Advertisment

Tamil News Updates: நியாயவிலை கடைகளில் பனை வெல்லம் விற்பனை - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
Oct 01, 2021 08:32 IST
New Update
govt decision to change standards of ration card, india, Department of Food and Public Distribution, ரேஷன் கார்டு தரநிலை மாற்றம், அரசு உதவிகளுக்கு ஆபத்து, இந்தியா, தமிழ்நாடு, ரேஷன் கார்டு, ரேஷன் அட்டை, அரசு உதவிகளுக்கு ஆபத்து, change the standards ration card, government ration shops, pds, ration cards

Tamil Nadu news updates : தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Advertisment

Weather Updates

கோவை, நீலகிரி மாவட்டங்களில் விடிய கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : நீலகிரி, கோவையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை

காங்கிரஸின் தலைமை இளைஞர்கள் கையிலா? 

சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினம்

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினம். திரையுலகத்தினர் பலரும் அவரைப் பற்றி தங்களின் கருத்துகளையும், வாழ்த்துகளையும் நினைவுகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு சிவாஜியை கௌரவித்துள்ளது.

மேலும் படிக்க : நடிகர் திலகத்தின் 93வது பிறந்தநாள்; சிறப்பு மரியாதை அளித்த கூகுள்

Petrol diesel price

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மீண்டும் உயர்வு அடைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் அதிகரித்து ரூ. 99.58க்கு விற்பனையாகி வருகிறது. அதே போன்று டீசல் விலை 29 காசுகள் அதிகரித்து ரூ. 94.74க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil • 20:59 (IST) 01 Oct 2021
  நியாயவிலை கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

  நியாயவிலை கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். அந்த வகையில், குறிப்பிட்ட நியாயவிலை கடைகள் மற்றும் அமுதம் அங்காடிகளில் பனை வெல்லம் விநியோகம் செய்ய அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. • 20:01 (IST) 01 Oct 2021
  ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தின் முதல் பாடல் அக். 4ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியீடு

  ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தின் முதல் பாடல் வரும் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  'அண்ணாத்த' திரைப்படத்தில் இமான் இசையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல் அக்.4ல் வெளியாகிறது. • 19:56 (IST) 01 Oct 2021
  டாடா குழுமம் ஏர் இந்தியா ஏலத்தில் வெற்றி பெற்றதாக வெளியான தகவல்கள் தவறு : மத்திய அரசு

  ஏர் இந்தியா நிறுவனத்திற்கான ஏலத்தில் டாடா குழுமம் வெற்றி பெற்றதாக வெளியான ஊடக செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது. ஏர் இந்தியாவுக்கான ஏலத்தில் தேசிய விமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டை அரசிடம் விட்ட பிறகு, டாடா குழுமம் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலாக வென்றதாக ப்ளூம்பெர்க் முன்பு அறிவித்தது. • 19:39 (IST) 01 Oct 2021
  தமிழகத்தில் ஒரே நாளில் 1,597 பேருக்கு கொரோனா; 25 பேர் பலி

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,597 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். • 17:15 (IST) 01 Oct 2021
  ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு

  உதகை மசினகுடி அருகே 4 பேரை கடித்துக் கொன்ற ஆட்கொல்லி புலியை Tiger faceஐ சுட்டுக்கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நிரஜ் உத்தரவிட்டுள்ளார். • 17:11 (IST) 01 Oct 2021
  ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நகர்ப்புறத்திற்கும் குடிநீர் வழங்க முயற்சி - அமைச்சர் கே.என் நேரு

  அமைச்சர் கே.என்.நேரு பேட்டி: “ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் நகர்ப்புறத்திற்கும் குடிநீர் வழங்க முயற்சி. திட்டங்கள் தயாரிப்பது குறித்து பேசினோம். ஊரக பகுதிகளுக்கு நகர பகுதிகளில் இருந்தே நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்ற தடுப்பு அணை கட்ட நிதி கேட்டுள்ளோம். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாட்டில் 1,000 தடுப்பணை கட்டப்படும் என தெரிவித்து இருந்தார், அதன் அடிப்படையில் கூடுதல் நிதி கேட்டுள்ளோம். 528 இடங்களில் உள்ள ஆழ்துளை கிணறு மூலமாக ஊரக மற்றும் நகர்ப்புறத்தில் வசிக்கும் 4.5 கோடி மக்களுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாயனுரில் உள்ள தடுப்பு அணைகளை போல மேலும் பல தடுப்பு அணைகள் அமைக்கப்பட உள்ளோம். இத்திட்டங்கள் தொடர்பாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்திபி சிங் புரி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.” என்று கூறினார். • 17:08 (IST) 01 Oct 2021
  தாயை கொன்ற மகனுக்கு மரண தண்டனை - புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

  புதுக்கோட்டை அருகே மழையூர் பகுதியை சேர்ந்த ஆனந்த், சொத்து பிரச்சனையில், தாய் திலக ராணியை கடந்த 2011-ல் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் சொத்து பிரச்சினையில் தாயை கொன்ற மகனுக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. • 15:48 (IST) 01 Oct 2021
  பழங்குடியின மக்களுக்கு ஆன்லைனில் சாதி சான்றிதழ்; ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

  மற்ற சாதியினரைப் போலவே ஆன்லைன் மூலமாக பழங்குடியின மக்களுக்கும் சாதி சான்றிதழ் வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. • 15:24 (IST) 01 Oct 2021
  புதிய விமான போக்குவரத்து செயலாளர்

  ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராஜீவ் பன்சால், விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளராக பொறுப்பேற்றார். • 15:23 (IST) 01 Oct 2021
  அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெறிவித்துள்ளது. • 14:26 (IST) 01 Oct 2021
  ஆவடி, தாம்பரம் மாநகர காவல் ஆணையர்கள் நியமனம்

  ஆவடி காவல் ஆணையராக ஏ.டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தாம்பரம் காவல் ஆணையராக ஏ.டி.ஜி.பி ரவி நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். • 13:26 (IST) 01 Oct 2021
  தூய்மை இந்தியா 2.0 திட்டம்

  தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை டெல்லியில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. • 13:26 (IST) 01 Oct 2021
  வாக்குச் சாவடிகளில் கேமரா

  உள்ளாட்சி தேர்தலில் சாத்தியமுள்ள வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. • 12:56 (IST) 01 Oct 2021
  4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. இதனை அடுத்து, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதீத கன மழைக்கு வாய்ப்பு இருப்பதனால் இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. • 12:05 (IST) 01 Oct 2021
  பாலிடெக்னிக் முறைகேடு - 66 பேருக்கு தடை

  பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மேலும் 66 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. • 12:04 (IST) 01 Oct 2021
  சான்றிதழ்களை அக். 4-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்

  10-ம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அக். 4-ம் தேதி முதல் அவரவர் படித்த பள்ளிகள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. • 10:59 (IST) 01 Oct 2021
  10ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கும் பணி திங்கள் முதல் துவக்கம்

  10ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் தங்களின் அசல் சான்றுகளை தாங்கள் படித்த பள்ளிகளில் 04/10/2021 முதல் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. • 10:31 (IST) 01 Oct 2021
  சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  மறைந்த தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த நாள் இன்று. அதனை ஒட்டி முதல்வர் முக ஸ்டாலின், சிவாஜி கணேசனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். • 10:25 (IST) 01 Oct 2021
  குடியரசுத் தலைவருக்கு மோடி வாழ்த்து

  இன்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில் நரேந்திர மோடி தன்னுடைய வாழ்த்தை பதிவு செய்துள்ளார். ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ராம்நாத் கோவிந்தின் முயற்சி போற்றத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். • 09:46 (IST) 01 Oct 2021
  ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களிலும் பட்டாசு வெடிக்க தடை

  டெல்லியை தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலங்களில் தீபாவளி மற்றும் இதர பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசுகளுக்கு அம்மாநிலங்களில் தடை • 09:44 (IST) 01 Oct 2021
  திண்டுக்கல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

  திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டியில் மின்சாரம் தாக்கி தந்தை திருப்பதி (45), மகன்கள் சந்தோஷ் குமார் மற்றும் விஜய் கணபதி ஆகியோர் உயிரிழப்பு. இந்த சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. • 09:43 (IST) 01 Oct 2021
  கரூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

  கரூரின் பல பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்த நிலையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர். • 09:41 (IST) 01 Oct 2021
  ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி இரண்டாம் இடம்

  ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த கௌதம் ஆதானி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஓராண்டில் சொத்துமதிப்பு 261% ஆக உயர்ந்துள்ளது. தினசரி வருவாய் மட்டும் ரூ. 1000 கோடியாக உயர்வு • 08:52 (IST) 01 Oct 2021
  மக்கள் பள்ளி திட்டம்

  மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை சரி செய்யும் வகையில் தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கற்பிற்க்கும் மக்கள் பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. • 08:49 (IST) 01 Oct 2021
  ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகுகிறார் க்றிஸ் கெயில்

  அடுத்தமாதம் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் விதமாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகுவதாக பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் க்றிஸ் கெயில் அறிவித்துள்ளார்.#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment