Advertisment

Tamil Nadu news today updates : சிலைக் கடத்தல் சம்பவங்களில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு - பொன். மாணிக்கவேல்

Chennai Petrol Diesel Price : சென்னையில் பெட்ரோல் விலை ரூ.76.24-க்கும் ஆகும். டீசல் ரூ.69.96-க்கும் விற்பனையாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today updates  : குமாரசாமி ஆட்சி கலைக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 105 எடுத்தால் ஆட்சியை தக்கவைக்கலாம் என்ற நிலையில் 99 வாக்குகள் பெற்று குமாரசாமியின் ஆட்சி கலைக்கப்பட்டது. பாஜகவின் எடியூரப்பா புதிய முதல்வராக பொறுப்பேற்பார் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர்கள் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளனர்.

Advertisment

Karnataka Crisis : தமிழிசை சௌந்தரராஜன் ட்வீட்

எச்.ராஜா ட்வீட்

Chennai Weather

சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வந்தது. பிறகு இரவு  ஒரு இரண்டு மணி நேரம் மழை குறைந்து மீண்டும் மழையின் தாக்கம் அதிகமானது. கல்லூரிகள் மற்றும் அலுவலக வேலைகள் முடித்து வீடு திரும்புவோர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, Karnataka Crisis, Nellai Mayor Murder, Chennai Rains : இன்று தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!



























Highlights

    19:52 (IST)24 Jul 2019

    இரு அமைச்சர்களுக்கு தொடர்பு - பொன்.மாணிக்க வேல்

    சிலை கடத்தல் சம்பவங்களில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற்றதாகவும், பொன் மாணிக்கவேல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஆதாரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய பொன் மாணிக்கவேல் தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    19:50 (IST)24 Jul 2019

    நாளை நளினி ரிலீஸ்

    ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஒரு மாத கால பரோலில் நாளை காலை வெளியே வருகிறார்.

    19:02 (IST)24 Jul 2019

    முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் - பிரதமர் மோடி

    நாட்டிற்காக சேவையாற்றிய முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் பிரதமர்கள் பயன்படுத்திய பொருட்களை வழங்குமாறு ஐ.கே.குஜ்ரால், சரண் சிங், தேவகவுடா, மன்மோகன் சிங் உள்ளிட்டோரின் குடும்பத்தினர்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

    18:59 (IST)24 Jul 2019

    விஷால் நேரில் ஆஜராக உத்தரவு

    விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் பிடித்தம் செய்த டிடிஎஸ் வரி செலுத்தாத வழக்கில் ஆக.2ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஷாலுக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    18:02 (IST)24 Jul 2019

    சந்திரயான்-2 ஆகஸ்ட் 20-க்குள் நிலவின் சுற்று வட்டப்பாதையை சென்றடையும் - இஸ்ரோ

    சந்திரயான்-2 ஆகஸ்ட் 20-க்குள் நிலவின் சுற்று வட்டப்பாதையை சென்றடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது பூமியின் சுற்று வட்டப்பாதையை சுற்றி வரும் சந்திரயான் 2 விண்கலம், மெல்ல மெல்ல கடந்து ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் நிலவின் சுற்று வட்டப்பாதையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    17:52 (IST)24 Jul 2019

    உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

    ஆடி கிருத்திகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

    17:49 (IST)24 Jul 2019

    சரியான பாடம் கற்பிக்கணும் - ஐகோர்ட் கிளை

    'பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்போருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்' என உயர்நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது. 

    17:34 (IST)24 Jul 2019

    கொலையாளிகளை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

    நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் ஆகியோரின் உடலுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நெல்லை மாநகராட்சியில் முதல் பெண் மேயராக பதவியேற்று மக்களுக்கு பல சிறப்பான பணிகளை செய்தவர் உமா மகேஸ்வரி என புகழாரம் சூட்டினார். மேலும், கொலையாளிகளை அரசு விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    17:32 (IST)24 Jul 2019

    ஜூலை 26-ல் முதல்வராக பதவி ஏற்கிறார் எடியூரப்பா

    கர்நாடகாவில் நிகழ்ந்த அதிரடி திருப்பத்தை தொடர்ந்து, எடியூரப்பா, அம் மாநிலத்தின் முதலமைச்சராக 4 - வது முறையாக நாளை மறு நாள், வெள்ளிக்கிழமை மாலை பதவி ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை, பெங்களூருவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை பாஜக தலைவராக எடியூரப்பா ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார். இதன்பின்னர், நாளை மாலை, கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க எடியூரப்பா உரிமை கோருவார். எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றிரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    17:25 (IST)24 Jul 2019

    எதை அரசியல் ஆக்கக் கூடாது? பட்டியல் கொடுங்க - சீமான்

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கல்லூரி மாணவர்கள் தாக்கி கொண்ட விவகாரம் குறித்து, ஒழுக்கத்தையும் நெறியையும் அறிவையும் கற்று தரக்கூடிய கல்வி முறையை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார். 'எதையும் அரசியல் ஆக்க கூடாது' என தமிழிசை சவுந்திரராஜன் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்த சீமான், 'எதை அரசியல் ஆக்க கூடாது எனும், பட்டியலை தமிழிசை அளிக்க வேண்டும்' என்றும் கூறினார்.

    16:48 (IST)24 Jul 2019

    அக்யூஸ்ட் நம்பர் ஒன் படத்துக்கு தடை கோரி மனு!

    சந்தானம் நடிப்பில் வெளியாகவுள்ள "அக்யூஸ்ட் நம்பர் ஒன்" திரைப்படத்திற்கு தடை கோரி, கோவை மாநகர காவல் ஆணையரிடம், அந்தணர் முன்னேற்ற சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. அதில் பிராமண சமுதாயம் மற்றும் பெண்களை கேலி செய்யும் நோக்கில், காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி பிராமணர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையில் இன்று காவல் ஆணையரை சந்தித்த அந்தணர் முன்னேற்ற சங்கத்தினர், "அக்யூஸ்ட் நம்பர் ஒன்" படத்தை தடை செய்யக் கோரி மனு அளித்தனர்.

    16:46 (IST)24 Jul 2019

    உமா மகேஷ்வரி கொலை தொடர்பாக விளக்கமளிக்க உத்தரவு

    நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி கொலை தொடர்பாக விளக்கமளிக்க தமிழக டிஜிபி மற்றும் நெல்லை காவல் ஆணையருக்கு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    16:04 (IST)24 Jul 2019

    மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை

    மாணவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் பட்சத்தில் தேவைப்பட்டால் குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை இணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இதுவரை அவர்களை மாணவர்கள் என்ற கோணத்தில் தான் நடவடிக்கை எடுத்துள்ளோம், இது தொடரும் பட்சத்தில் மாணவராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறையில் அடைக்கப்பட்டால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும். ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது . பேருந்து கூரை மீது மாணவர்கள் ஏறினால் பேருந்தை இயக்க வேண்டாம்  என ஓட்டுநர்களுக்கு, காவல் இணை ஆணையர் சுதாகர் வேண்டுகோள்  விடுத்துள்ளார். மோதல்கள் ஏற்படும் வழித்தடங்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

    15:20 (IST)24 Jul 2019

    தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே வேலை வழங்க சட்டம் – ராமதாஸ்

    தமிழகத்தில் உள்ள தனியார் வேலைவாய்ப்புகளில் 80 சதவீதம் தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆந்திராவில், 75 சதவீதம் அம்மாநிலத்தவர்களுக்கே வேலைவாய்ப்புகள் வழங்கப்பட புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு வேலைக்கு செல்பவர்களை பாதிக்கக்கூடும் என்றாலும், ஆந்திர மக்களின் நலனுக்காக அம்மாநில அரசு இந்த சட்டத்தை இயற்றியுள்ளது எனவே, தமிழகமும் ஆந்திராவை பின்பற்றி சட்டம் இயற்ற வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    14:53 (IST)24 Jul 2019

    மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவர் தற்காலிக நீக்கம்

    மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட 2 மாணவர்கள் கல்லூரியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருண் மொழிசெல்வன் கூறியுள்ளார். 

    மாணவர்களின் குடும்ப சூழலும் மோதலுக்கு காரணம் , கல்லூரியின் சார்பில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படவுள்ளதாக கூறினார்.

    14:24 (IST)24 Jul 2019

    அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

    மாணவர் எண்ணிக்கையை காரணம் காட்டி, எந்த அரசு பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

    13:43 (IST)24 Jul 2019

    பாலாற்றின் குறுக்கே தடுப்பணை – ஸ்டாலின் கண்டனம்

    பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு தடையாணை பெற முடியாத தமிழக அரசுக்கு, திமுக தலைவர் .ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாலாற்றின் குறுக்கே 40 அடி உயரத்துக்கு 22 தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டி வருவதை, தமிழக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகள், அதிமுக ஆட்சியில் ஒவ்வொன்றாக பறிபோய்க்கொண்டிருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    12:58 (IST)24 Jul 2019

    அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

    வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    12:40 (IST)24 Jul 2019

    பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக அமைச்சர் குழு உருவாக்கம்

    அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, மற்றும் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட அமைச்சர்கள் அடங்கிய குழு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பான முக்கிய முடிவுகளை மேற்கொள்வார்கள்.

    12:28 (IST)24 Jul 2019

    ராஜ்யசாபாவில் பிரியாவிடை அளித்த அதிமுக எம்.பி. மைத்ரேயன் (2/2)

    2009ம் ஆண்டு மே மாதம் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து ஒரு முறை கூட தீர்மானம் நிறைவேற்றவோ, இரங்கல் கூட்டம் நடத்தவோ இல்லை. நாளை எனக்கு ஏதேனும் ஏற்பட்டாலும் கூட இந்த அவை இரங்கல் கூட்டம் நடத்த வேண்டாம் என்று கூறி, உருக்கமாக பேசியது அனைவரையும் கண் கலங்க வைத்தது. 

    12:25 (IST)24 Jul 2019

    ராஜ்யசாபாவில் பிரியாவிடை அளித்த அதிமுக எம்.பி. மைத்ரேயன் (1/2)

    அதிமுக எம்.பி. மைத்ரேயன் அவர்களுடைய பதவி இன்றுடன் முடிவுக்கு வருவதை தொடர்ந்து பிரியாவிடை உரை ஆற்றினார். 14 ஆண்டுகளாக ராஜ்யசபை உறுப்பினராக பதவியாற்றியிருக்கிறார். அதிமுகவின் முன்னாள் தலைவர் ஜெயலலிதா என்னை நம்பி 3 முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்தார் என்று கூறி கண்ணீருடன் ப்ரியாவிடை கொடுத்தார். அதில் நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான மசோதாக்கள் குறித்தும் அவர் உரையாற்றினார்.

    11:51 (IST)24 Jul 2019

    Hyundai Kona Electric : கொடியசைத்து துவக்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி

    இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் காரான கோனாவை சென்னையில் அறிமுகம் செய்து வைத்து கொடியேற்றத்துடன் விழாவை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கி.மீ வரை சீறிப்பாயும் இந்த கார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    11:48 (IST)24 Jul 2019

    ட்ரெம்பின் சர்ச்சை கருத்தால் நாடாளுமன்றத்தில் அமளி

    ட்ரெம்ப் 23ம் தேதி அமெரிக்காவில், பாகிஸ்தான் முதல்வர் இம்ரான் கானுடன் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது பிரதமர் நரேந்திர மோடி, ஜி20 மாநாட்டின் போது, காஷ்மீர் விவகாரத்தில் தன்னை சமரச தூதராக இருக்க வேண்டிக் கொண்டார் என்று குறிப்பிட்டிருந்ந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம். இந்நிலையில் இன்று ட்ரெம்பின் சர்ச்சை கருத்து குறித்து மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

    11:44 (IST)24 Jul 2019

    விரைவில் கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும்

    வேலூரில் வருகின்ற 5ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி திமுக, அதிமுகவினர் பலத்த பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் செய்யும் போது, கேபிள் டிவி கட்டணம் விரைவில் குறைக்கப்படும் என்றும், அது தொடர்பாக நேற்று முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    10:56 (IST)24 Jul 2019

    சென்னை முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறப்பு

    மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி வருகின்ற ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலை திறக்கப்படும் என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவ்விழாவில் முக்கிய விருந்தினர்களாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ, நடிகர் கமல் மற்றும் ரஜினி ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதது.

    10:34 (IST)24 Jul 2019

    இன்றைய அரசியல்வாதிகள் மனிதர்களே இல்லை - கர்நாடக சபாநாயகர்

    இன்று காலை தந்தி டிவிக்கு பேட்டியளித்த கர்நாடக சபாநாயகர் ”இன்னும் இரண்டு நாட்களில் சபாநாயகரின் பலத்தை அனைவரும் அறிந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார். மேலும் அனைத்து கட்சிகளுமே பணத்தை பிரதானமாக கொண்டு தான் இங்கு செயல்படுகின்றன. இன்றைய அரசியல்வாதிகள் மனிதர்களே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    10:34 (IST)24 Jul 2019

    Karnataka Crisis : இன்று காலை 11 மணிக்கு பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

    நேற்றிரவு குமாரசாமி ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாஜகவின் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை பெங்களூருவில் நடைபெறுகிறது. 

    10:19 (IST)24 Jul 2019

    திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிப்பாடியில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ல முள்ளிப்பாடியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பள்ளி வேன் எதிரே வந்த வாகனத்தில் மீது மோதாமல் இருக்க முற்பட்டபோது நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. காயமடைந்த 30 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    10:12 (IST)24 Jul 2019

    Chennai News

    சென்னை அயனாவரத்தில் ஏ.டி.எம் மையத்தில் ஸ்கிம்மர் கேமரா பொருத்தி பணம் திருட முயற்சி செய்த இர்பான், அல்லா பகாஸ், அப்துல் ஹாதி ஆகிய மூவரை கைது செய்தது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை.

    09:57 (IST)24 Jul 2019

    தென்னிந்தியாவில் பாஜக வலுப்பெறும் - தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை

    கர்நாடகாவில் தாமரை மலரும் போது தென்னிந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் பாஜக வலுபெறும் என்று தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர் தமிழ் மொழி எப்போதுமே உயிர்ப்புடன் வளமையாகவே இருக்கும், அதை காப்பாற்ற திமுக தலைவர் முக ஸ்டாலின் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

    09:55 (IST)24 Jul 2019

    Southwest Monsoon Red alert

    கர்நாடகாவில் பருவமழை விஸ்வரூபம் எடுத்திருக்கின்ற நிலையில் உடுப்பி மற்றும் குடகு பகுதிகளில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடுப்பியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    09:39 (IST)24 Jul 2019

    Chittoor accident

    திருப்பதி சென்றுவிட்டு வீடு திரும்புகின்ற வழியில், அரசு பேருந்து மோதி தமிழகத்தை சேர்ந்த 4 பேர் சித்தூர் மாவட்டம் நகரி பகுதியில் மரணமடைந்தனர். காவல்துறையினர் தங்களின் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.  இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க

    09:38 (IST)24 Jul 2019

    Karnataka Crisis : ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக

    நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடிப்பில் குமாரசாமிக்கு ஆதரவாக 99 பேரும், பாஜகவிற்கு ஆதரவாக 105 பேரும் வாக்களித்தனர். ஜூலை 6ம் தேதி 16 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ததால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய மேஜிக் நம்பரும் குறைந்தது. இதுவரையில் அந்த 16 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் பதவி விலகி மீண்டும் பாஜகவில் இணைய விரும்பினால் இணையட்டும். ஆனால் எங்களுக்கு ஆட்சி அமைக்க 105 இடங்கள் பெரும்பான்மை இருக்கிறது என்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்துள்ளார்.

    09:37 (IST)24 Jul 2019

    ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக

    நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடிப்பில் குமாரசாமிக்கு ஆதரவாக 99 பேரும், பாஜகவிற்கு ஆதரவாக 105 பேரும் வாக்களித்தனர். ஜூலை 6ம் தேதி 16 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ததால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய மேஜிக் நம்பரும் குறைந்தது. இதுவரையில் அந்த 16 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் பதவி விலகி மீண்டும் பாஜகவில் இணைய விரும்பினால் இணையட்டும். ஆனால் எங்களுக்கு ஆட்சி அமைக்க 105 இடங்கள் பெரும்பான்மை இருக்கிறது என்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்துள்ளார்.

    Tamil Nadu news today updates

    திருநெல்வேலி மாவட்டத்தின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி நேற்று மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். அவருடன் அவருடைய கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரி என்பவரையும் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.  இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க.

    ரெட்டியார்பட்டியில் நடைபெற்ற இந்த பயங்கர கொலை அப்பகுதியில் பல்வேறு குழப்பங்கள் மற்றும் பதற்றங்கள் நீடித்து வருகிறது. காவல்துறையினர் தங்களின் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

    ITR : வருமான வரியை தாக்கல் செய்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து அறிவித்துள்ளது மத்திய வருமானத் துறை. இதன் மூலம் வரி செலுத்துபவர்கள் நிதானமாக தங்களின் வருமான வரியை தாக்கல் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்தில் அதனை செலுத்தவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க : வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது ஏன்?

    Tamil Nadu Chennai
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment