Tamil Nadu news today updates Darbar : தர்பார் படத்தின் கட்-அவுட்டுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ அனுமதி கேட்டு சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ரஜினி ரசிகர்கள் மனு கொடுத்துள்ளனர். இந்த மனு வருவாய் கோட்டாசியர் பார்வைக்கு வைக்கப்படவும், இது குறித்து ஆய்வு செய்து வர வட்டாட்சியருக்கு கோட்டாசியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் மீது நடவடிக்கை
9ம் தேதி வெளியாக உள்ள தர்பார் படத்திற்கு இசை அமைத்துள்ளார் இசை அமைப்பாளர் அனிருத். ஆனால் அதற்கு அவர் வெகு குறைவான அளவிலேயே தமிழ் சினிமா இசைச்சங்க உறுப்பினர்களை பயன்படுத்தியுள்ளார். இதனை இவர் தொடர்ந்து செய்து வருவதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக இச்சங்கத்தின் தலைவர் தீனா அறிவித்துள்ளார். அது தொடர்பான வீடியோ இங்கே! தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?
Live Blog
Tamil Nadu news today updates : Chennai weather, TN News, TN politics : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
டெல்லியில் ஜே.என்.யு மாணவர்கள், பேராசிரியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, ஜே.என்.யு பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே நடைபெற்று வரும் மாணவர்கள் பேராசிரியர்கள் போராட்டத்தில் நடிகை தீபிகா படுகோன் பங்கேற்றுள்ளார்.
Delhi: Deepika Padukone joins students at Jawaharlal Nehru University, during their protest against #JNUViolence. pic.twitter.com/9P6IMzs0AS
— ANI (@ANI) January 7, 2020
டெல்லி ஜே.என்.யு.வில் நடைபெற்ற வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர்.
Karnataka: Students hold candle march in Bengaluru to protest against #JNUViolence pic.twitter.com/mcETScitqp
— ANI (@ANI) January 7, 2020
நிர்பயா கொலைவழக்கின் சமந்தப்பட்ட 4 குற்றவாளிகளுக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கிறது. ஜனவரி 22 ம் தேதி காலை 7 மணிக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது. குற்றவாளிகள் ஏதேனும் 14 நாட்களுக்குள் இதற்கான சட்டத் தீர்வுகளை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்பார் பட விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே டிக்கெட் கட்டணத்தை எவ்வாறு பங்கீடுவது தொடர்பாக கருத்து வேறுபாட்டு நிலவிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது . பாதிக்கும் மேற்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் இன்னும் தர்பார் படத்தை வாங்கவில்லை என்றும் கூறப்பட்கிறது.
What appears to be millions attending Soleimani’s funeral procession in Ahvaz, an Iranian city usually described by mainstream media as “restive”, and hence hardly a Soleimani stronghold. Trump doesn’t know what is awaiting him across the Middle East pic.twitter.com/axTonhi13n
— Amal Saad (@amalsaad_lb) January 5, 2020
கடந்த வாரம் யுஅமெரிக்கா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட காசெம் சுலேமானீயின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 35 பேர் கொல்லப்பட்டதாகவும், 48 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
விவாதங்ககளின் மூலம் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பெயர் பெற்ற இந்த பல்கலைக்கழகத்தில், வன்முறை ஒரு தீர்வாகாது என்று ஜே.என்.யூ துணை வேந்தர் மாமிடலா ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது , பல்கலைக்கழகத்திற்கு இயல்புநிலை திரும்புவதை உறுதி செய்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் நாங்கள் உற்று நோக்குகிறோம் என்றார். குளிர்கால செமஸ்டருக்கான பதிவு செயல்முறை மீண்டும் தொடங்கப்படும் என்றார். கடந்த காலத்தை மறந்து ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்குவோம் என்றும் தெரிவித்தார்.
மலேசியாவின் டிஎம்ஒய் கிரியேசன்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில், தர்பார் படத்தை கடந்த 9ம் தேதி மலேசியாவில் வெளியிட தடைவித்து தீர்ப்பு வந்துள்ளது. தர்பார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு கடனாக கொடுத்த பணத்தை திருப்பி தரமால் மலேசியாவில் படத்தை வெளியிடக் கூடாது என்று வழக்கில் கேட்டுக் கொண்டிருந்தார்.
#WATCH Clash between ABVP and NSUI workers in Ahmedabad, Police resorted to lathi charge to disperse the crowd. NSUI was protesting near ABVP officer over #JNUViolence when clash broke out. Around 10 people injured. (note: abusive language) #Gujarat pic.twitter.com/R7vvvYiit5
— ANI (@ANI) January 7, 2020
அகமதாபாத்தில் ஏபிவிபி மற்றும் என்எஸ்யுஐ பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலை கலைக்க போலீசார் லத்தி சார்ஜில் ஈடுபட்டனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஏபிவிபி அலுவலகம் அருகே என்எஸ்யுஐ ஆர்ப்பாட்டன் செய்த போது மோதல் ஆரம்பித்தது. இதில், சுமார் 10 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் மாலை அணிந்து வழிபாடு நடத்தும் காலம் இது என்பதால் திரளான பக்தர்கள் கூட்டம் ஐயப்பனை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது. இன்று 12 மணி நேரத்திற்கும் மேலாக பூஜைகள் தாமதம் ஆனதால் க்நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் நெரிசல் அதிகமாகி வருகிறது.
ஜே.என்.யுவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்றுள்ளது. தேச விரோத நடவடிக்கைகளின் மையமாக பல்கலைக்கழகம் விளங்கி வருகிறது என்றும் இது போன்ற நடவடிக்கைகளை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று அந்த அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி பேச்சு.
திருவண்ணாமலை ஜவ்வாது மலை ஒன்றியத்தின் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார் சுயேட்சை வேட்பாளர் காளி. அவரை தங்கள் கட்சிகளின் பக்கம் இழுக்க அதிமுக மற்றும் திமுக கட்சியினர் வீட்டு வாசலிலேயே காத்திருந்ததால் பரபரப்பு. இரு கட்சியினரும் கொலை செய்ய முயற்சி செய்வதாக காவல்துறையினரிடம் பரபரப்பு குற்றச்சாட்டு.
ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று மாதங்களாக எரியும் காட்டுத்தீயில் பல உயிரினங்கள் கருகி இறந்தது. தண்ணீருக்காக மனிதர்கள் வாழும் பகுதிக்கு விலங்குகள் வரத் துவங்கியுள்ளது. இது குறித்து பாமக தலைவர் ட்வீட் வெளியிட்டுள்ளார்
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ ஏற்படுவது இயல்பான ஒன்று தான். ஆனால், இம்முறை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு காட்டுத் தீ பெருகியிருப்பதற்கு முக்கியக் காரணம் புவிவெப்பமயமாதல் தான். அதைத் தடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இனியாவது உலகம் விழித்துக் கொள்ளட்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) January 7, 2020
தமிழக சட்டப்பேரவையில் இருந்து இன்று மீண்டும் வெளிநடப்பு செய்தது திமுக. இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பல்வேறு விசயங்கள் குறித்த அப்டேட்டினை உடனுக்குடன் பெற இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கினை விசாராணை செய்த நீதிபதிகள், இதுவரை அம்மாவட்டத்தில் எத்தனை கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது என்பது குறித்து முழுமையான விபரங்களுடன் பிப்ரவரி 10ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல்களில் முக்கிய பதவிகளுக்கு நடைபெற இருக்கும் மறைமுக தேர்தல் குறித்த சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
5 ஆயிரம் கால்நடைகளுக்கு மேல் உள்ள கிராமங்களில் 25 புதிய மருந்தகங்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்காக ரூ. 3.12 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கோபி மற்றும் உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அதற்காக ரூ. 2.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights