Tamil Nadu news today updates : கர்நாடக அணைகளில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வண்ணம் இருப்பதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பாசனத்தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரித்து உள்ளது. தற்போதைய மேட்டூர் அணை நிலவரம் முறையே நீர்மட்டம் 118.2 அடி ஆகும். நீர் இருப்பு 90.64 டி.எம்.சி. நீர் வரத்து 11,882 கன அடியாக உள்ளது. பாசனத்திற்காக திறந்துவிடப்படும் நீரின் அளவு 20, 000 கன அடியாகும்.
Pakistan Vs Srilanka T20
இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது . ஏற்கனவே ஒரு நாள் போட்டியில் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று லாகூரில் முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி சரசரவென்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களில் பெவிலியனுக்கு நடையை கட்டியது.
நவராத்திரி 8ம் நாள்
இன்று நவராத்திரி பூஜையின் 8ம் நாள் ஆகும். இன்று, நாளை, மற்றும் நாளை மறுநாள் கோலகலமாக இந்தியா முழுவதும் நவராத்திரி பூஜைகள் மற்றும் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறும். சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் அமைந்திருக்கும் கோவில்களில் இன்று காலை முதலே சிறப்பு வழிபாடுகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
Live Blog
Tamil Nadu news today live updates : Chennai weather, traffic, petrol diesel price, இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியா வந்துள்ளார். நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாட்டு நட்புறவு, பாதுகாப்பு, வர்த்தகம், கலாச்சாரம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தங்கை மகன் லோகேஷ்(21) அமைச்சரின் வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள சிறப்பான முன்னேற்பாடுகளால் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்றும், டெங்கு குறித்த ஸ்டாலினின் கருத்துகள் கண்டனத்திற்குரியது என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திமுக தலைவர் அரசு பொது மருத்துவமனையில், காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்து நலம் விசாரித்த்தார். பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், போர்கால நடவடிக்கைகளை எடுத்து கட்டுபடுத்த இந்த அரசு தவறியுள்ளது என்று கருத்து தெரிவித்திருந்தார்
இயக்குனர் மணிரத்தினம், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா போன்றோர்கள் சிறுபான்மையினர் தாக்கப்படுவதை தவிர்க்குமாறு கடிதம் ஒன்றை பிரதமருக்கு எழுதியிருந்தனர். இந்த கடிதம் எழுதியவர்கள் மீது பீகார் மாநில நீதிமன்றத்தின் உத்தரவால் தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது . மக்கள் கருத்துரிமையைப் பறிக்கும் இச்செயலை, மத்திய அரசு தலையிட்டு உடனடியாக வழக்கு ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைக் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக ஒரு லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்று பிரதமருக்கு கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. கொல்கத்தாவில் ‘பாலகோட் வான்வழித் தாக்குதல் நிகழ்வை உருவகப்படுத்தி துர்கா பூஜாயைக் கொண்டாடி வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலில், அமமுக கட்சி போட்டியிடவிட்டால், அக்கட்சியின் சகாப்தம் முடிவடைந்து விடும் என்று அமமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் பதவி இழக்க காரணமாக இருந்த தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோவையில் புகழேந்தி தலைைமயில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றும், அதற்கான ஆசிரியர் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புதிய மின் இணைப்புக் கட்டணங்களை 300% வரை தமிழக அரசு உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியது. இந்த புதிய மின் இணைப்புக்கான கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களை விட தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைவு என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தமிழகத்தில் 70% பிரசவங்கள் அரசு மருத்துவமனையில் தான் நடைபெறுகிறது; அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு போன்ற கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறினார்.
50வது கோவா சர்வதேச திரைப்பட விழா 2019 , நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். . இந்த சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் தனிஆளாக நடித்துள்ள ஒத்த செருப்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்திலான ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட தமிழ் படங்கள் திரையிடப்பட உள்ளன.
நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறிகையில் அதிமுக வழியாக பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. அதிமுக தற்போது சுதந்திரமாக செயல்படக்கூடிய நிலையில் இல்லை என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கான முதல் டெஸ்ட் போட்டி விசாகபட்டினத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்க்ஸில் 502 ரன்கள் குவித்தது இந்தியா. அதனைத் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 431 ரன்களுக்கு சுருண்டது. இரண்டாவது இன்னிங்க்ஸை ரணகளமாக துவங்கிய இந்தியா 323 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஐந்தாம் நாளான இன்றைய ஆட்டத்தின் துவக்கத்தில் 11 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இருந்தது தென்னாப்பிரிக்கா. ரவிந்திர ஜடேஜா அதிரடியாக களமிறங்கி விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். தற்போதைய நிலவரப்படி முகமது சமி 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா நான்கு விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். தென்னாப்பிரிக்க அணியில் தற்போது க்ரீஸில் செனுரன் முத்துசாமி மற்றும் தானே பைடெட் தடுப்பு ஆட்டம் ஆடி வருகின்றனர்.
சென்னையில் டெங்கு காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகின்ற நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் திமுக தலைவர் முக ஸ்டாலின். பாதிக்கப்பட்டோர் குறித்த முழுமையான தகவல்களை அரசு வெளியிடவில்லை என்றும் உரிய சிகிச்சையை விரைவாக தர வேண்டும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
கோவாவில் நவம்பர் 20 முதல் 28 தேதி வரை கோலகலமாக நடைபெற உள்ளது 50வது சர்வதேச திரைப்பட விழா. இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட இருப்பதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி. இவ்விழாக்காலத்தை ஒட்டி மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் “மக்கள் அனைவரும் அனைத்து நலன்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ” வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதணை புரிந்த இந்திய வீரராக அஸ்வின் அறிவிப்பு. 66 டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி இதற்கு முன்பு இந்த சாதனையை தக்க வைத்தவர் முரளிதரன் என்பது குறிப்பிடத்தக்கது.
தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார். கரூர் அரவக்குறிச்சியில் இருக்கும் மணி என்பவரின் மனைவி எல்லமாள். மணி இறந்துவிட தோட்டத்து வீட்டில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தார் எல்லம்மாள். அவருடைய வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, மூதாட்டியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் தேவகோட்டை பகுதியில் வாழ்ந்து வருகிறார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஜெயராஜ். அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 140 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் அடிப்பையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நாங்குநேரியில் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அமைச்சர்கள் பலரும், எம்.பிக்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் ஆர்.பி. உதயக்குமார் “நாங்குநேரி மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் அவமதித்துவிட்டது என்றும் ஆட்சியில் இருந்த போது குளங்களை தூர்வாராமல் இப்போது தூர்வாருவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கி 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு வருகிறது. இன்றுடன் இந்த நிகழ்ச்சி முடிவடைகின்ற நிலையில், இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பதை அறிந்து கொள்வதில் அனைவரும் அதீத ஆர்வம் கிளம்பியுள்ளது. முகென் ராவ் மற்றும் லாஸ்லியா என இருவருக்கும் கடுமையான போட்டிகள் இருக்கும் என்றும் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க