தமிழ்நாடு தேர்தல் ஆணையர சத்ய பிரதா சாகு திங்கள்கிழமை (ஜூன் 3, 2024) சென்னையில் பேட்டியளித்தார். அப்போது, 2024 மக்களவை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் தொடர்பான விவரங்கள் எப்போது வெளியாகும் என்பது குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு பதிலளித்தார்.
இது குறித்து சத்ய பிரதா சாகு, “தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும், பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுப் பார்வையாளர்கள் தமிழகம் வந்துள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் கடைசி சுற்றுக்கு முன் தபால் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகும்” என்றார்.
இதையும் படிங்க : NTK Lok Sabha Live Updates 2024: கவனம் பெறுமா நாம் தமிழர்?
2024 மக்களவை தேர்தல் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவுடன் தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4 2024) எண்ணப்படுகின்றன. அதிகாலை முதலே வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் முதலில் தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கிடையில் தபால் வாக்குகளில் பதிவான எண்ணிக்கை விவரங்கள் கடைசி சுற்றுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Tamilnadu Loksabha Election Results 2024 Live Updates: தமிழகத்தில் வெல்லப் போவது யார்?
Lok Sabha Election Result 2024 Live Updates: மத்தியில் ஆட்சி அமைக்க போவது யார்? இன்று வெளியாகும் மக்களவை தேர்தல் முடிவுகள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“