Tamil Nadu news today updates Chennai weather : தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
அமெரிக்க அதிபர் இந்தியா வருகை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலனியா ட்ரெம்ப் ஆகியோர் இந்தியாவிற்கு வருகை புரிய உள்ளனர். அகமதாபாத் மற்றும் ஆக்ராவிற்கு வருகை புரியும் அவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் குஜராத் மற்றும் உ.பி.யில் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளை படிக்க
ஜெயலலிதாவின் பிறந்தநாள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் சட்டப்பேரவையில் முதல்வர், ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படும் என்று அறித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க : மாற்றுக் கட்சியினரும் பார்த்து வியந்த இரும்புப் பெண்மணி ஜெயலலிதா
Live Blog
Tamil Nadu news today updates : Chennai weather, TN politics, Donald Trump India Visit, Jeyalalithaa Birthday : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள லைவ் ப்ளாகிற்கு உங்களை வரவேற்கின்றோம்
முதல்வர் பழனிசாமி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு விவசாயி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தான் உதாரணம் என்று கூறியுள்ளார். மேலும், “தமிழகத்திற்கு அதிமுக அரசுதான் 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்று தந்தது. அதிமுக அரசின் அனைத்து திட்டங்களும் காலத்தால் அழிக்கமுடியாத திட்டங்கள். அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு தடையின்றி மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.” என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையை வரவேற்கும் விதமாக காந்தியின் கொள்கையை தாங்கிய வீடியோ பாடல் ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Here's a track from us to welcome @POTUS to India 🇮🇳, the land of Gandhi. https://t.co/61rjyhxV16
— A.R.Rahman (@arrahman) February 24, 2020
வடகிழக்கு டெல்லியில் சிஏஏ போராட்ட வன்முறையைத் தொடர்ந்து உள்துறை செயலாளர் அஜய் பல்லா கூறுகையில், களத்தில் போதுமான காவலர்கள் உள்ளனர். நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. மூத்த அதிகாரிகள் களத்தில் உள்ளனர்.போதுமான படைகள் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.
7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி மனு தாக்கல் செய்துள்ளார். இதில், துடியலூர் மகளிர் காவல் ஆய்வாளர் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராகுல் காந்தி வடகிழக்கு டெல்லியில் நடந்துள்ள வன்முறை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வடகிழக்கு டெல்லியில் திங்கள்கிழமை நடந்த வன்முறை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: “இன்று டெல்லியில் நடந்த வன்முறைகள் கவலை அளிக்கின்றன. இந்த வன்முறை சம்பத்தை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். அமைதியான போராட்டங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம். ஆனால், வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. எந்த ஆத்திரமூட்டல் நிகழ்வுகள் இருந்தாலும் கட்டுப்பாடு, இரக்கம் மற்றும் புரிதலை காட்ட வேண்டும் என நான் டெல்லி குடிமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 168வது படத்தின் பெயர் ‘அண்ணாத்த’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அண்ணாத்த டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
#Thalaivar168 is #Annaatthe#அண்ணாத்த@rajinikanth @directorsiva @KeerthyOfficial @immancomposer@prakashraaj @khushsundar @sooriofficial @actorsathish pic.twitter.com/GtaYEoKf6N
— Sun Pictures (@sunpictures) February 24, 2020
வடகிழக்கு டெல்லியில் சில பகுதிகளில் நடைபெற்றுவரும் வன்முறை சம்பவங்கள் குறித்து டெல்லி காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வடகிழக்கு மாவட்டத்தின் பகுதிகளில், குறிப்பாக மவுஜ்பூர், கர்தாம்பூரி, சந்த் பாக் மற்றும் தயால்பூர் பகுதிகளில் சில வன்முறை மற்றும் தீ விபத்துக்கள் பதிவாகியுள்ளன ... இது டெல்லி மக்களுக்கு குறிப்பாக வடகிழக்கு மாவட்டத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும் என்றும் எந்தவொரு தவறான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நிலைமையை மேலும் மோசமாக்கும் எந்தவொரு குழப்பமான படங்களையும் பரப்ப வேண்டாம் என்றும் ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி திங்கள்கிழமை, பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ. கபில் மிஸ்ராவின் பேச்சு வடகிழக்கு டெல்லியில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்களுக்கு வழிவகுத்துள்ளது. அவரை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார். வடகிழக்கு டெல்லியில் உள்ள மவுஜ்பூர்-பாபர்பூர் பகுதிகளில் இருந்து வன்முறை சம்பவங்கள் பதிவாகி வருவதால் ஓவைசி இதனை அறிவித்துள்ளார்.
These riots were a result of incitement by an ex MLA & BJP leader. Now there is clear evidence of police involvement
The ex-MLA should be arrested immediately, urgent steps should be taken to control the violence. Otherwise, it’ll spread https://t.co/numkSduOiZ
— Asaduddin Owaisi (@asadowaisi) February 24, 2020
வடகிழக்கு டெல்லியின் மவுஜ்பூர்-பாபர்பூர் பகுதியில் திங்கள்கிழமை நடந்த சிஏஏ ஆர்ப்பாட்டங்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
Watch: Man opens fire during clashes over CAA protests in North East Delhi's Maujpur-Babarpur area
Follow LIVE updates here: https://t.co/W1kuI6jnb3 pic.twitter.com/RNoMYuw4kC
— The Indian Express (@IndianExpress) February 24, 2020
வடகிழக்கு டெல்லியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வன்முறை மோதல்கள் ஏற்பட்டுள்ளது. குடியுரிமைச் சட்ட ஆதரவாளர்கள் மற்றும் குடியுரிமைச் சட்டம் எதிர்ப்பாளர்கள் இடையே திங்கள்கிழமை ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீச வேண்டியிருந்தது. இதில் குறைந்தபட்சம் இரண்டு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த கல்வீச்சில் காயமடைந்தவர்கள் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Situation extremely tense in #Maujpur. Vehicles set on fire, a few injured, clashes between pro & anti-CAA protesters. This is a communal riot. #CAA_NRC_Protests @IndianExpress pic.twitter.com/Wt0Sxxlp3u
— Somya Lakhani (@somyalakhani) February 24, 2020
மவுஜ்பூரில் நிலைமை மிகவும் பதட்டமானதாக உள்ளது . சிஏஏ சட்டத்தை ஆதரிபாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன .
Instructed @DelhiPolice and @CPDelhi to ensure that law and order is maintained in North East Delhi. The situation is being closely monitored. I urge everyone to exercise restraint for maintenance of peace and harmony.
— LG Delhi (@LtGovDelhi) February 24, 2020
வடகிழக்கு டெல்லியில் வன்முறை வெடித்துள்ள சூழ்நிலையில், டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு டெல்லி போலீசாரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக மோதல் சூழ்நிலையில் உள்ளது. இன்று நடைபெற்ற வன்முறையில் தில்லி போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டார் . டெல்லி டி.சி.பி உட்பட பலர் காயமடைந்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கான ஆதரவாளர்கள் மற்றும் குடியுரிமை எதிர்ப்பு சட்ட எதிர்ப்பாளர்கள் இடையே வடகிழக்கு டெல்லியில் நேற்று முதல் பதட்டமான சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க போலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, " ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேர் விடுதலையில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் முறையாக தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ., வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக மாநிலம் உடுப்பியில் தௌஃபிக், அப்துல் சமீம் என்ற இருவரை தமிழக காவல்துறை கைது செய்தது. வில்சன் கொலை வழக்கு, என்ஐஏ அமைப்பிற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில, வில்சன் கொலை வழக்குத் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை முடிவில் தான் முழு விவரங்கள் தெரியவரும் என்று நம்பப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை பார்வையிட்டார் அத்தொகுதி எம்.பி. கனிமொழி. மணி மண்டபத்தில் அமைந்திருக்கும் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பத்திரிக்கை, விளையாட்டு துறைகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர் அவர் என்று பேச்சு.
பிரேசில் நாட்டில் அமைந்திருக்கும் ரியோ டி ஜெனரியோவில் நடைபெறும் ரியோ ஓப்பன் டென்னிஸில் இத்தாலிய வீரர் ஜியான்லூகா மேகரை வீழ்த்தி சிலி வீரர் க்றிஸ்டியன் கரின் வெற்றி பெற்றுள்ளார். இந்த போட்டியில் வெற்று பெற்றதால் கரின் முதல் 20 வீரர்களுக்கான பட்டியலில் இணைந்தார்.
ஏரி மற்றும் குளங்களில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது தொடர்பாக அறிக்கையை அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது உயர் நீதிமன்றம். அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நேரில் ஆஜராக நேரிடும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அயனாவரம் பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பினை எதித்து 2 குற்றவாளிகள் மேல்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்துள்ளனர். இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க அயனாவரம் மகளிர் காவல் ஆய்வாளர் 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஒரு நபர் ஆணையத்தின் 19ம் கட்ட விசாரணை இன்று துவங்கியது. விசாரணைக்கு ஆஜராக நடிகர் ரஜினிகாந்த் உட்பட 31 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது விசாரணை ஆணையம். நேரில் ஆஜராவதில் இருந்து ரஜினிக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்ட மனு மீதான முடிவினையும் ஆணையம் இன்று எடுக்க இருப்பதாக அறிவிப்பு.
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளுக்கு அரவிந்த் சாமியின் போஸ்டரை வெளியிட்டது போன்றே தலைவி படக்குழு தற்போது ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு கங்கனா ரனாவத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
Kangana in and as #Thalaivi ... without any prosthetics or any special effets Kangana looks like Jaya Amma, shocking, determination can make anything happen #Thalaivi pic.twitter.com/Dtm8wu5fwH
— Rangoli Chandel (@Rangoli_A) February 24, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights