Tamil News Live, 11th January: 2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தற்போது தொடங்கியது. தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
Gold Silver Price
இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,230 ஆகவும், சவரனுக்கு ரூ.41,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.7 மற்றும் சவரனுக்கு ரூ.56 சரிந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,705 என சவரனுக்கு ரூ.45,640 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.8 மற்றும் சவரனுக்கு ரூ.64 சரிந்துள்ளது.
சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.74க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.74,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ.300 அதிகரித்துள்ளது.
Petrol Diesel Price:
சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு (பெட்ரோல்- 102.63 ரூபாய்க்கும், டீசல்- 94.24 ரூபாய்க்கும்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Varisu Tamil Movie Review Live: அரசியல் இல்லை, பக்கா குடும்ப படம் – ரசிகர்கள் கருத்து
Weather Forecast: ஜனவரி 11ஆம் தேதியான இன்று, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.
Thunivu Movie Review : முதல் பாதி தல படம் : 2-ம் பாதி விநோத் படம்
நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை முழுவதும் 340 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம் மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12, 13, 18 தேதிகளில் வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
“போகி அன்று விமான நிலையம் அருகில் புகை வரும் பொருட்களை கொளுத்த வேண்டாம்” மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது.
“திமுக கொடுத்ததை ஆளுநர் அப்படியே வாசித்துள்ளார்” “ஆளுநர் எந்த இடத்திலும் தனது சொந்த கருத்தை திணித்து பேசவில்லை” “சில விஷயங்களை ஆளுநர் தவிர்த்துள்ளார், காரணம் அது பொய்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு எம்பி முகமது பைசல் உட்பட 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
ரூபே டெபிட் கார்டு, BHIM UPI பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூ.2,600 கோடி ஊக்கத்தொகை திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறினார்.
ஜனவரி 30-ம் தேதி நடைபெறும் பாரத் ஜோடோ யாத்ராவின் நிறைவு விழாவிற்கு அழைப்பு விடுத்து ஒத்த கருத்துள்ள 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை (வியாழக்கிழமை) ஆளுனரை சந்தித்து முறையிடுகின்றனர்.
அப்போது, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு, என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோரும் செல்கின்றனர்.
ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
அப்போது, ஆளுனரை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்!
நாளை (ஜன.12)முதல் 14ஆம் தேதி வரையும், மீண்டும் 18, 19ஆம் தேதிகளிலும் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் 5 பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் 340 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன .
இந்தப் பேருந்துகள் கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தவல்லி, கலைஞர் நகர், தாம்பரம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இயக்கப்படுகின்றன.
காரைக்காலில் உள்ள தனியார் பள்ளியில், 500 பொங்கல் பானைகள் வைத்து பிரமாண்டமாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
இதில், பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மதுரையில் பாரதிய ஜனதா பொங்கல் விழாவில் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் ஏராளமான பாரதிய ஜனதாவினர் கலந்துகொண்டனர்.
தமிழக ஆளுனர் ஆர்.என். ரவியை மாற்றிவிடுவது நல்லது என முன்னாள் நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.
திராவிட மாடல், முத்தமிழ் அறிஞர் கலைஞர் உள்ளிட்ட பல்வேறு பெயர்களை தவிர்த்த நிலையில் மு.க. ஸ்டாலின், ஆளுனர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட் தேடுதல் வேட்டையின்போது குண்டு வெடிப்பு நிகழ்ந்து. இந்த குண்டு வெடிப்பில் துணை ராணுவ வீரர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் 5 பேரும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராஞ்சிக்கு கொண்டுவரப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டில் 21 ஐ.பி.எஸ் காவல் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக சைலேஷ் குமார் யாதவ் நியமனம்.
திருச்சியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடப் பகுதிகளை இடிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடத்திற்கு துணை போன அனைத்து அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. உயிரிழந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்களது வாதங்களை முன்வைத்து வருகின்றனர். பொதுக்குழு கூட்டுவது தொடர்பான நோட்டீசை முன்கூட்டியே வழங்கவில்லை; வழங்கப்பட்ட நோட்டீஸிலும் இடம்பெறாத விஷயங்களை எல்லாம் அ.தி.மு.க பொதுகுழுவில் இவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்கள். இதற்கு முன்பு கூட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுக்குழு நோட்டீஸ்கள் எல்லாம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும், ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு சட்டவிரோதமானது என்று ஓ.பி.எஸ் தரப்பு வாதிட்டுள்ளது.
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பி.எஸ் தரப்பு பதில் வாதம்: “அ.தி.மு.க-வில் இரட்டை பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கூறியதே இ.பி.எஸ் தரப்புதான்; ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்ட பின் அனைத்து நடவடிக்கைகளும் சரியாக சென்றன.
அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்; யாரும் போட்டியிடாததால் ஒருங்கிணைப்பாளர்கள் நேரடியாக தேர்வாகினர்.
பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்பதற்காக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை நீக்குவதா?
இரட்டைத் தலைமை கலாவதியாகிவிட்டதாக இ.பி.எஸ் தரப்பு கூருவதை ஏற்க இயலாது. இ.பி.எஸ்-சின் செயல்பாடு தான் கொண்டு வந்த பொறுப்பை தானே நீக்கியது போல உள்ளது.” என்று வாதிடப்பட்டது.
2023-ம் ஆண்டு கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியில் காணொளி வழியாக பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி: “மூன்றாம் உலகப் போர் நிகழாது; ரஷ்ய ஆக்கிரமிப்பை உக்ரைன் தடுத்து நிறுத்தும். இதில் வெற்றி பெறும்போது நாம் அனைவரும் ஒன்றாக இருப்போம் என நம்புகிறேன்.” என்று கூறினார்.
கட்சியின் உட்கட்சி பதவிகளுக்கான தேர்தலை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே அறிவித்தனர் என்று ஓ.பி.எஸ் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறது.
அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் உணவு இடைவேளைக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் விசாரணை மீண்டும் தொடங்கியது
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை நாளை விலக வாய்ப்பு உள்ளது. இனி வரும் நாட்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஆளுநர் உரைக்கு பிறகு வேறு எவரையும் பேச அனுமதித்திருக்கக்கூடாது என கே.பி.முனுசாமி கூறியதற்கு, முதலமைச்சர் என் அனுமதியை பெற்று தான் பேசினார், விதிக்கு புறம்பாக செயல்படவில்லை என சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்
தமிழகத்தில் நீட் தேர்வு யார் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது? என சட்டப்பேரவையில் தி.மு.க, அ.தி.மு.க இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
நீங்கள் நிறைவேற்றி அனுப்பிய மசோதா குடியரசுத் தலைவருக்கு சென்று உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி, உள்துறை அமைச்சர் திருப்பி அனுப்பினாரே அந்த தகவலை மறைத்தீர்களா, இல்லையா?, ஒட்டுமொத்தமாக முழு பொறுப்பேற்க வேண்டியவர் எடப்பாடி பழனிச்சாமிதான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.
நீட் தேர்வு ரத்து செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்; எதுவும் பலனளிக்கவில்லை என சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தேசிய கீதத்தில் திராவிடம் என்று வருகிறது அதை பாடாமல் விட்டு விடுவாரா ஆளுநர்? தேசிய கீதத்திற்கு முன்பு அவர் வெளியேறியது மரபு மீறிய செயல் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஆளுநர் உரைக்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டு வராமல் இருந்திருந்தால், இந்தியாவுக்கே தலைகுனிவு ஏற்பட்டிருக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் குறவன் – குறத்தி என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்ஸூம் தேர்ந்தெடுக்கப்பட்டார் என அ.தி.மு.க சார்பில் வாதிட்டப்பட்டது. இதற்கு “அருமையான வாதம்” என நகைச்சுவையாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்
அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணை உணவு இடைவேளைக்காக பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
பொதுக்குழுவில் இடம்பெறாத நிகழ்ச்சி நிரலை கொண்டு ஓ.பி.எஸ் எவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ.பி.எஸ்-ஐ நீக்க வேண்டும் என உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்ததன் பேரி்லே அவர் நீக்கப்பட்டார் என கட்சி தரப்பு பதிலளித்துள்ளது
அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பி.எஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கமளித்து வருகிறார்
ஆளுநரின் விருந்தினர் மீது சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த உரிமை மீறல் தீர்மானத்தை தி.மு.க எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா கொண்டுவந்தார். ஆளுநர் உரையின் போது சபை மாடத்தில் இருந்து அவர் செல்போனில் வீடியோ எடுத்தார். உரிமை மீறலுக்கான காரணம் இருப்பதால், தீர்மானத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்
சட்டம், ஒழுங்கு குறித்த முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்
சுபஸ்ரீ மரணம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஈஷா குறித்து வன்மமான அவதூறுகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுபஸ்ரீ வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்கள் வழங்கியுள்ளோம் என்று தமிழ்நாடு அரசுக்கு ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.15 லட்சத்தை இழந்த நெல்லை பணகுடியை சேர்ந்த இளைஞர் சிவன்ராஜ், விஷம் குடித்து உயிரிழந்தார்.
மதுரை திருமங்கலம் நகராட்சியில் ரூ.500 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் உறுதிப்படுத்தி, அதற்கானப் பணிகள் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் 50,000வது விவசாயிக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த திட்டம் கடந்த நவம்பர் 11ம் தேதி அரவக்குறிச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.