Advertisment

Tamil Nadu news today updates : பொதுச் செயலாளர் அன்பழகனை சந்தித்து வாழ்த்துப் பெற்ற உதயநிதி ஸ்டாலின்!

Tamil Nadu Assembly Session : நேற்றைய சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today updates : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கியமான நிகழ்வுகளையும் நீங்கள் இந்த ஒரே இணைப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம். மணிக்கு மணி துல்லியமான அரசியல் நிகழ்வுகள், தலைவர்களின் அறிக்கைகள், நீதிமன்ற உத்தரவுகள், பங்குச்சந்தை வர்த்தகம், தங்கம் வெள்ளி விலை நிலவரம், பெட்ரோல் டீசல் விலை மாற்றம், சினிமா உலகம் என தமிழகத்தை சுற்றி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் உடனுக்குடன் உங்கள் கையில். இணைந்திருங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் லைவ் அப்டேஸுடன்.

Advertisment

நேற்றைய நிகழ்வுகளின் ஹைலைட்ஸ்

தமிழகத்தில் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம், எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக வாக்களித்த 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற திமுகவின் வழக்கு போப்டே, கவாய் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்விற்கு வந்தது. ஆனால் தேதி குறிப்பிடாமல் அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்று 2017ம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் அறிவித்த அறிவிப்பை தொடர்ந்து முதல்நிலையாக ஆங்கிலம் தவிர்த்து, இந்தி, கன்னடம், அசாமி, தெலுங்கு, மற்றும் ஒடியா மொழிகளில் தீர்ப்பினை பெறலாம் என்ற அறிவிப்பு வெளியானது. அதில் தமிழ் இல்லாத காரணத்தால் தலைவர்கள் தங்களின் கருத்தினை பதிவு செய்தனர்,

திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது போன்ற பல்வேறு நேற்றைய நிகழ்வுகளை நீங்கள் படிக்க

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, political events, water scarcity : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்














Highlights

    20:26 (IST)04 Jul 2019

    அன்பழகனிடம் வாழ்த்துப் பெற்ற உதயநிதி

    திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை சென்னையில் சந்தித்து வாழ்த்து பெற்றார் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    19:45 (IST)04 Jul 2019

    உதயநிதிக்கு மண்டியிட்ட திமுக - டிரெண்டாகும் ஹேஷ்டேக்

    உதயநிதிக்கு மண்டியிட்ட திமுக என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. திமுக இளைஞரணி செயலாளராக இன்று உதயநிதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஹேஷ்டேக் இந்திய டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

    19:21 (IST)04 Jul 2019

    படை சூழ அறிவாலயம் வந்திறங்கினார் உதயநிதி!

    அண்ணா அறிவாலயம் வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். தொண்டர்கள் படை சூழ அவர் அறிவாலயம் வந்திறங்கினார். அன்பில் மகேஷ் உள்ளிட்ட திமுக பல நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    19:15 (IST)04 Jul 2019

    தொண்டர்களின் உற்சாக கொண்டாட்டம் (வீடியோ)

    உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அண்ணா அறிவாலயத்தின் திமுக தொண்டர்கள், இனிப்புகள் வழங்கி மேள தாளங்கள் முழங்க கொண்டாடி வருகின்றனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளம் வழங்கும் அதன் பிரத்யேக வீடியோ இதோ,

    18:44 (IST)04 Jul 2019

    உதயநிதிக்கு கே.எஸ்.அழகிரி வாழ்த்து

    திமுக தலைவர் ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    18:42 (IST)04 Jul 2019

    ஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் ஆதரவு

    மக்களவையில் ஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆதார் திட்டத்தை பிரதமர் மோடி திறம்பட செயல்படுத்தி உள்ளார் என அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் பாராட்டியுள்ளார்.

    17:55 (IST)04 Jul 2019

    உதயநிதி ஸ்டாலின் தலைமையில் முதல் கூட்டம்

    திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், வரும் 6ம் தேதி உதயநிதி தலைமையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது

    17:33 (IST)04 Jul 2019

    அறிவாலயம் விரையும் உதயநிதி

    திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தாய் துர்கா ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார் உதயநிதி ஸ்டாலின். அதைத் தொடர்ந்து அவர் அண்ணா அறிவாலயம் செல்லவிருக்கிறார். இதற்கு முன் எத்தனையோ முறை அண்ணா அறிவாலயம் சென்றிருக்கும் உதயநிதி, இப்போது முதன் முறையாக கட்சியின் அதிகாரப்பூர்வ நிர்வாகியாக அறிவாலயம் செல்கிறார்.

    17:00 (IST)04 Jul 2019

    வாக்குறுதி மட்டும் போதாது; செயல்பாடு இருக்கணும் - ஐகோர்ட்

    நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுகிறோம் என வாக்குறுதி அளித்து கொண்டே இருக்க வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. விலக்கு பெறுவதில் தீர்க்கமாக இருந்தால் அதில் கவனத்தை முழுமையாக செலுத்துங்கள் என நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

    16:58 (IST)04 Jul 2019

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் உயர்வு - அமைச்சர் தங்கமணி

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் முறையே ரூ.2000 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும்; ஊதிய உயர்வு ஏப்ரல் 2019 முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

    16:13 (IST)04 Jul 2019

    வெள்ளக் கோவில் சாமிநாதனுக்கு புதிய பொறுப்பு

    திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று நியமனம் செய்யப்பட்ட நிலையில், அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட  வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் திமுகவின் உயர் நிலை செயல்திட்டக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    16:00 (IST)04 Jul 2019

    உதயநிதி ஸ்டாலின் நியமனம் - கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வாழ்த்து

    திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    15:57 (IST)04 Jul 2019

    உதயநிதி ஸ்டாலின் நியமனம் மகிழ்ச்சியான செய்தி - துரைமுருகன்

    திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உதயநிதிக்கு கட்சி பிரமுகர்கள், மற்ற கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    துரைமுருகன் : உதயநிதியின் தேர்தல் பிரசாரங்களை பார்த்து நான் வியந்து போனேன் - துரைமுருகன் . சொல்ல வேண்டிய கருத்தை கேட்பவர்கள் இதயத்தில் பதியும்படி பேசுவார் உதயநிதி.

    தந்தையை போலவே இளைய தலைமுறையினரை ஈர்ப்பார் உதயநிதி - துரைமுருகன் * ஸ்டாலினின் மகன் என்கிற செல்வாக்கை தாண்டி ஆற்றல்மிக்கவர் உதயநிதி. உதயநிதிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது எனக்கு மட்டுமல்ல கட்சியில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

    15:34 (IST)04 Jul 2019

    வெள்ளக்கோவில் சாமிநாதன் விடுவிப்பு - க.அன்பழகன்

    திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து வெள்ளக்கோவில் சாமிநாதன் விடுவிக்கப்பட்டுள்ளார். திமுக சட்டவிதி 18, 19 பிரிவுகளின்படி இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்; ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்கள் உதயநிதியுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

    15:12 (IST)04 Jul 2019

    இளைஞரணி செயலாளரானார் உதயநிதி

    திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். 

    13:58 (IST)04 Jul 2019

    அமமுகவுக்கு துணை பொதுச்செயலாளர்கள் நியமனம்

    அமமுக துணை பொதுச்செயலாளர்களாக பழனியப்பன் மற்றும் ரெங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாளராக வெற்றி வேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொளை பரப்பு செயலாளராக சி.ஆர். சரஸ்வதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    13:09 (IST)04 Jul 2019

    Vellore Lok Sabha Election 2019 Date announced

    நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல்களில் 543 தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தொகுதியின் தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு. 

    13:06 (IST)04 Jul 2019

    Water Scarcity Kiran Bedi Tweet

    கிரண் பேடி ட்வீட் விவகாரம் : தமிழக தண்ணீர் பிரச்சனைக்கு கிரண்பேடி அவருடைய கருத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர் பதில் அனுப்பியதாக மக்களவையில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்.

    13:04 (IST)04 Jul 2019

    வங்கித் தேர்வுகளை இனி 13 மாநில மொழிகளில் எழுதலாம் - நிர்மலா சீதாராமன்

    வங்கித் தேர்வுகளை இனி 13 மாநில மொழிகளில் எழுதலாம் என மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் தவிர்த்து 

    அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, மற்றும் உருது ஆகிய மொழிகளில் இனிமேல் வங்கித் தேர்வுகளை எழுதிக் கொள்ள இயலும்.

    12:32 (IST)04 Jul 2019

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிய ஹரிஷ் ராவத்

    உத்திரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக அறிவிப்பு. ராகுல் காந்தியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் ஒருவர் பதவி விலக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    12:14 (IST)04 Jul 2019

    2 லட்சம் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு முறை அமைக்கப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர்

    சென்னை குடிநீர் தட்டுப்பாட்டினை குறைக்க 2 லட்சம் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு முறை அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், சீர் செய்யவும் பல்வேறு திட்டங்கள் எடுக்கப்பட்டு வருகிறது என்று சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

    12:03 (IST)04 Jul 2019

    பாலியல் தொல்லையால் சி.எம்.டி.ஏ பெண் ஊழியர் ராஜினாமா

    பாலியல் தொல்லையால் சி.எம்.டி.ஏ பெண் ஊழியர் ராஜினாமா செய்த விவகாரம்.  தாமாகவே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது மனித வள உரிமை ஆணையம். விசாகா குழு சி.எம்.டி.ஏவில் அமைக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளது. அந்த பெண் புகார் அளித்த அதிகாரி குறித்த தகவல்களை நான்கு வாரத்தில் அளிக்க தமிழக அரசுக்கும் சி.எம்.டி.ஏவுக்கும் உத்தரவு.

    11:28 (IST)04 Jul 2019

    நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது பொருளாதார ஆய்வறிக்கை

    நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது பொருளாதார ஆய்வறிக்கை. அடுத்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 7% மாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    11:21 (IST)04 Jul 2019

    டிக் டாக் நிறுவனத்தின் மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்

    டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்ற, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று டிக் டாக் நிறுவனம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு கருத்து சுதந்திரம், விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் நடைபெறுவதால் வழக்கை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மனுவை விசாரிக்க மறுத்துவிட்டது.

    11:18 (IST)04 Jul 2019

    சிகாகோவில் 10வது உலகத் தமிழ் மாநாடு

    வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை மற்றும் சிகாகோ தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து உலகத தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை சிகாகோவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். வருகின்ற 7ம் தேதி நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், தமிழக அரசு சார்பில் 20 தமிழறிஞர்கள், சு.வெங்கடேசன் உள்பட சுமார் 250 தமிழ் ஆளுமைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    11:03 (IST)04 Jul 2019

    Rajiv Gandhi Assassination Convicts

    ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை தொடர்பாக எம்.பி. ரவிக்குமார் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.

    10:47 (IST)04 Jul 2019

    திமுக இளைஞரணி செயலாளர்

    திமுகவின் இளைஞரணி செயலாளராக இன்று உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஸ்டாலினைப் போன்றே இளைஞரணி செயலாளராக தன்னுடைய அரசியல் பணியை உதயநிதி தொடர்வார் என்று தொண்டர்கள் நல்ல செய்திக்காக காத்திருக்கின்றனர். 

    10:34 (IST)04 Jul 2019

    மதுரை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன் கைது

    அறநிலையத்துறை பெண் அதிகாரி ஒருவர் மதுரை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மதுரை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    10:21 (IST)04 Jul 2019

    இன்றைய சட்டமன்றம்

    எரிசக்தித் துறை, மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள

    09:58 (IST)04 Jul 2019

    AfgVsWI : 42வது லீக் போட்டி

    ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இன்டீஸ் நாடுகள் ஏற்கனவே உலகக் கோப்பையில் அரையிறுதி வாய்ப்பினை இழந்துவிட்டன. இருப்பினும் இந்த இரண்டு அணிகளும் இன்று மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளுக்கும் உலக கோப்பையில் இது தான் இறுதி போட்டி. ஆப்கானிஸ்தான் இதுவரை ஆடிய 8 லீக் போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
     

    09:44 (IST)04 Jul 2019

    தமிழகத்திற்கு 500 புதிய பேருந்துகள்

    தலைமைச் செயலகத்தில் ரூ. 159 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.  விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகள், கும்பகோணத்திற்கு 110 பேருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன சென்னை - 100, மதுரை - 50, கோவை - 30, நெல்லை - 30, சேலம் - 20, விழுப்புரம் - 10 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.

    09:39 (IST)04 Jul 2019

    Budget 2019

    மத்திய பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை புதிதாக நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்மலா சீதாராமன் சமர்பிக்கின்றார். இதனைத் தொடர்ந்து இன்று பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

    09:30 (IST)04 Jul 2019

    காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே நீடிக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் – திருநாவுக்கரசர்

    நடைபெற்று முடிந்த தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்தது காங்கிரஸ். இந்த தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்டு பதவி விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். நேற்று அது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிட்டார். ஆனால் ராகுல் காந்தியே தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக செயல்படவேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மேலும் இது தொண்டர்களின் விருப்பம், அவர் அதை ஏற்காவிட்டால் செயற்குழுவைக் கூட்டி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    Tamil Nadu news today live updates : Tamil Nadu Assembly Session : நேற்றைய சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டது. மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்தும், அதற்கான அனுமதியை வழங்கியது யார் என்பது குறித்தும் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

    Chennai Petrol Diesel Price : சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 73.19-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை ரூ. 67.96 பைசாவாகும்.

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment