Advertisment

தமிழகத்துக்கு ரேபிட் கருவி வழங்கிய சீன நிறுவனம் - முன்பே எச்சரித்த பிரிட்டன்

பிரிட்டன் ஊடகத்தில் வெளியான தகவலின் படி, வாங்கப்பட்ட கருவிகளில் பல சரியாக முடிவை காட்டவில்லை என்பதனால், அவற்றை திருப்பியளிக்க பிரிட்டன் முயற்சி செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu kits came from a Chinese company faulted by britain

Tamil Nadu kits came from a Chinese company faulted by britain

Corona Rapdi Test Kit Updates: தவறான முடிவுகள் காட்டுவதாக சொல்லி, இந்தியா முழுவதும் ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநிலம் முழுவதும் 34,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த கருவி ஏற்கனவே இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்டு, அங்கும் இதேபோன்ற சிக்கல் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Advertisment

சீனாவைச் சேர்ந்த குவாங்சூ வோன்ட்ஃபோ பயோடெக் லிமிட்டட் நிறுவனத்தில் இருந்து தான் தமிழகம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை வாங்கியது. இதே நிறுவனத்திடம் இருந்து தான் மார்ச் மாதம் முதல் வாரத்தில் பிரிட்டன் 2 மில்லியன் கருவிகளை வாங்கியது.

அம்மாவின் ஆசை : தங்கையை அழைத்து வர 80 கி.மீ பழைய சைக்கிளில் பயணமான அண்ணன்

பிரிட்டன் ஊடகத்தில் வெளியான தகவலின் படி, வாங்கப்பட்ட கருவிகளில் பல சரியாக முடிவை காட்டவில்லை என்பதனால், அவற்றை திருப்பியளிக்க பிரிட்டன் முயற்சி செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் ஸ்லாக், கடந்த மார்ச் 6ம் தேதி, "முடிவுகள் சரியாக தெரியாத காரணத்தால் கிட்கள் திருப்பியளிக்கப்பட்டு, முடிந்தவரை பணத்தை திரும்பப் பெறப்படும்" என்று கூறியதாக டெய்லி மெய்ல் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த நாள் மார்ச் 7ம் தேதி, அதே சீன நிறுவனத்திடம் இருந்து 24,000 ரேபிட் டெஸ்ட் கருவிகளை ஆர்டர் செய்கிறது. மேலும் 12,000 ரேபிட் கருவிகளை ஐசிஎம்ஆர் தமிழகத்திற்கு வாங்கியதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

TNMSC தலைவர் உமாநாத் கூறுகையில், "புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி வாயிலாக ஐசிஎம்ஆர் அங்கீகரித்த நிறுவனத்திடம் இருந்து தான் ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு தமிழகம் ஆர்டர் கொடுத்தது. ஏப்ரல் 2ம் தேதி அந்த சீன நிறுவனத்துக்கு ஐசிஎம்ஆர் அங்கீகாரம் கொடுத்ததாக ஆவணங்கள் காட்டுகின்றன.

’என் கணவரின் இறுதி ஆசையை நிறைவேற்றுங்கள்’: மருத்துவர் சைமனின் மனைவி கண்ணீர்

சீன நிறுவனமான வோன்ட்ஃபோ இதுவரை மெயில்களுக்கு பதிலளிக்கவில்லை. இதுபோன்ற கருவிகளை விற்க முதல் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிறுவனம் என்று நிறுவனத்தின் வலைத்தளம் கூறுகிறது

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையின் தலைவர் ராம் ராஜசேகரன் கூறுகையில், "65% வரை மட்டுமே இந்த ரேபிட் சோதனை கருவிகளின் முடிவுகள் தெளிவாக இருக்கும், தொற்றால் பாதிக்கப்பட்டவரின் உடலில் இருக்கும் ஆன்டிபாடிகளின் இருப்பை தான் ரேபிட் டெஸ்ட் உறுதிப்படுத்தும். நோயின் ஆரம்பக் கட்ட வீரியத்தை கண்டறிவதில் முடிவுகள் நிலையற்றதாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment