்து  செய்ய வேண்டும் என்ற வழக்கில் , உச்சநீதிமன்றம் மத்திய அரசிற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ஆனால், அந்த சட்டத்தை தற்காலிகமாக நிறுத்து வைக்கவும் மறுத்துவிட்டது.

    தலைமை நீதிபதி எஸ் ஏ போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், அடுத்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி இந்த வழக்கின்  விசாரணயை ஒத்திவைத்தது . 

    12:41 (IST)18 Dec 2019

    குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

    இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் நிறைவுற்றது. குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வருகின்ற திங்கள் கிழமை அன்று சென்னையில் பேரணி நடத்த நடத்தவும் முடிவு.

    12:32 (IST)18 Dec 2019

    ஜெய்பூர் குண்டு வெடிப்பு வழக்கு

    2008ம் ஆண்டு ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு. ஒருவர் மட்டும் விடுதலை

    12:04 (IST)18 Dec 2019

    மாநில நிதி அமைச்சர்கள் மாநாடு

    ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் மாநில நிதி அமைச்சர்கள் மாநாட்டில் அறிவித்துள்ளார். மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஓ. பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    12:01 (IST)18 Dec 2019

    இலங்கை தமிழர்கள் குறித்து பேச திமுகவுக்கு தகுதி இல்லை - முதல்வர் பழனிசாமி

    குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள எந்த மத்தினருக்கும் பாதிப்பு இல்லை என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். குடியுரிமை சட்டம் குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்திவிட்டது என்றும் அவர் அறிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை அளிக்க வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு. இது குறித்து ஏற்கனவே பிரதமரிடம் வலியுறுத்துவிட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    11:35 (IST)18 Dec 2019

    குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மனுக்கள் குறித்து ஜனவரி 2வது வாரத்திற்குள் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

    11:32 (IST)18 Dec 2019

    மாநில நிதி அமைச்சர்கள் மாநாடு - ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்பு

    பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் மாநாடு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழகம் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு.

    11:16 (IST)18 Dec 2019

    டெல்லி வடகிழக்கு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுவதை ஒட்டி டெல்லி வடகிழக்கு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    10:52 (IST)18 Dec 2019

    வேட்பாளரின் பிரியாணி விருந்து : தேர்தல் அதிகாரிகள் சோதனை

    திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வளர்மதி வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்தும், பணப்பட்டுவாடா செய்வதாகவும் புகார்கள் வந்ததை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    10:47 (IST)18 Dec 2019

    அண்ணா அறிவாலயத்தில் துவங்கியது அனைத்து கட்சி கூட்டம்!

    இன்று திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. 

    10:34 (IST)18 Dec 2019

    பழியை துடையுங்கள் முதல்வரே - எம்.பி. ட்வீட்

    மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் பக்கத்தை டேக் செய்து உங்கள் தலைவர்கள் வழியிலிருந்து தடம் மாறலாமா? குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என்ற அறிவித்து தமிழகத்தின் மீதான பழியை துடையுங்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.

    10:33 (IST)18 Dec 2019

    டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்றுக்குழு

    காவிரி ஒழுங்காற்றுக்குழு இன்று டெல்லியில் நவீன் குமார் தலைமையில் நடைபெறுகிறது

    10:24 (IST)18 Dec 2019

    புதுக்கோட்டை திருமயம் முன்னாள் எம்.எல்.ஏ கட்சியில் இருந்து நீக்கம்

    புதுக்கோட்டை திருமயம் முன்னாள் எம்.எல்.ஏ ஆலவயல் சுப்பையா மற்றும் அவருடைய மகன் முரளிதரன் ஆகியோரை திமுகவில் இருந்து நீக்கி அதிரடி. ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.10 லட்சம் கேட்டதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை.

    10:08 (IST)18 Dec 2019

    38வது ஜி.எஸ்.டி கவுன்சில் இன்று

    38வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இன்று டெல்லியில் 38வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது.

    10:07 (IST)18 Dec 2019

    மாணவர்கள் போராட்டம் காரணமாக சென்னை மாநில கல்லூரிக்கு இன்று விடுமுறை

    நிர்பயா பாலியல் குற்றவாளியான அக்சய் குமார் சிங்கின் மறுசீராய்வு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. நேற்றைய அமர்வில் இருந்து விலகிய தலைமை நீதிபதி, இந்த விசாரணையை மற்றொரு அமர்வு விசாரிக்கும் என்று கூறியிருந்தார்.

    10:01 (IST)18 Dec 2019

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை உச்ச நீதிமன்றத்தில் 59 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெய்ராம் ரமேஷ், மஹூவா மொய்த்ரா, அசாசுதீன் ஓவைஸி ஆகியோரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அசோம் கான பரிசாத், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அசாம் வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியோரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது. 

    09:53 (IST)18 Dec 2019

    மாணவர்களை பாதுகாக்கவே வளாகத்துக்குள் நுழைந்தோம் - டெல்லி காவல்துறை

    ஜாமியா மில்லியா பல்கலை கழக போராட்டத்தின் போது பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஏன் காவல்துறை நுழைந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களை பாதுகாக்கவே வளாகத்துக்குள் நுழைந்தோம் என டெல்லி காவல்துறை எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளது.

    09:49 (IST)18 Dec 2019

    பவானி சாகர் அணையின் நீர்மட்டம்

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 104.83 அடியாக உள்ளது. தற்போதைய நீர்இருப்பு - 32.6 டிஎம்சி ஆகும். நீர்வரத்து - 2,213 கனஅடியாக உள்ளது. நீர் வெளியேற்றம்- 2,200 கனஅடியாக உள்ளது.

    09:43 (IST)18 Dec 2019

    மேட்டூர் அணையின் நீர்மட்டம்

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 120 அடியாக உள்ளது. தற்போதைய நீர்இருப்பு - 93.4 டிஎம்சி ஆகும். நீர்வரத்து - 4,660 கனஅடியாக உள்ளது. நீர் வெளியேற்றம்- 4,400 கனஅடியாக உள்ளது.

    09:35 (IST)18 Dec 2019

    அனைத்து கட்சி கூட்டம்

    திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. காலை 10:30 மணி அளவில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. மேலும் இந்த சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வருகிறது.

    09:35 (IST)18 Dec 2019

    அதிபர் ட்ரெம்ப் பதவி நீக்கப்படுகிறாரா?

    அமெரிக்க அதிபர் ட்ரெம்புக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் மீது இன்று பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

    Tamil Nadu breaking news today updates : நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராகவும் பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 16ம் தேதி கல்கத்தாவில் மாபெரும் பேரணியாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், இந்த சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. கேரளாவில் பினராயி விஜயன் மற்றும் ரமேஷ் சென்னிதலா தலைமையில் ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று (17/12/2019) எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குடியரசு  தலைவரை நேரில் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக புகார் ஒன்றை முன் வைத்தனர். முழுமையான செய்திகளைப் படிக்க : சோனியா தலைமையில் திரண்ட எதிர்க்கட்சிகள்: குடியுரிமை சட்டம் குறித்து ஜனாதிபதியிடம் புகார்
    Donald Trump
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment