Tamil Nadu news today: ‘திமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது’ – கே.எஸ்.அழகிரி

chennai weather: கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. இந்நிலையின் இன்று வழக்கம் போல் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

By: Jun 22, 2019, 10:42:47 PM

Tamil Nadu news today updates : மழை வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் அதிமுகவினர் யாகம் நடத்தி வருகின்றனர். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடந்த வருணஜப மகயாகத்தில் அமைச்சர் காமராஜ் பங்கேற்றார். அதே போல் நாமக்கல் ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த யாகத்தில் அமைச்சர் சரோஜா யாகத்தில் கலந்துக் கொண்டார்.

Tamil Nadu news today updates :

உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்  என்று திருச்சியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு பரபரப்பு கருத்தை பதிவு செய்துள்ளார்.

Thalapathy vijay birthday :

இன்று நடிகர் விஜய்யின் 45 ஆவது பிறந்த நாள் அவரின் ரசிகர்களால்  உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள விஜய்யின் ரசிகர்கள் தளபதி பிறந்த நாளை அதகளப்படுத்தி வருகின்றனர். விஜய்யின் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ரசிகர்கள்  பல்வேறு பகுதிகளில் அன்னதானம், ரத்த முகாம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.

விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை மேலும் தெரிந்துக் கொள்ள

Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, fuel price, political events : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழும் முக்கிய செய்திகள் தொகுப்பினை நீங்கள் இங்கு படித்துக் கொள்ளலாம்.
21:10 (IST)22 Jun 2019
என்னால் வாக்களிக்க இயலவில்லை - ரஜினிகாந்த்

நடிகர் சங்க தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், "மும்பையில் படப்பிடிப்பில் உள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன். தபால்வாக்கு இன்று மாலை 6.45க்கு வந்ததால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று டேஹ்ரிவித்துள்ளார்.

20:27 (IST)22 Jun 2019
தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் இல்லை - ஓ.பி.எஸ்

தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறைதான் ஏற்பட்டுள்ளது குடிநீர் பஞ்சம் ஏற்படவில்லை என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார், மேலும், மழை வேண்டி யாகம் நடத்தியது கட்சி சார்பில் தான். அரசின் சார்பாக நடைபெறவில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நடைபெறுவது உட்கட்சி பிரச்னை" என்றும் தெரிவித்திருக்கிறார்.

19:17 (IST)22 Jun 2019
புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்க தேர்தல்

சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நாளை நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுகிறது. நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி விஷால் கொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க மயிலாப்பூர் காவல் துணை ஆணையருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18:27 (IST)22 Jun 2019
'பிகில்' தேர்ட் லுக் ரிலீஸ்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் தேர்ட் லுக் இன்று ரிலீசாகியுள்ளது. ஏற்கனவே, ஃபர்ஸ்ட் லுக், செகன்ட் லுக் வெளியிடப்பட்ட நிலையில், இன்று தேர்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. 

17:43 (IST)22 Jun 2019
தமிழகத்தில் 6 நதிகளில் கடும் மாசு - மத்திய அரசு

தமிழகத்தில் 6 நதிகள் கடுமையாக மாசடைந்துள்ளன என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. காவிரி, மணிமுத்தாறு, தாமிரபரணி, பவானி, சரபங்கா, வசிஷ்டா ஆகிய 6 நதிகள் கடுமையாக மாசடைந்துள்ளன.

16:19 (IST)22 Jun 2019
பொள்ளாச்சி வழக்கு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவையில் இருந்து, சேலம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

15:57 (IST)22 Jun 2019
அமைச்சர் சி.வி சண்முகம் கேள்வி!

தமிழகத்தில் இருந்து கொண்டு, மற்றொரு ஊருக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று கூறுபவர்களுக்கு, சமுதாயம் மீது என்ன அக்கறை உள்ளது? - துரைமுருகனுக்கு, அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி.  வேலூரில் இருந்து  சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கு  திமுக பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்துக்கு அதிமுக அமைச்சர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

15:23 (IST)22 Jun 2019
சுவாமி சங்கரதாஸ் அணியினர் பேட்டி!

”தபால் வாக்குப்பதிவுக்கு இன்னும் அவகாசம் வழங்க வேண்டும். அஞ்சல் துறை மூலமாக, நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இன்னும் படிவம் சென்றடையவில்லை. நடிகர் ரஜினிக்கே இன்னும் கிடைக்கவில்லை.  நடிகர் சங்க தேர்தல் எப்போது நடைப்பெற்றாலும் அதை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயார்” என்று சென்னை நந்தனத்தில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில்  சுவாமி சங்கரதாஸ் அணியினர் தெரிவித்துள்ளனர்.

15:00 (IST)22 Jun 2019
சுவாமி சங்கரதாஸ் அணியினர் செய்தியாளர் சந்திப்பு.

14:30 (IST)22 Jun 2019
chennai water crisis : திமுக கண்டன ஆர்பாட்டம்!

தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி 24ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன  ஆர்ப்பாட்டம்.  சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

14:05 (IST)22 Jun 2019
அதிமுக அமைச்சர்கள்!

வேலூரில் இருந்து  ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படும்  என  தமிழக முதல்வர்  எடப்பாடி  அறிவிப்புக்கு, திமுக பொருளாளர் துரைமுருகன்  போராட்டம் வெடிக்கும் என கருத்து தெரிவித்திருந்தார்,இதற்கு அதிமுக அமைச்சர்கள்  விளக்கம் அளித்துள்ளனர். “ ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் வராது”  என்று அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார். அதே போல்," சென்னை நீர் பற்றாக்குறையை போக்கவே வேலூரில் இருந்து ரயில் மூலம் நீர் கொண்டுவரப்படுகிறது. இதனால் வேலூர் மக்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படாது” என்று அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். 

13:05 (IST)22 Jun 2019
Nadigar sangam election : நடிகர் சங்க தேர்தல் வழக்கு இன்று விசாரணை!

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க கோரிய நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  விஷால் தாக்கல் செய்த மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்கின்றனர். நாளை நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதே சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. 

12:51 (IST)22 Jun 2019
Nadigar sangam election : துணைமுதல்வரை சந்தித்த பாண்டவர் அணியினர்!

சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன், பாண்டவர் அணியை சேர்ந்த நாசர், ராஜேஷ், லதா, சச்சு உள்ளிட்டோர் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடக்கும் நடிகர் சங்க தேர்தல் நியாயமாக நடைபெறவும், உரிய பாதுகாப்பு அளிக்கவும் துணை முதல்வரிடம் வலியுறுத்தியதாகவும் பாண்டவர் அணியினர் தெரிவித்துள்ளனர். 

12:22 (IST)22 Jun 2019
dmk protest updates :துரை முருகன் பேட்டி!

வேலூரில் இருந்து ரயிலில் சென்னைக்கு நீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் .சட்டப்பேரவை கூட்டத் தொடரில்  தண்ணீர் பிரச்சனை குறித்து திமுக எடுத்துரைக்கும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  நேற்றைய தினம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி தெரிவித்திருந்த நிலையில்   துரைமுருகன் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார். 

11:57 (IST)22 Jun 2019
Tamil Nadu news : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

தண்ணீர் பிரச்சினை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதை பள்ளி நிர்வாகம் உறுதி  செய்த பின்பே அங்கீகாரம் வழங்கப்படுகிறது  அப்படி இருக்கையில் தண்ணீர் இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

11:51 (IST)22 Jun 2019
அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள்!

மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் ரூ1.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார் . தர்மபுரி, ஈரோடு, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ219.52 கோடி மதிப்பிலான 43 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.   

11:47 (IST)22 Jun 2019
Tamil Nadu news today : கே.என்.நேரு பேச்சு!

உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது? - தண்ணீர் பிரச்னையை கண்டித்து திருச்சியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு இவ்வாறு பேசி இருக்கிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

11:34 (IST)22 Jun 2019
dmk protest : திமுக போராட்டம்!

தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை வைத்து திமுக அரசியல் செய்யவில்லை அதிமுக அரசு குடிமராமத்து பணிகளை செய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையே மக்களுக்கு புரிய வைக்கிறோம் என்று திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியன் போராட்டத்தில் பேசி வருகிறார். 

11:32 (IST)22 Jun 2019
Tamil nadu news: அதிமுக யாகம்!

சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைப்பெற்றது.  கோவை பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் யாகம் நடந்து வருகிறது. 

Tamil Nadu news today live updates : தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை பிரதான பிரச்சனையாக பார்க்கப்பட்டு வருகிறது. நேற்று நடைப்பெற்ற குடிநீர் பிரச்சனை குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழகத்திற்கு தண்ணீர் பிரச்சனையை போக்க 300 கோடி ஒதுக்கீடப்படுவதாக முதலவர் எடப்பாடி அறிவித்தார்.

read more.. நேற்றைய நிகழ்வுகள்.

இன்றைய தினம் சென்னையில் குடிநீர் பிரச்சனையை போக்க திமுக சார்ப்பில் பல்வேறு இடங்களில் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. அதே போல் அதிமுக சார்ப்பில் மழைக்கு வேண்டி கோயில்களில் யாகம் நடைப்பெற்று வருகிறது. நாளைய தினம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ளது.

இதுப்போன்ற தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள், விவாதங்கள், உடனடி நிகழ்வுகள் போன்ற அனைத்து விதமான செய்திகளை இந்தியன் எக்ஸ்பிர்ஸ் தமிழ் லைவ் பக்கத்தில் நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

இன்றைய வானிலை நிலவரம்

Web Title:Tamil nadu news live updates chennai rains water scarcity political events sports weather actor vijay birthday celebration

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X